World Sleep Day 2023: அடேங்கப்பா! தூக்கத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்கிறதா!
தூக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக, தூக்கத்தின் தாக்கத்தால் ஏற்படும் உடல், மனம் மற்றும் உணர்வு ரீதியான பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவதே உலக உறக்க நாளின் நோக்கமாக உள்ளது.
(1 / 10)
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு நாள் தூக்கத்தால் கழிகிறது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? நாளொன்றுக்கு ஒரு குறைந்தது 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால் அவர் தனது வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு தூங்குகிறார் என்று அர்த்தம் (Freepik)
(2 / 10)
ஆழ்ந்த தூக்கத்தின்போது ஏற்படும் தெளிவான கனவுகளை (vivid dreams) மட்டும் கனவுகள் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் தூங்கினாலே பல்வேறு கனவுகள் தோன்றவதும், பின்னர் அவர் மறப்பதும் இயல்பானதுதான்(Unsplash)
(3 / 10)
நாள்பட்ட தூக்கமின்மை பிரச்னைகளால் அவதிப்படுபவர் உடல் பருமன், நீரழிவு, இதய நோய், மனஅழுத்தம் போன்ற பல்வேறு உடல நல பாதிப்புகளுக்கு உள்ளாவார்கள்(Unsplash)
(4 / 10)
நமது உடலில் இயற்கையாக இயங்கும் கடிகாரம் உள்ளது. அதை சர்க்காடியன் ரிதம் என்கிறார்கள். இவைதான் நமது தூக்கம், விழிப்பு சுழற்சியை சீராக்குகிறது. ஒளிவெளிப்பாடு, உணவு பழக்கம், உடல் ரீதியான செயல்பாடு ஆகியவற்றால் இந்த சுழற்சி பாதிப்புக்கு உள்ளாகிறது(File Photo (Shutterstock))
(5 / 10)
எலெக்ட்ரானிக் சாதனங்களான ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களில் இருந்து வெளியேறும் நீள நிற ஒளி, மெலடோனின் என்ற தூக்க உணர்வை வெளிப்படுத்தும் ஹார்மோன்களை கட்டுப்படுத்துகிறது. இதனால் தூக்கம் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது(Pexels)
(6 / 10)
தூங்காமல் இருப்பது பற்றி யாரும் எவ்விதமான பரிந்துரைகளும் செய்ய மாட்டார்கள். அப்படி ஒரு முயற்சியை யாரும் தப்பி தவறிகூட எடுக்க வேண்டாம். அதிக நேரம் தூங்காமல் இருக்கும் உலக சாதனையாக 11 நாள்கள் வரை தூங்காமல் இருந்தது உள்ளது(Pixabay)
(7 / 10)
தூக்கத்தின்போது குறட்டை விடுவது தீங்கற்றதாக இருந்தாலும், அது மூச்சுதிணறல் ஏற்படுவதற்கான அறிகுறி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தூக்கத்தின்போது குறட்டை விடுவது சுவாசிப்பதை இடைநிறுத்த வழிவகை செய்கிறது. இதன் காரணமாக சோர்வு, உயர் ரத்த அழுத்தம், பிற உடல்நல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது(File Photo (Shutterstock))
(8 / 10)
பொதுவாக நல்ல தூக்கம் என்பது இரவு நேரத்தில் 7 முதல் 9 மணி நேரத்துக்கு இடையில் இருக்க வேண்டும். ஒவ்வொருவரின் வயதுக்கு ஏற்ப இந்த தூக்கத்தின் நேரமானது சற்று மாறுபடலாம்(File Photo (Shutterstock))
(9 / 10)
குப்புறபடுத்து வயிற்றுக்கு அழுத்தம் கொடுத்து தூங்குவதன் மூலம் கழுத்து மற்றும் முதகு வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். நீங்கள் அவ்வாறு படுப்பதை வசதியாக உணர்ந்தாலும், உங்கள் கழுத்து, முதுகு தண்டுவாடத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக அந்த பாகங்களில் அசெளகரிய நிலை ஏற்படாலாம்.(Unsplash)
(10 / 10)
குட்டி தூக்கம் உங்களை புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது. பகல் நேரத்தில் கொஞ்சம் சோர்வாகவும், தூக்கம் வருவது போன்று உணர்வு ஏற்பட்டால், 20 முதல் 30 நிமிடங்கள் வரை சிறிய தூக்கம் தூங்குவது கடைப்பிடித்தால் புத்துணர்வாக உணர்வதுடன், உங்கள் உற்பத்தி திறனை அதிகரிக்கலாம்(Freepik)
மற்ற கேலரிக்கள்