தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Worshiping The Deity On Masi Magam Tirunala Will Bring Many Benefits

Masi Magam 2024: மாசிமகத் திருநாளில் இந்த தெய்வத்தை வழிபட்டால் போதும்!

Feb 24, 2024 12:11 PM IST Suriyakumar Jayabalan
Feb 24, 2024 12:11 PM , IST

  • Masi Magam 2024: மாசி மகம் திருநாளில் தெய்வ வழிபாடு பல நன்மைகளை உண்டாக்கும்.

மாசி மகத்திருநாள் இன்று வெகு விமர்சையாக தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு திருநாளும் ஒவ்வொரு தெய்வத்திற்குரிய நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. தைப்பூசம் முருகனுக்கு உரிய திருநாளாகவும், நவராத்திரி சிவபெருமானுக்குரிய திருநாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

(1 / 7)

அந்த வகையில் இந்த மாசிமகத் திருநாளில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த திருநாளில் எந்த தெய்வத்தை வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம். 

(2 / 7)

மாசிமகத் திருநாளில் கும்பகோணத்தில் உள்ள மகாமக குளத்தில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகும். அங்கு செல்ல முடியாதவர்கள் அருகில் கோயில்களில் இருக்கக்கூடிய குளம் அருகில் இருக்கக்கூடிய நீர் நிலைகளில் புனித நீராடி பலன்களை பெறலாம். இந்த திருநாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தால் ஏழேழு ஜென்ம பாவங்கள் நீங்கும் என கூறப்படுகிறது. 

(3 / 7)

சிவன் வழிபாடு: சிவபெருமான் கோயில்களில் மாசி மாத திருநாளில் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். சிவபெருமான் இந்த திருநாளில் வருண பகவானுக்கு சாப விமோசனம் கொடுத்ததால் இன்று சிவபெருமானை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

(4 / 7)

முருகப்பெருமான்: பிரணவ மந்திரத்தின் பொருளை சிவபெருமானுக்கு முருகப்பெருமான் எடுத்துரைத்த திருநாளாக இந்த மாசி மகத் திருநாள் விளங்கி வருகிறது. இந்த நாளில் முருக பெருமானை வழிபட்டால் அனைத்து விதமான பலன்களும் கிடைக்கும் என நம்பப்படுகிறது.  

(5 / 7)

மகாவிஷ்ணு: மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் வராக அவதாரம் எடுத்த திருநாளாக இந்த மாசி மகத்திருநாள் விளங்கி வருகின்றது. இந்த திருநாளில் பெருமாளை சென்று வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என நம்பப்படுகிறது.

(6 / 7)

பார்வதி தேவி: மாசி மாதத்தில் மக நட்சத்திரத்தில் தட்சன் மகள் தாட்சாயினியாக பிறந்தார் அதனால் இந்த திருநாள் மிகவும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்த திருநாளில் பெண்கள் விரதம் இருந்து வழிபட்டால் அனைத்து வித சிக்கல்களும் விலகும் என நம்பப்படுகிறது.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்