தமிழ் செய்திகள்  /  புகைப்பட  /  Karthigai Deepam: கார்த்திக்கிற்கே விபூதியா?.. டம்மியா ஃபேக் ரம்யா.. அலறிய ஓடிய கார் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: கார்த்திக்கிற்கே விபூதியா?.. டம்மியா ஃபேக் ரம்யா.. அலறிய ஓடிய கார் - கார்த்திகை தீபம் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 14, 2024 04:41 PM IST

Karthigai deepam: “ரம்யா காரில் இருந்து கிராண்டான துணியில் இறங்கி நடந்து வருகிறாள். ஆச்சரியமாக, அதே ஸ்டைலில், அதே மாதிரியான துணியில் இன்னொரு பெண் கூடவே நடந்து வருகிறாள்.” - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: கார்த்திக்கிற்கே விபூதியா?.. டம்மியா ஃபேக் ரம்யா.. 

அலறிய ஓடிய கார் - கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்திக்கிற்கே விபூதியா?.. டம்மியா ஃபேக் ரம்யா.. அலறிய ஓடிய கார் - கார்த்திகை தீபம் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், ரம்யா தீபாவிடம் ஃபங்ஷனுக்கு வந்து கொண்டிருப்பதாக பொய் சொல்லிய நிலையில், இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் 

கார்த்திக், தீபா ஜோடியாக சேர்ந்து, போட்டோவுக்கு போஸ் கொடுக்க, அதே போல் அபிராமியும் அருணாச்சலமும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கின்றனர். இந்த நேரத்தில் ரம்யா காரில் இருந்து கிராண்டான துணியில் இறங்கி நடந்து வருகிறாள். ஆச்சரியமாக, அதே ஸ்டைலில், அதே மாதிரியான துணியில் இன்னொரு பெண் கூடவே நடந்து வருகிறாள். 

கையில் டாட்டூ இல்லாத நிலையில், இது அம்மு இல்லை என்பதை கார்த்திக் புரிந்து கொள்கிறான்.

அவளிடம் ரம்யா நீ கார்த்தியிடம் போய், நான்தான் அம்முனு பேசு என்று சொல்லி அனுப்புகிறாள். அத்துடன், எக்காரணத்தை கொண்டும் மாட்டிக்காத என்றும் எச்சரித்து அனுப்புகிறாள். பிறகு, ரம்யா தீபாவை சந்தித்து, நான் சொன்ன மாதிரியே வந்துட்டேன் என்று பேசிக் கொண்டிருக்க, அதேபோல் மறுபக்கம் அம்முவாக நடிக்க வந்த பெண் கார்த்தியிடம் சென்று, நான்தான் அம்மு என்று சொல்லி தன்னை அறிமுகம் செய்து கொண்டு பேசுகிறாள். 

ஆனால், அவளது கையில் டாட்டூ இல்லாத நிலையில், இது அம்மு இல்லை என்பதை கார்த்திக் புரிந்து கொள்கிறான். இருந்தாலும், எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல், நடந்து கொள்ளும் கார்த்திக், வாங்க தீபாவை போய் பாத்துட்டு வரலாம் என்று சொல்லி, அந்த பெண்ணை கூப்பிட அவள் அதிர்ச்சி அடைகிறாள்.

ட்ரெண்டிங் செய்திகள்

மண்டபம் மாறி வந்துட்டேன் என்று சொல்லி எஸ்கேப்

இந்த நிலையில், நான் அம்மு கிடையாது, தீபாவோட ஃப்ரண்டும் கிடையாது. மண்டபம் மாறி வந்துட்டேன் என்று சொல்லி, எஸ்கேப் ஆகி விடுகிறாள். இதை தூரத்தில் இருந்து கவனித்த ரம்யாவும் தீபாவுக்கு தெரியாமல் எஸ்கேப் ஆகிவிட, தீபா அம்முவை தேடி அவளுக்கு போன் செய்கிறாள். ஆனால், ரம்யா போனை எடுக்காமல் இருக்கிறாள். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

மீனாட்சி ஆகியோர் அபிராமியை அலங்காரம் செய்ய ரெடியாகினர். அபிராமியை பார்த்து யங்காக இருப்பதாகவும் கூடவே மாமாவுக்கு தான் கொஞ்சம் வயசான மாதிரி இருக்கும் என்று கலாய்த்தனர். ரியா நான் ஆனந்தத்துடன் சேர்ந்து, அபிராமி அருணாச்சலம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவேன் என்று சவால் விட்டு இருக்கேன், அதனால் இந்த இடத்தை விட்டு போக கூடாது என்று உறுதியாக இருந்தாள்.

பிறகு அபிராமிக்கு மேக்கப் போட ஒரு பியூட்டிஷியன் வர கார்த்திக் என் அம்மாவுக்கு, நானே என் கையால் மேக்கப் போட்டு விடுறேன் என்று சொல்லி,அவனே அபிராமிக்கு மேக்கப் போட்டு விட்டான். இதையடுத்து மது, ரியாவுக்கு போன் செய்து, நான் உன் பெயரை எழுதி வச்சிட்டு தற்கொலை பண்ணிக்க போறேன் என்று சொன்னாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன: