47 விநாடிகள் மட்டும் நீடிக்குமே விமான பயணம்.. உலகின் மிக குறுகிய விமான பயணம்.. எங்கு உள்ளது தெரியுமா?
- வானில் வெறும் 47 விநாடிகள் மட்டுமே பறக்கும் விமானம் அதன் பிறகு தரையிறங்குகிறது. பயணிகள் தங்கள் இலக்கை அடைவது இப்படித்தான். சுவாரஸ்யம் மிக்க இந்த குறுகிய விமானப் பாதை எங்கே உள்ளது என்பதையும் அதன் பின்னணியும் பார்க்கலாம்
- வானில் வெறும் 47 விநாடிகள் மட்டுமே பறக்கும் விமானம் அதன் பிறகு தரையிறங்குகிறது. பயணிகள் தங்கள் இலக்கை அடைவது இப்படித்தான். சுவாரஸ்யம் மிக்க இந்த குறுகிய விமானப் பாதை எங்கே உள்ளது என்பதையும் அதன் பின்னணியும் பார்க்கலாம்
(1 / 5)
விமானத்தில் பறக்க வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால் பறக்கும் அனுபவம் தொடங்கி அதை முழுமையாக அனுபவிப்பதற்கோ அல்லது உணர்வதற்கோ முன்பே முடிவடைந்தால் என்ன செய்வது? பலர் சோகமாக உணரலாம். உலக அளவில் குறுகிய குறுகிய தூரமே செல்லக்கூடிய விமான பாதைகள் ஏராளமாக உள்ளன. அந்த வகையில் வெறும் 47 விநாடிகளே நீடிக்ககூடிய குறுகிய தூர விமான பாதை பற்றி தெரிந்து கொள்ளலாம்
(2 / 5)
இந்தப் பாதை ஸ்காட்லாந்தில் உள்ளது. ஸ்காட்டிஷ் தீவான வெஸ்ட்ரேயிலிருந்து, பாப்பா வெஸ்ட்ரே வரை நீண்டுள்ளது. ஆனால் விமானத்தில் ஏறிய பிறகு, இந்த வழியில் விமானத்திலிருந்து இறங்க நீங்கள் அவசரப்பட வேண்டும். ஏனெனில் விமானம் 1 நிமிடம் 12 வினாடிகளில் அதன் இலக்கை அடைகிறது. வானிலை நன்றாக இருந்தால், வெறும் 47 விநாடிகளில் இலக்கை அடைந்துவிடும்
(3 / 5)
லோகன் ஏர் என்ற ஸ்காட்டிஷ் நிறுவனம் இந்த விமான சேவையை வழங்குகிறது. இந்த சேவை வாரத்தில் ஆறு நாட்கள் கிடைக்கிறது. ஆனால் 47 வினாடிகள் மட்டுமே இருக்ககூடிய இந்த விமான பயனத்தை குடிமக்கள் ஏன் விரும்புகிறார்கள் என்பதற்கு வேடிக்கையான நகைச்சுவை பின்னணியும் உள்ளது
(4 / 5)
ஸ்காட்லாந்தின் சிறிய தீவுகளுக்கு இடையே ஒரு பெரிய நீர்நிலை உள்ளது. இந்தப் பரந்த நீர்நிலையைக் கடக்க, நீங்கள் படகு அல்லது கப்பலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த பயண முறையில் தீவுகளுக்கு இடையே செல்ல நீண்ட நேரம் எடுக்கும். குறிப்பாக ஸ்காட்டிஷ் தீவான வெஸ்ட்ரேயிலிருந்து பாப்பா வெஸ்ட்ரே வரையில் படகில் செல்லும் நேரமானது சற்று கூடுதலாகவே இருக்கும்
(5 / 5)
எனவே இந்த இரு பகுதிகளுக்கும் இடையே விமான சேவையை நீங்கள் எடுத்துக் கொண்டால், சில மணி நேரம் பயணமானது சில விநாடிகளாக குறைகிறது. இந்த வழித்தடத்தில் முதன்முதலில் விமான சேவை 1967இல் தொடங்கப்பட்டது. அப்போதிருந்து, இந்த வழித்தடத்தில் வழக்கமான சேவை தொடர்கிறது. பல தினசரி பயணிகள் இந்த விமான சேவையை வேலைக்காகப் பயன்படுத்துகின்றனர்
மற்ற கேலரிக்கள்