Transiting Sun: கடகத்தில் பால்காய்ச்சப்போகும் சூரியன்.. பணப்பொங்கலை ருசிக்கும் ராசிகள்
- Lord Sun: ஜூலை மாதத்தில் சந்திரனின் ராசியான கடகத்தில் ஏறும் சூரிய பகவானால் அண்டலோகமும் அதிர அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
- Lord Sun: ஜூலை மாதத்தில் சந்திரனின் ராசியான கடகத்தில் ஏறும் சூரிய பகவானால் அண்டலோகமும் அதிர அதிர்ஷ்டம்பெறப்போகும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
(2 / 7)
மேஷம்: சூரியன் கடகத்தில் பெயர்ச்சி ஆவது, மேஷ ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இதனால் கடக ராசியினர் தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றிபெறுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு புதியவேலை வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணைக்கு முழு ஆதரவு தருவீர்கள். கடந்த கால நண்பர்களிடம் நட்பினை மீட்டு எடுப்பது வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை வளர்ச்சியைக் கொடுக்கும்.
(3 / 7)
ரிஷபம்: கடகத்தில் சூரியன் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைத்து வருமானத்தை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பணத்திற்கான புதிய வழிகள் திறக்கும். முதலீட்டில் நல்ல வருமானத்தைப்பெறலாம். கடந்த காலத்தில் நிகழ்ந்த இழப்புகள் மறைந்து புதியமுறையில் வாழ்க்கை செழிக்கும்.
(4 / 7)
மிதுனம்: கடகத்தில் சூரியனின்பெயர்ச்சி, மிதுன ராசிக்காரர்கள் சுபமான தாக்கத்தால் பழைய பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். இது உங்களுக்கு முன்னேற்றம் மற்றும் லாபத்தின் நேரமாக இருக்கும். வசதியான வாழ்க்கை வாழ்வீர்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். முன்பு உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டவர்கள், தற்போது மனம்மாறி உங்களிடம் நட்பு பாராட்டுவார்கள்.
(5 / 7)
சிம்மம்: சிம்மத்தை ஆளும் கிரகம் சூரியன். இத்தகைய சூழ்நிலையில், கடக ராசியில் சூரியனின் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பொருளாதார முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் கிடைக்கும். தொழிலில் பெரிய அளவில் சாதனைப் படைக்க முடியும். உடல் நிலையில் இருந்து வந்த பாதிப்பு குறையும். தங்கள் பழைய தவறை உணர்ந்து மனம்மாறுவீர்கள்.
(6 / 7)
விருச்சிகம்: கடக ராசியில் சூரியப்பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் புதிய வேலை வாய்ப்புகளைப் பெறலாம். செலவுகள் குறையும். செல்வம் சேர்ப்பதில் வெற்றி காண்பீர்கள். பணவரவு அதிகரிக்கும். பிரிந்து இருந்த கணவன் - மனைவி சேர வாய்ப்புகள் உருவாகும். அப்படி சேரும்பட்சத்தில் விருச்சிக ராசியினர் மறுதாலி கட்டிக்கொள்வது மிகுந்த நன்மையைத் தரும்.
(7 / 7)
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்