World Hepatitis Day 2024 : உலக ஹெப்பாடிட்டிஸ் தினத்தில் கல்லீரல் தொற்றுக்களை தடுப்பது எப்படி என தெரிந்துகொள்வோம்
- World Hepatitis Day 2024 : உலக ஹெப்பாடிட்டிஸ் தினத்தில் கல்லீரல் தொற்றுக்களை தடுப்பது எப்படி என தெரிந்துகொள்வோம்
- World Hepatitis Day 2024 : உலக ஹெப்பாடிட்டிஸ் தினத்தில் கல்லீரல் தொற்றுக்களை தடுப்பது எப்படி என தெரிந்துகொள்வோம்
(1 / 10)
தடுப்பு முறைகள் - தடுப்பு மருந்துகள் - ஹெப்பாடிட்டிஸ் ஏ மற்றும் பி ஆகியவற்றுக்கு சிறந்த தடுப்பு மருந்துகள் தொற்றை தடுக்க வழங்கப்படுகிறது. இந்த தடுப்பு மருந்து, நோய் எதிர்ப்பு மண்டலத்தில், வைரஸ்க்கு எதிரான நோய் எதிர்ப்பை உண்டாக்குகிறது. நோய் ஏற்படாமல் காக்கிறது.
(2 / 10)
பாதுகாப்பான ஊசி போடும் பழக்கம் - ஊசி போடும்போது, ஊசியை பகிர்ந்துகொள்ளக்கூடாது. புதிய, சுத்திகரிக்கப்பட்ட ஊசிகளை மட்டுமே உபயோகிக்கவேண்டும். இது ரத்தத்தில் மூலம் பரவும் ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சியை தடுக்கும்.
(3 / 10)
ரத்த தான முகாம்கள் - ரத்த முகாம்களில் இருந்த பெறப்படும் ரத்தங்களில் ஹெப்பாடிட்டிஸ் தொற்று உள்ளதா என்று பார்ப்பது உதவும். இது ரத்தத்தின் மூலம் பரவும் வியாதிகளை தடுக்கிறது.
(4 / 10)
பாதுகாப்பான உடலுறவு பழக்கங்கள் - பாலியல் உறவுகள் மூலம் பரவும் ஆபத்தைக் குறைக்க தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேணடும். தொற்று ஏற்பட்ட உடல் தண்ணீரில் இருந்து நேரடியாக பரவுவதை தடுக்கிறது.
(5 / 10)
தரமான உணவு மற்றும் தண்ணீர் - உங்கள் உணவு மற்றும் தண்ணீரை சுத்தமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். நன்றாக சமைத்த உணவு மற்றும் சுத்தமான தண்ணீரை பருகுவேண்டும். இது ஹெப்பாடிட்டிஸ் ஏ மற்றும் இ ஏற்படும் ஆபத்தை குறைக்கும். ஹெப்பாடிட்டிஸ் ஏ மற்றும் இ ஆகியவை சுத்தமில்லாத தண்ணீர் மற்றும் உணவால் ஏற்படுகிறது.
(6 / 10)
கை சுத்தம் - சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவுவது, கழிவறையை பயன்படுத்திய பின் கைகளை கழுவுவதும் முக்கியம். இது ஹெப்பாடிட்டிஸ் ஏ மற்றும் இயை தடுக்க உதவும்.
(7 / 10)
தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்துகொள்ளக்கூடாது - ரேஷர், டூத்பிரஷ் போன்ற தனிப்பட்ட பொருட்களை பகிர்ந்துகொள்ளக்கூடாது. இது ரத்தத்தை கடத்தும் தன்மைகொண்டது. இது சிறிய அளவிலான ரத்தத்தில் இருந்து பரவுவதை தடுக்கும்.
(8 / 10)
பாதுகாப்பான டாட்டூ பழக்கங்கள் - நீங்கள் டாட்டூ அல்லது காது குத்துவதற்கு பயன்படுத்தும் ஊசிகளை நன்றாக சுத்தம் செய்தபின் பயன்படுத்தவேண்டும். இது ரத்தத்தின் மூலம் பரவும் ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சியை தடுக்கும்.
(9 / 10)
ஹெப்பாடிட்டிஸ் பி இம்யூனோகுளோபுளின் - இது ஹெப்பாடிட்டிஸ் பாதித்த தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இது குறுகிய காலத்துக்கு ஹெப்பாடிட்டிஸ் பிக்கு எதிரான பாதுகாப்பை வழங்குகிறது.
மற்ற கேலரிக்கள்