Nenjathai Killathe: ‘மாப்பிள்ளை பார்க்க வந்த கௌதம்.. பாட்டி சொன்ன வார்த்தையால் ஷாக்.. நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்!
Nenjathai Killathe: கௌதம் குடும்பத்தினர் மதுமிதா வீட்டிற்கு வர அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். மதுவையும் அவளது அம்மாவையும் பார்த்ததும் கௌதமிற்கு இரண்டு பேரும் சேர்ந்து சண்டை போட்ட விஷயங்கள் நினைவுக்கு வர அவன் டிஸ்டர்ப் ஆகிறான். - நெஞ்சத்தை கிள்ளாதே அப்டேட்
(1 / 4)
மாப்பிள்ளை பார்க்க வந்த கௌதம் குடும்பம்.. பாட்டி சொன்ன வார்த்தையால் ஷாக் - நெஞ்சத்தை கிள்ளாதே இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நெஞ்சத்தை கிள்ளாதே. இந்த சீரியலின் கடந்த வெள்ளிக்கிழமை எபிசோடில்கௌதம் மற்றும் மதுமிதா ஹோட்டலில் சந்தித்து கொண்ட நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
(2 / 4)
அதாவது, மதுமிதா கௌதமை வீட்டிற்கு அழைத்து அவனும் வருவதாக சொல்ல மது இந்த விஷயத்தை வீட்டிற்கு தெரியப்படுத்தியதும் அவளது அம்மா சந்தோசப்படுகிறாள். அடுத்து மது வீட்டிற்கு வந்ததும் அவளது அம்மாவும் அவளும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்கின்றனர்.மறுபக்கம் மாயா மாப்பிள்ளை வீட்டிற்கு வருகிறேன் என்று தயாராக சகுந்தலா வேண்டாம் என்று திட்ட கௌதம் அவளும் வரட்டும் என்று அனுமதி வாங்கி கொடுக்கிறாள்.
(3 / 4)
இதையடுத்து கௌதம் குடும்பத்தினர் மதுமிதா வீட்டிற்கு வர அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்கின்றனர். மதுவையும் அவளது அம்மாவையும் பார்த்ததும் கௌதமிற்கு இரண்டு பேரும் சேர்ந்து சண்டை போட்ட விஷயங்கள் நினைவுக்கு வர அவன் டிஸ்டர்ப் ஆகிறான்.
(4 / 4)
பிறகு எல்லாரும் லிப்டில் மேலே செல்ல, மதுவும் கௌதமும் இடமில்லாமல் காத்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த பாட்டி, இவன் தான் உன்னை பொண்ணு பார்க்க வந்திருக்கானா என்று கேட்க, மது இல்லை என்று சொல்ல வருவதை கேட்காமல், அந்த பாட்டி நகர்ந்து சென்று விடுகிறார். இதையடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
மற்ற கேலரிக்கள்