Lunar Eclipse: சந்திர கிரகணத்தினால் நின்று வெல்லப்போகும் ராசிகள்; சொத்து வாங்கப்போவது உறுதி!
- Lunar Eclipse: சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியுடைய நிழல் சந்திரன் மீது பட்டு, சந்திரன் தெரியாமல் இருப்பதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்தும். இது சந்திர கிரகணம் எனப்படுகிறது.
- Lunar Eclipse: சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது, பூமியுடைய நிழல் சந்திரன் மீது பட்டு, சந்திரன் தெரியாமல் இருப்பதுபோன்ற பிம்பத்தை ஏற்படுத்தும். இது சந்திர கிரகணம் எனப்படுகிறது.
(1 / 6)
ஒரு வருடத்தில் இரண்டு முறை சந்திர கிரகணம் உண்டாகும்.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் வரும் மார்ச் 25ஆம் தேதி நிகழயிருக்கிறது. இந்த நாளில் தான், ஹோலி என்னும் வடநாட்டினர் கொண்டாடும் நிகழ்ச்சியும் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.
(2 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சந்திர கிரகணத்தின் தாக்கம், சில ராசியினர் மீது அதிகளவில் தாக்கத்தை உண்டு செய்யும். அப்படி, சில ராசியினருக்கு நிதி நிலை படிப்படியாக உயர வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு நிதி நிலை நன்மைபெறும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.
(3 / 6)
மேஷம்: மேஷ ராசியினருக்கு சந்திர கிரகணம் மன நிம்மதியைத் தரும். இந்த காலகட்டத்தில் உங்களது கஷ்டங்களுக்குப் பலன் கிடைக்கும். முன்பே நீங்கள் உழைத்த உழைப்புக்குத் தற்போது பலன் நிச்சயம். இந்த காலத்தில் உங்களது செயல்பாடுகள் வெற்றியை அறுவடை செய்யும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டிலுள்ள இளையவர்களால் மகிழ்வு செய்திகளைப் பெறுவீர்கள்.
(4 / 6)
கடகம்: கடக ராசியினருக்கு சந்திர கிரகணம், அற்புதமான பலன்களைத் தருகிறது. இந்த காலகட்டத்தில் வண்டி, வீட்டடி மனை, வீடு வாங்க நினைத்தால் நன்மை கிடைக்கும், பிற்காலத்தில் நல்ல ஆதாயம் கிட்டும். உங்கள் பணியிடத்தில் மன நிம்மதி பெறுவீர்கள். இக்கால கட்டத்தில் பணி தொடர்பான பயணத்தை மேற்கொள்வீர்கள். வங்கிகளில் சேமிப்பினை அதிகப்படுத்துவீர்கள். உங்களது பணியினால் வாடிக்கையாளர்களும் முதலாளியும் மகிழ்ச்சி அடைவர்.
(5 / 6)
கன்னி: இந்த ராசியினருக்கு சந்திர கிரகணம் மகிழ்ச்சியளிக்கக் கூடியது. நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டே இருப்பவர்களுக்கு நல்ல வேலை இந்த காலத்தில் கிடைக்கும். உங்களின் தலைமைப் பண்பு மேம்படும். இனிமையாகப் பேசுவீர்கள். உங்கள் தாம்பத்திய துணை மற்றும் உங்கள் தாம்பத்தியதுணை வழியில் நன்மைகளைப் பெறுவீர்கள். உங்கள் பார்ட்னர்களால் நன்மை கிடைக்கும்.
(6 / 6)
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
மற்ற கேலரிக்கள்