தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Sun: மிதுனத்தில் இருந்து கடகத்துக்குள் ஏறும் சூரியன்.. கழுத்துவரை பணத்தை சம்பாதித்து கட்டி உருளப்போகும் ராசிகள்

Lord Sun: மிதுனத்தில் இருந்து கடகத்துக்குள் ஏறும் சூரியன்.. கழுத்துவரை பணத்தை சம்பாதித்து கட்டி உருளப்போகும் ராசிகள்

Jul 06, 2024 02:09 PM IST Marimuthu M
Jul 06, 2024 02:09 PM , IST

  • Lord Sun: மிதுனத்தில் இருந்து கடகத்துக்குள் ஏறும் சூரிய பகவானால் கழுத்துவரை பணத்தை சம்பாதித்து கட்டி உருளப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம். 

Sun Luck: வரும் ஜூலை 16ஆம் தேதி, சூரிய பகவான் ராசியை மாற்றப் போகிறார். இந்த நாளில் சூரிய பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசியில் நுழைகிறார். ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. சூரிய பகவான் அனைத்து கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படுகிறார். சூரிய பகவான் மங்களகரமாக இருக்கும்போது ஒருவரின் அதிர்ஷ்டம் உயரும். சூரிய பகவானின் ராசி மாற்றம் காரணமாக, சில ராசிகளின் அதிர்ஷ்டம் நிச்சயம் மாறும். சூரிய பகவானின் பெயர்ச்சியால் சில ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கிறது. சூரிய பகவானின் ராசி மாற்றம் காரணமாக எந்த ராசிக்காரர்களுக்கு பெரும்பலன் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோம்.

(1 / 6)

மேஷம்: சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கப்போவதால் மேஷ ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகின்றன. குறிப்பாக, மேஷ ராசியினர், உடல்நலம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபடுவார்கள். மதிப்பு, கௌரவம் உயர வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரம் வலுவாக இருக்கும். கல்வித்துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாகும். எதிரிகளை வெல்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். சனி பகவானின் கருணையினாலும், சூரிய பகவானின் அருளாசியாலும் வாழ்க்கையில் நிறைய மரியாதையைப் பெறுவீர்கள்.

(2 / 6)

மேஷம்: சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கப்போவதால் மேஷ ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கப்போகின்றன. குறிப்பாக, மேஷ ராசியினர், உடல்நலம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து விடுபடுவார்கள். மதிப்பு, கௌரவம் உயர வாய்ப்புகள் உண்டு. பொருளாதாரம் வலுவாக இருக்கும். கல்வித்துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாகும். எதிரிகளை வெல்வீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும். சனி பகவானின் கருணையினாலும், சூரிய பகவானின் அருளாசியாலும் வாழ்க்கையில் நிறைய மரியாதையைப் பெறுவீர்கள்.(Pixabay)

மிதுனம்: சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிக்கப் போவதால் மிதுன ராசியினருக்கு சுப பலன்கள் கிடைக்கப் போகின்றன. குறிப்பாக, கல்வித் துறையுடன் தொடர்புடைய மக்களுக்கு இந்த நேரம் ஒரு வரப்பிரசாதமாகும். இக்காலத்தில் மிதுனராசியினர் நன்கு படிப்பர். இந்த நேரத்தில் முதலீடு செய்வது நன்மை பயக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். வருமான அதிகரிப்பால் பணம் தொடர்பான பிரச்னைகளை சமாளிக்க முடியும். நீங்கள் உங்கள் மனைவியுடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடுவீர்கள். இது திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும்.  இந்த ராசிக்காரர்கள் செல்வந்தர்கள் ஆக வாய்ப்புண்டு. லக்ஷ்மி தேவியின் அருள் உண்டு. 

(3 / 6)

சிம்மம்:  சூரிய பகவான் கடக ராசியில் சஞ்சரிப்பதால் சிம்ம ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்கின்றன. இதனால், சிம்ம ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும். நீங்கள் செய்யும் பணி பொதுதளத்தில் பாராட்டப்படும். அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். சிம்ம ராசியினர் வேலை மற்றும் வியாபாரம் செய்ய உகந்த நேரமாகும். தேங்கி நின்ற பணிகளை முடிக்க முடியும். பணியிடத்தில் மரியாதை கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைய வாய்ப்புகள் உண்டு. 

(4 / 6)

விருச்சிகம்: சூரிய பகவான் கடக ராசியில் நுழைவதால் விருச்சிக ராசியினருக்கு நன்மையுண்டு. இதனால், விருச்சிக ராசியினர் குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தைச் செலவிடுவார்கள். புதிய வீடு, வாகனம் வாங்க முடியும்.  திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். நல்ல பலன் கிடைக்கும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் மங்களகரமானது என்று கூறலாம். பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது பொருளாதாரப் பக்கத்தை பலப்படுத்தும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடினமாக உழைத்தால், வேலையில் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

(5 / 6)

தனுசு: சூரிய பகவான் கடக ராசியில் பெயர்ச்சி அடைவதால் தனுசு ராசியினருக்கு நன்மை கிடைக்கலாம். தனுசு ராசியினர் இந்த காலத்தில் பொறுமையாக உழைத்து நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் அனைவரும் உங்களைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் லாபம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடுங்கள். நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம். மதிப்பு, கௌரவம் உயர வாய்ப்புகள் உண்டு. பண ஆதாயம் கிடைக்கும்.

(6 / 6)

மற்ற கேலரிக்கள்