தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  World Heritage Day 2024: இந்தியாவில் இருக்கும் சிறப்பு மிக்க இந்த பாரம்பரிய தளங்கள் பற்றி தெரியுமா?

World Heritage Day 2024: இந்தியாவில் இருக்கும் சிறப்பு மிக்க இந்த பாரம்பரிய தளங்கள் பற்றி தெரியுமா?

Apr 18, 2024 08:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 18, 2024 08:15 PM , IST

உலக பாரம்பரிய தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்தியாவில் இடம்பிடித்திருக்கும் சில கலாச்சார பொக்கிஷங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்

ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்களின் மதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட நாளாக உள்ளது. 42 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்பட வளமான வரலாறு மற்றும் கலாச்சார பொக்கிஷங்கள் கொண்ட நிலமாக இந்தியா இருந்து வருகிறது

(1 / 6)

ஆண்டுதோறும் ஏப்ரல் 18ஆம் தேதி உலக பாரம்பரிய தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள வரலாற்று மற்றும் கலாச்சார அடையாளங்களின் மதிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அர்ப்பணிக்கப்பட்ட நாளாக உள்ளது. 42 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்பட வளமான வரலாறு மற்றும் கலாச்சார பொக்கிஷங்கள் கொண்ட நிலமாக இந்தியா இருந்து வருகிறது(Unsplash)

சம்பானேர்-பாவாகத் தொல்லியல் பூங்கா, குஜராத்: குஜராத்தின் பஞ்சமஹால் மலைகளுக்கு மத்தியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சம்பனேர்-பவகாத் தொல்பொருள் பூங்கா அமைந்துள்ளது, இது கட்டிடக்கலை மற்றும் கலாச்சார இணைப்பின் வசீகரிக்கும் கதையை வெளிப்படுத்துகிறது. பிரமாண்டமான ஜாமி மஸ்ஜித், குஜராத்தில் உள்ள மிகப்பெரிய மசூதி, ஜெயின் கோயில்கள் மற்றும் காளிகா மாதா கோவில் உள்ளிட்ட இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையின் தனித்துவமான கலவையை அனுபவிக்கலாம். சுற்றுலா பயணிகள் பவகாத் மலையின் உச்சியில் இருந்து பரந்த காட்சிகளை ரசிக்கலாம் மற்றும் அருகிலுள்ள வதோதராவில் உள்ள சுவையான குஜராத்தி தாலி மற்றும் உள்ளூர் உணவு வகைகளை ருசிக்கலாம்

(2 / 6)

சம்பானேர்-பாவாகத் தொல்லியல் பூங்கா, குஜராத்: குஜராத்தின் பஞ்சமஹால் மலைகளுக்கு மத்தியில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான சம்பனேர்-பவகாத் தொல்பொருள் பூங்கா அமைந்துள்ளது, இது கட்டிடக்கலை மற்றும் கலாச்சார இணைப்பின் வசீகரிக்கும் கதையை வெளிப்படுத்துகிறது. பிரமாண்டமான ஜாமி மஸ்ஜித், குஜராத்தில் உள்ள மிகப்பெரிய மசூதி, ஜெயின் கோயில்கள் மற்றும் காளிகா மாதா கோவில் உள்ளிட்ட இந்து மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையின் தனித்துவமான கலவையை அனுபவிக்கலாம். சுற்றுலா பயணிகள் பவகாத் மலையின் உச்சியில் இருந்து பரந்த காட்சிகளை ரசிக்கலாம் மற்றும் அருகிலுள்ள வதோதராவில் உள்ள சுவையான குஜராத்தி தாலி மற்றும் உள்ளூர் உணவு வகைகளை ருசிக்கலாம்(Unsplash)

மட்டஞ்சேரி அரண்மனை, கேரளா: டச்சு அரண்மனை என்று அழைக்கப்படும் மட்டஞ்சேரி அரண்மனை கேரளாவின் கலாச்சார இணைப்புடன் இணைந்திருக்கும். இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் கேரளா மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிகளின் கலவையாக உள்ளது. கொச்சி ராஜாக்கள் தொடர்பான சுவரோவியங்கள் மற்றும் புராண கலைப்பொருட்களின் தொகுப்பை இங்கு காணலாம். மட்டாஞ்சேரியின் சந்தைகளை ஆராய்ந்து, அப்பம், மீன் குழம்பு போன்ற உண்மையான கேரள உணவுகளை ருசிக்கலாம். அதேபோல் மசாலா பொருள்கள், ஜவுளிகள், கைவினை பொருள்கள் மற்றும் பழங்கால பொருள்களை வாங்கலாம்

(3 / 6)

மட்டஞ்சேரி அரண்மனை, கேரளா: டச்சு அரண்மனை என்று அழைக்கப்படும் மட்டஞ்சேரி அரண்மனை கேரளாவின் கலாச்சார இணைப்புடன் இணைந்திருக்கும். இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம் கேரளா மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிகளின் கலவையாக உள்ளது. கொச்சி ராஜாக்கள் தொடர்பான சுவரோவியங்கள் மற்றும் புராண கலைப்பொருட்களின் தொகுப்பை இங்கு காணலாம். மட்டாஞ்சேரியின் சந்தைகளை ஆராய்ந்து, அப்பம், மீன் குழம்பு போன்ற உண்மையான கேரள உணவுகளை ருசிக்கலாம். அதேபோல் மசாலா பொருள்கள், ஜவுளிகள், கைவினை பொருள்கள் மற்றும் பழங்கால பொருள்களை வாங்கலாம்(Pinterest)

ஷேக் சில்லியின் கல்லறை, ஹரியானா: தானேசரில் உள்ள ஷேக் சில்லியின் கல்லறையில் சூஃபி மற்றும் இந்து கலாச்சார கூறுகளின் சங்கமத்துக்கு சாட்சியாக உள்ளது. இந்த தனித்துவமான தளம் பாரசீக கட்டிடக்கலை தாக்கங்களுடன் பண்டைய ராச்சியங்களின் (1-7 ஆம் நூற்றாண்டு) கலைப்பொருள்களைக் வெளிப்படுத்துகிறது. இந்த கல்லறை பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை ஈர்க்கிறது. அதேபோல் கைவினை பொருள்கள் மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்களுக்கான உள்ளூர் சந்தைகளை சுற்றி பார்க்கலாம்

(4 / 6)

ஷேக் சில்லியின் கல்லறை, ஹரியானா: தானேசரில் உள்ள ஷேக் சில்லியின் கல்லறையில் சூஃபி மற்றும் இந்து கலாச்சார கூறுகளின் சங்கமத்துக்கு சாட்சியாக உள்ளது. இந்த தனித்துவமான தளம் பாரசீக கட்டிடக்கலை தாக்கங்களுடன் பண்டைய ராச்சியங்களின் (1-7 ஆம் நூற்றாண்டு) கலைப்பொருள்களைக் வெளிப்படுத்துகிறது. இந்த கல்லறை பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களை ஈர்க்கிறது. அதேபோல் கைவினை பொருள்கள் மற்றும் பாரம்பரிய கலைப்பொருட்களுக்கான உள்ளூர் சந்தைகளை சுற்றி பார்க்கலாம்(Pinterest)

பட்டடகல், கர்நாடகா: கர்நாடகாவில் உள்ள மலபிரபா ஆற்றின் கரையில் அமைந்துள்ள பட்டடகல், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். இங்iகு இடம்பிடித்திருக்கும் நேர்த்தியான கோயில்கள், கிபி 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய சாளுக்கிய வம்சத்தின் கட்டிடக்கலை ஈர்க்கும் விதமாக இருக்கும். பட்டடகல் ஒரு அரச முடிசூட்டு மையமாக செயல்பட்டது. கலை மற்றும் கலாச்சாரத்தின் செழிப்பான மையமாக வளர்ந்தது. பட்டடகல் கோயில் வளாகத்தில் உள்ள  சிற்பக் கூடம் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது

(5 / 6)

பட்டடகல், கர்நாடகா: கர்நாடகாவில் உள்ள மலபிரபா ஆற்றின் கரையில் அமைந்துள்ள பட்டடகல், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகும். இங்iகு இடம்பிடித்திருக்கும் நேர்த்தியான கோயில்கள், கிபி 7 மற்றும் 8ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய சாளுக்கிய வம்சத்தின் கட்டிடக்கலை ஈர்க்கும் விதமாக இருக்கும். பட்டடகல் ஒரு அரச முடிசூட்டு மையமாக செயல்பட்டது. கலை மற்றும் கலாச்சாரத்தின் செழிப்பான மையமாக வளர்ந்தது. பட்டடகல் கோயில் வளாகத்தில் உள்ள  சிற்பக் கூடம் இந்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது(Unsplash)

காகித்ய ருத்ரேஸ்வரா கோயில், தெலங்கானா: ராமப்பா கோவில், தெலங்கானா மாநிலம் பாலம்பேட் கிராமத்தில் அமைந்துள்ளது. 1213 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இந்து கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காகத்தி அரசு ஆட்சியமைத்த காலத்தில் கட்டப்பட்டது. திராவிட மற்றும் சாளுக்கிய தாக்கங்களின் இணக்கமான கலவையான காகதிய ஸ்டைல் எனப்படும் தனித்துவமான கட்டிடக்கலை பாணியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவப்பு மணற்கல் மற்றும் கருப்பு பசால்ட் ஆகியவற்றால் ஆனது

(6 / 6)

காகித்ய ருத்ரேஸ்வரா கோயில், தெலங்கானா: ராமப்பா கோவில், தெலங்கானா மாநிலம் பாலம்பேட் கிராமத்தில் அமைந்துள்ளது. 1213 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த இந்து கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காகத்தி அரசு ஆட்சியமைத்த காலத்தில் கட்டப்பட்டது. திராவிட மற்றும் சாளுக்கிய தாக்கங்களின் இணக்கமான கலவையான காகதிய ஸ்டைல் எனப்படும் தனித்துவமான கட்டிடக்கலை பாணியில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சிவப்பு மணற்கல் மற்றும் கருப்பு பசால்ட் ஆகியவற்றால் ஆனது(HT photo)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்