World Autism Awareness Day 2024: 'அன்பால் இணைவோம்'..இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்!
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளின் முக்கியத்துவம், எதற்காக கடைபிடிக்கப்படுகிறது என்பது பற்றி இந்நாளில் தெரிந்துகொள்வோம்.
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளின் முக்கியத்துவம், எதற்காக கடைபிடிக்கப்படுகிறது என்பது பற்றி இந்நாளில் தெரிந்துகொள்வோம்.
(1 / 6)
இந்தியாவில் சுமார் 20 லட்சம் பேர் ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்களாக இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கவே செய்கிறது.
(2 / 6)
ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு ஆகும். குழந்தையின் 10-18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும்.
(3 / 6)
ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிச விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
(4 / 6)
மன இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், வளர்ச்சி கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்களை மக்களுக்கு புரியவைப்பதற்கும் இந்த விழிப்புணர்வு தினத்தை பயன்படுத்துகிறார்கள்.
(5 / 6)
இந்தியாவில் 100 குழந்தைகளில் ஒரு குழந்தை இந்த குறைபாட்டோடு பிறக்கிறது. பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் இந்த குறைபாட்டை போக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டிசம் பாதித்தவர்களை எப்படி கையாள வேண்டும், எப்படி அவர்களை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த விழிப்புணர்வு தினத்தின் நோக்கம்.
மற்ற கேலரிக்கள்