World Obesity Day: குழந்தைகள் உடல் பருமன் ஆவதை தடுத்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை கடைப்பிடிக்க செய்ய வேண்டிய விஷயங்கள்
- குழந்தை பருவத்திலேயே உடல் பருமன் ஆவதை தடுக்க ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தல், தொடர்ச்சியாக உடல் இயக்க செயல்பாடுகளை வெளிப்படுத்துதல், உட்கார்ந்தவாறு செய்யும் நடத்தைகளை குறைத்தல் போன்ற சில விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சாத்தியமாகிறது
- குழந்தை பருவத்திலேயே உடல் பருமன் ஆவதை தடுக்க ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைப்பிடித்தல், தொடர்ச்சியாக உடல் இயக்க செயல்பாடுகளை வெளிப்படுத்துதல், உட்கார்ந்தவாறு செய்யும் நடத்தைகளை குறைத்தல் போன்ற சில விஷயங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சாத்தியமாகிறது
(1 / 7)
உலக பருமன் நாள் மார்ச் 4ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகளாவிய அளவில் உடல் பருமன் காரணமாக ஏற்படும் நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான உடல் எடையை பெறுவதற்கான தீர்வுகளை ஊக்குவிக்கப்படுகிறது. குழந்தைப்பருவத்தில் உடல் பருமன் ஆவது குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதோடு, இளம் பருவத்தில் பல தாக்கங்களை ஏற்படுத்துகிறது. குழந்தைப்பருவ பருமனை குறைப்பதற்கான வழிகளை பார்க்கலாம்(Unsplash)
(2 / 7)
ஆரோக்கியமான டயட்: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் நிறைந்த சமச்சீரான உணவுகளை சாப்பிடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும். சர்க்கரை பானங்கள், அதிக கொழுப்பு மற்றும் அதிக கலோரி உணவுகளை எடுத்துக்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும்(Unsplash)
(3 / 7)
வழக்கமான உடல் செயல்பாடு: ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணிநேரமாவது சுறுசுறுப்பாக இருக்கவும், உடல் செல்பாட்டை வெளிப்படுத்தவும் குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக விளையாட்டில் ஈடுபடுத்துவது அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
(4 / 7)
கல்வி: ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தைப் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களின் விளைவுகளை பற்றி அவர்கள் புரிந்துகொள்ள செய்ய வேண்டும்(Unsplash)
(5 / 7)
குடும்பத்தினருடன் ஈடுபடுத்துதல்: முழு குடும்பத்தையும் ஆரோக்கியமான பழக்கவழக்கத்தில் ஈடுபடுத்துவதன் மூலம், குழந்தைகளின் நலம் மேம்படும். குறிப்பாக சத்தான உணவுகளை திட்டமிட்டு சாப்பிடுவதை வழக்கமாக மாற்றவும்
(6 / 7)
முன்மாதிரி இருக்க வேண்டும்: உங்களின் கண்ணாடியாகவே குழந்தைகள் பிரதிபலிப்பார்கள். உங்களிடம் தான் பல விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்வார்கள். எனவே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு நேர்மறையான முன்மாதிரியாக இருக்க வேண்டும்.(Unsplash)
மற்ற கேலரிக்கள்