World Wetlands Day: உலக சதுப்பு நில தினம் இன்று.. முக்கியத்துவம் மற்றும் வரலாறு என்ன?
- World Wetlands Day 2024: உலக சதுப்பு நில தினம் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் பற்றி மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் தினமாகும்.
- World Wetlands Day 2024: உலக சதுப்பு நில தினம் (World Wetlands Day) என்பது சதுப்பு நிலங்களின் முக்கியத்துவம் பற்றி மக்கள் அறிந்து கொள்ள கொண்டாடப்படும் தினமாகும்.
(1 / 8)
உலக சதுப்பு நில தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 02 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கியத்துவம் மற்றும் அதன் வரலாறு குறித்து அறிந்துகொள்வோம்.
(2 / 8)
ஈர நிலம் என்னும் சதுப்பு நிலம் என்பது ஆண்டு முழுவதும் நீர் நிற்கும் அல்லது 6 மாதங்கள் தாழ்ந்த நிலங்களில் இயற்கையாகவே நீர் நிற்கும் நீர் சார்ந்த நிலப்பகுதி. ஈர நிலங்கள் உயிரினங்களின் பல்லுயிர் தன்மையை கொண்டிருப்பதால் இந்நிலங்கள் பூமியின் 'பச்சை நுரையீரல்' எனப்படும்.
(3 / 8)
இயற்கையின் கொடையான ஈர நிலம் என்னும் சதுப்பு நிலம் நமக்கு பல பலன்களைத் தருகின்றன. அரிய வகை பறவைகள் மற்றும் விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூச்சிகளுக்கு புகலிடமாகவும் திகழ்கிறது. கடல் அலைகளின் கோரத் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. கடல்கோள் என்னும் சுனாமி அலைகளை தடுக்கிறது. கடல் நீர் உட்புகாமல் தடுக்கிறது. வெள்ள நீரை உள்வாங்கி வெள்ள சேதத்தை தடுக்கிறது.
(4 / 8)
1971ஆம் ஆண்டு, ஈரான் நாட்டில் உள்ள ராம்சர் (Ramsar) எனும் நகரில் உலகளாவிய சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் “ராம்சார் ஒப்பந்தம்” கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் ஈர நிலங்களின் தன்மையை அறிவார்ந்த பயன்பாட்டின் மூலம் அதனுடைய சூழலியல் தன்மைகெடாமல் நீடிக்கச் செய்வதாகும்.
(5 / 8)
ராம்சார் ஒப்பந்தம் கையெழுத்தான பிப்ரவரி 2ஆம் தேதியை குறிக்கும் விதமாகவே, இந்நாளில் ‘உலக சதுப்பு நில தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
(6 / 8)
ஒவ்வொரு ஆண்டும், மனித உயிர்களுக்கும் கிரகத்திற்கும் ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலக சதுப்பு நில தினம் அனுசரிக்கப்படுகிறது.
(7 / 8)
ராம்சர் அமைப்பில் இந்தியா உட்பட 161 நாடுகள் உள்ளன. உலகின் சுற்றுசூழல் முக்கியத்துவம் வாய்ந்த 1,950 சதுப்பு நிலங்கள் பட்டியலிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் 25 சதுப்பு நிலங்கள் தகுதி வாய்ந்தவையாகும். அதில் தமிழகத்தில் கோடியக்கரை வன உயிரிகள் சரணாலயம், பழவேற்காடு ஆகியவை அடங்கும்.
(8 / 8)
நமது உடலை எப்படி சுத்தப்படுத்த சிறுநீரகங்கள் மிக முக்கியமானவையாக இருக்கிறதோ? அதேபோல் பூமியின் சிறுநீரகங்களாக சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. சதுப்பு நிலங்கள் பூமிக்கு ஆற்றும் முக்கிய பங்கு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சதுப்பு நிலத்தின் முக்கியத்தும் குறித்து மக்கள் அறிந்து கொள்ளவதும் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
மற்ற கேலரிக்கள்