Karthigai Deepam: ‘ரம்யாவிற்கு மாப்பிள்ளை ரெடி.. காபியில் ட்விஸ்ட் வைத்த ரமேஷ்!’ -கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: அபிராமி ஐஸ்வர்யாவை பிடித்து திட்டி விட்டாள். ரம்யாவை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகை தர உள்ள நிலையில், மீனாட்சி, தீபா மைதிலி ஆகியோர் ரம்யாவை தயார் செய்கின்றனர். - கார்த்திகை தீபம் அப்டேட்!
(1 / 4)
Karthigai Deepam: ‘ரம்யாவிற்கு மாப்பிள்ளை ரெடி.. காபியில் ட்விஸ்ட் வைத்த ரமேஷ்!’ -கார்த்திகை தீபம் அப்டேட்!
(2 / 4)
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ஐஸ்வர்யா தீபாவிடம் இந்த கல்யாணம் நடந்தால், அபிராமி உயிருக்கு ஆபத்து என்ற உண்மையை உடைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஐஸ்வர்யா சொன்னதை கேட்டு அதிர்ச்சியான தீபா நேராக அபிராமியிடம் வந்து, இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறாள். அபிராமி அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. உங்க அப்பா அம்மாவையே கூப்பிட்டு கேட்கலாம் என்று சொல்ல, அவர்கள் அங்கு வருகிறார்கள். அவர்கள் நாங்க அப்படி எதுவும் சொல்லலையே என்று மாற்றி சொல்கின்றனர். மேலும் இந்த கல்யாணம் நல்லபடியா நடக்கணும்னு தான் பேசிட்டு இருந்ததா சொல்ல தீபா ஐஸ்வர்யாவை இனிமேல் இன்னொருமுறை இப்படி ஏதாவது பண்ணீங்க என்னை வேற மாதிரி பார்ப்பீங்க என்று எச்சரிக்கிறாள்.
(3 / 4)
அபிராமி ஐஸ்வர்யாவை பிடித்து திட்டி விட்டாள். ரம்யாவை பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகை தர உள்ள நிலையில், மீனாட்சி, தீபா மைதிலி ஆகியோர் ரம்யாவை தயார் செய்கின்றனர். மாப்பிள்ளை ரமேஷ் வீட்டுக்கு வர, ரம்யாவை காபி கொண்டு போய் கொடுக்க சொல்ல, அவள் நான் ஒரு பெரிய கம்பெனியோட முதலாளி; நான் எப்படி இதெல்லாம் செய்வேன் என்று சொல்கிறாள்.
(4 / 4)
தீபா இதெல்லாம் காலம் காலமா இருந்துட்டு வர வழக்கம். அதை எல்லாம் நெனச்சதும் மாத்திட முடியாது என்று சொல்லி ரம்யாவிடம் காபியை கொடுத்து அனுப்புகிறாள். பிறகு ரம்யாவும் காபி கொண்டு வந்து கொடுக்க, ரம்யாவின் அப்பா மாப்பிள்ளையை பிடித்திருப்பதாக சொல்கிறாள். ரம்யா தனக்கும் பிடித்திருப்பதாக சொல்ல ரமேஷ் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லுவான் என ரம்யா எதிர்பார்க்கிறாள். ஆனால் மாப்பிள்ளையாக வந்த ரமேஷ் எனக்கும் பெண்ணை பிடித்திருக்கிறது என்று சொல்லி விட ரம்யா கடுப்பாகிறாள். இதைத் தொடர்ந்து இரு வீட்டாரும் சம்மதம் என்று சொல்லி தட்டை மாற்றிக் கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
மற்ற கேலரிக்கள்