தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Zinc Deficiency : உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால் என்ன ஆகிறது பாருங்க! கவனம் கட்டாயம் தேவை!

Zinc Deficiency : உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால் என்ன ஆகிறது பாருங்க! கவனம் கட்டாயம் தேவை!

Jun 09, 2024 07:00 AM IST Priyadarshini R
Jun 09, 2024 07:00 AM , IST

  • Zinc Deficiency : உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால் என்ன ஆகிறது பாருங்கள். மக்கள் பெரும்பாலும் தங்கள் உடலில் சிங்க் சத்து குறைபாட்டால் ஏற்படும் இந்த பிரச்னைகள் குறித்து கவனிக்க மாட்டார்கள்.

நாளொன்றுக்கு நமது உடலுக்கு 8 முதல் 10 மில்லி கிராம் வரை சிங்க் சத்துக்கள் தேவைப்படும்நமது உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு சிங்க் சத்துக்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது குறைவதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது பாருங்கள்.

(1 / 8)

நாளொன்றுக்கு நமது உடலுக்கு 8 முதல் 10 மில்லி கிராம் வரை சிங்க் சத்துக்கள் தேவைப்படும்நமது உடலின் பல்வேறு இயக்கங்களுக்கு சிங்க் சத்துக்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது குறைவதால், பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது பாருங்கள்.(Unsplash)

அடிக்கடி தொற்றுகள்உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைபாடு ஏற்பட்டால், அது உங்களுக்கு அடிக்கடி தொற்றுக்களை ஏற்படுத்தும். இதனால் உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழக்கும். உங்கள் நோய் எதிர்ப்பு செல்கள் திறம்பட செயல்பட சிங்க் சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அது குறைந்தால், உடல் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுக்களை எதிர்த்து போராட சிரமப்படும்.

(2 / 8)

காயங்கள் ஆறுவதில் தாமதம்உங்கள் உடலுக்கு சிங்க் சத்துக்கள் மிகவும் அவசியமானது. அவைதான் உடலில் செல்களின் பகுப்பு மற்றும் புரதச்சத்துக்கள் உருவாக முக்கிய காரணமாக உள்ளது. இவைதான் காயங்களை விரைந்து குணமாக்கும் தன்மை கொண்டது. இந்த சத்து குறைவது, காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுக்கவைக்கும். காயங்களால் தொற்றுகள் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும்.

(3 / 8)

பசியின்மைஉங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால், அது உங்களின் சுவை மற்றும் நறுமண அரும்புகளை பாதிக்கும், இதனால் உங்களுக்கு பசி ஏற்படாது. மேலும் இது ஒரு சுழற்சிபோல் உங்களுக்கு ஏற்படும். பசியில்லாவிட்டால் நீங்கள் அதிகம் சாப்பிடமாட்டீர்கள். விளைவு மீண்டும் சிங்க் உட்கொள்ளும் அளவு குறையும்.

(4 / 8)

பசியின்மைஉங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால், அது உங்களின் சுவை மற்றும் நறுமண அரும்புகளை பாதிக்கும், இதனால் உங்களுக்கு பசி ஏற்படாது. மேலும் இது ஒரு சுழற்சிபோல் உங்களுக்கு ஏற்படும். பசியில்லாவிட்டால் நீங்கள் அதிகம் சாப்பிடமாட்டீர்கள். விளைவு மீண்டும் சிங்க் உட்கொள்ளும் அளவு குறையும்.(Unsplash)

முடி உதிர்வுஉங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால், அது தலைமுடி உதிர்வுக்கு வழிவகுத்து, தலைமுடி அடர்த்தியைக் குறைக்கும். சிங்க் சத்துக்கள் டிஎன்ஏ மற்றும் ஆர்என்ஏ உற்பத்திக்கு மிகவும் அவசியம். இது தலைமுடி ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். போதிய சிங்க் சத்துக்கள் இல்லாவிட்டால், உங்களின் தலைமுடி வளர்ச்சி பாதிக்கப்படும். முடி உதிர்வு அதிகரிக்கும்.

(5 / 8)

சரும பிரச்னைகளைசருமத்தில் ஏற்படும் ரேஷஸ்கள், முகப்பருக்கள் மற்றும் மற்ற சரும கோளாறுகளும், உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால் ஏற்படும். உங்கள் உடலின் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க சிங்க் சத்து மிக முக்கியமானது. இது குறையும்போது, உங்கள் உடலின் வழக்கமான இயக்கம் தடைபடும். உடல் செல்கள் சேதமடையும்.

(6 / 8)

மனநிலை மாற்றம்உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால், அது உங்கள் மூளையின் இயக்கத்தை பாதிக்கும். இதனால் உங்களுக்கு மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அவை மனஅழுத்தம், பயம் மற்றும் பதற்றமாக இருக்கும். சிங்க் சத்துக்கள், நரம்பியல் இயக்கம் மற்றும் ஹார்மோன்கள் சமநிலையில் தொடர்புடையது, இது உங்கள் மனஆரோக்கியத்துக்கு சிறந்தது.

(7 / 8)

நினைவாற்றல் இழப்புசிங்க் சத்துக்கள் மூளை ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியம். இது நினைவாற்றல் இயக்கத்துடனும் தொடர்புடையது. உங்கள் உடலில் சிங்க் சத்துக்கள் குறைந்தால், அது உங்களுக்கு நினைவாற்றல் பிரச்னைகளை ஏற்படுத்தும். மேலும் கவனித்தல் மற்றும் கற்றல் குறைபாடு என ஒட்டுமொத்த மூளையின் திறன்களையும் குறைக்கும். இதன்மூலம் உங்கள் வாழ்க்கையின் தரம் பாதிக்கப்படும்.

(8 / 8)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்