Winter Tourism: இந்தியாவில் பனிப்பொழிவு மிக்க இடங்கள்! ஒரு விசிட் போகலாம்…
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Winter Tourism: இந்தியாவில் பனிப்பொழிவு மிக்க இடங்கள்! ஒரு விசிட் போகலாம்…

Winter Tourism: இந்தியாவில் பனிப்பொழிவு மிக்க இடங்கள்! ஒரு விசிட் போகலாம்…

Jan 08, 2024 05:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jan 08, 2024 05:15 PM , IST

  • பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்த ரம்மியமான சூழலை ரசிக்கவும், கொண்டாடவும் பனிப்பொழிவு மிக்க இடங்களுக்கு ஜாலி பயணம் மேற்கொள்ளலாம். குல்மார்க் முதல் முஸ்ஸோரி வரை இந்தியாவில் பனிப்பொழிவு உள்ள இடங்களின் லிஸ்ட் இதோ.

சாகச பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு இது சரியான நேரமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் அமைந்திருக்கும் இமயமலை பகுதிகளில் முதல் பனிப்பொழிவானது நிகழ தொடங்கியுள்ளது. பனியை உருண்டையாக உருட்டி பந்து போல் விளையாடுவது, வீடு கட்டுவது போன்று பல்வேறு குதூகலமாக விளையாட்டுகளை பனி படர்ந்த இடங்களில் விளையாடியும், கொண்டாடியும் மகிழலாம். அந்த வகையில் இந்தியாவில் இந்த காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் பகுதிகளை தெரிந்து கொள்ளலாம்

(1 / 8)

சாகச பயணம் மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு இது சரியான நேரமாக உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான அடி உயரத்தில் அமைந்திருக்கும் இமயமலை பகுதிகளில் முதல் பனிப்பொழிவானது நிகழ தொடங்கியுள்ளது. பனியை உருண்டையாக உருட்டி பந்து போல் விளையாடுவது, வீடு கட்டுவது போன்று பல்வேறு குதூகலமாக விளையாட்டுகளை பனி படர்ந்த இடங்களில் விளையாடியும், கொண்டாடியும் மகிழலாம். அந்த வகையில் இந்தியாவில் இந்த காலத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் பகுதிகளை தெரிந்து கொள்ளலாம்(pixabay)

ஐம்மு காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்ட லே மாநிலத்தில் குளிர்காலத்தில் பனிப்பொழிவானது மொத்த நகரத்தையும் போர்வை போல் போர்த்தி புதிய அழகை கண்களுக்கு விருந்தாக காட்டும். அங்குள்ள நுப்ரா பள்ளத்தாக்கு, பாங்காங் டிசோ பகுதிகளில் இந்தியாவில் கடுமையாக பனிப்பொழிவு நிகழும் இடங்களாக உள்ளது. இந்த இடங்களுடன் சாந்தி ஸ்டுபா என்கிற இடத்திலும் நேரத்தை செலவழிக்கலாம். புத்த தீம்களில் பல்வேறு ஹோட்டல்கள் லே பகுதியில் இருப்பதால் அங்கு சென்று இரவு பொழுதை கழிக்கலாம்

(2 / 8)

ஐம்மு காஷ்மீரில் இருந்து பிரிக்கப்பட்ட லே மாநிலத்தில் குளிர்காலத்தில் பனிப்பொழிவானது மொத்த நகரத்தையும் போர்வை போல் போர்த்தி புதிய அழகை கண்களுக்கு விருந்தாக காட்டும். அங்குள்ள நுப்ரா பள்ளத்தாக்கு, பாங்காங் டிசோ பகுதிகளில் இந்தியாவில் கடுமையாக பனிப்பொழிவு நிகழும் இடங்களாக உள்ளது. இந்த இடங்களுடன் சாந்தி ஸ்டுபா என்கிற இடத்திலும் நேரத்தை செலவழிக்கலாம். புத்த தீம்களில் பல்வேறு ஹோட்டல்கள் லே பகுதியில் இருப்பதால் அங்கு சென்று இரவு பொழுதை கழிக்கலாம்(Unsplash)

நீங்கள் சிங்களாகவும், குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் பயணப்படுவதற்கு சிறந்க இடமாக மணாலி உள்ளது. மவைப்பிரதேசமான அங்கு மிகவும் எளிதாக பனிப்பொழிவை கண்டு ரசிக்கலாம். அங்கு சுற்றியிருக்கும் மலைகள் அனைத்தும் பனியால் போர்த்தப்பட்டு காட்சியளிக்கும். மணாலி அருகேயுள்ள ரோடாங் பாஸ் என்கிற இடம் பல்வேறு சாகசங்களை செய்வதற்கான உகந்த இடமாக உள்ளது

(3 / 8)

நீங்கள் சிங்களாகவும், குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் பயணப்படுவதற்கு சிறந்க இடமாக மணாலி உள்ளது. மவைப்பிரதேசமான அங்கு மிகவும் எளிதாக பனிப்பொழிவை கண்டு ரசிக்கலாம். அங்கு சுற்றியிருக்கும் மலைகள் அனைத்தும் பனியால் போர்த்தப்பட்டு காட்சியளிக்கும். மணாலி அருகேயுள்ள ரோடாங் பாஸ் என்கிற இடம் பல்வேறு சாகசங்களை செய்வதற்கான உகந்த இடமாக உள்ளது(Unsplash)

டிசம்பர் மாத்தில் குல்மார்க் முற்றிலும் ஈர்ப்பை ஏற்படுத்தும் நகரமாக உள்ளது. மேற்கு இமயமலை பகுதியிலுள்ள பிர் பஞ்சால் மலைத்தொடர் அருகே அமைந்திருக்கும் இந்த நகரில், சூரிய மறைவுக்கு பின்னர் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவும். இரவில் -8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை செல்லும். இங்கு ஸ்கையிங், கேபிள் கார் பயணம் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன

(4 / 8)

டிசம்பர் மாத்தில் குல்மார்க் முற்றிலும் ஈர்ப்பை ஏற்படுத்தும் நகரமாக உள்ளது. மேற்கு இமயமலை பகுதியிலுள்ள பிர் பஞ்சால் மலைத்தொடர் அருகே அமைந்திருக்கும் இந்த நகரில், சூரிய மறைவுக்கு பின்னர் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே நிலவும். இரவில் -8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை செல்லும். இங்கு ஸ்கையிங், கேபிள் கார் பயணம் என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளன(Unsplash)

கர்வால் இமயமலைத் தொடர் பகுதியில் தெஹ்ரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தனௌல்டி, சாகச பயணத்தை விரும்புகிறவர்களுக்கு சிறந்த இடமாக உள்ளது. அங்குள்ள அனைத்து பகுதிகளும் பனி படர்ந்து பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். மலைப்பகுதிகளில் இருக்கும் ரோடோடென்ட்ரான்கள், தியோதர் மரங்கள் உயரமான ஓக் காடுகள் போன்றவை இயற்கை விரும்பிகளுக்கு விருந்தாக இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு செல்வதற்கான உகந்த நேரமாக உள்ளது

(5 / 8)

கர்வால் இமயமலைத் தொடர் பகுதியில் தெஹ்ரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் தனௌல்டி, சாகச பயணத்தை விரும்புகிறவர்களுக்கு சிறந்த இடமாக உள்ளது. அங்குள்ள அனைத்து பகுதிகளும் பனி படர்ந்து பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். மலைப்பகுதிகளில் இருக்கும் ரோடோடென்ட்ரான்கள், தியோதர் மரங்கள் உயரமான ஓக் காடுகள் போன்றவை இயற்கை விரும்பிகளுக்கு விருந்தாக இருக்கும். டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இங்கு செல்வதற்கான உகந்த நேரமாக உள்ளது(Unsplash)

திபெத்திய எல்லை அருகே அமைந்திருக்கும் லாச்சுங் என்கிற இந்திய கிராமம் குளிர்காலத்தில் எப்போதும் பனிபொழிவை பெற்றிருப்பதோடு, இமயமலையின் மொத்த அழகையும் கண்களிக்க உகந்த இடமாக உள்ளது. டிரெக்கர்கள், போட்டோகிராபர்கள், சாகச பிரியர்கள் விரும்பும் குளிர் கால இடமாக இது அமைந்துள்ளது

(6 / 8)

திபெத்திய எல்லை அருகே அமைந்திருக்கும் லாச்சுங் என்கிற இந்திய கிராமம் குளிர்காலத்தில் எப்போதும் பனிபொழிவை பெற்றிருப்பதோடு, இமயமலையின் மொத்த அழகையும் கண்களிக்க உகந்த இடமாக உள்ளது. டிரெக்கர்கள், போட்டோகிராபர்கள், சாகச பிரியர்கள் விரும்பும் குளிர் கால இடமாக இது அமைந்துள்ளது(Unsplash)

மலைகளின் அரசி என்ற அழைக்கப்படும் முஸ்ஸோரி, பனிப்பொழிவை காண்பதற்கான மிக முக்கிய இடமாக உள்ளது. அங்குள்ள லால் திப்பா, கன் ஹில் மற்றும் ஜார்ஜ் எவரெஸ்ட் பகுதிகளில் டிசம்பரில் பனிப்பொழிவு கியாரண்டி. அந்த பனிப்பொழிவுக்கு இடையே ரோலர் ஸ்காட்டிங், ஐஸ் ஸ்காட்டிங் போன்ற வேடிக்கையான விளையாட்டுகளையும் விளையாடி மகிழலாம்

(7 / 8)

மலைகளின் அரசி என்ற அழைக்கப்படும் முஸ்ஸோரி, பனிப்பொழிவை காண்பதற்கான மிக முக்கிய இடமாக உள்ளது. அங்குள்ள லால் திப்பா, கன் ஹில் மற்றும் ஜார்ஜ் எவரெஸ்ட் பகுதிகளில் டிசம்பரில் பனிப்பொழிவு கியாரண்டி. அந்த பனிப்பொழிவுக்கு இடையே ரோலர் ஸ்காட்டிங், ஐஸ் ஸ்காட்டிங் போன்ற வேடிக்கையான விளையாட்டுகளையும் விளையாடி மகிழலாம்(Unsplash)

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தவாங் என்ற நகரிலும் தற்போது பனிப்பொழிவை காணலாம். அத்துடன் ரம்மியமான சுற்றுப்புற சூழல், நீர்வீழ்ச்சிகள், வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற இடங்களும் இங்கு உள்ளன. வடகிழக்கு இந்திய பகுதியின் மொத்த அழகையும் தன்னகத்தே பெற்றுள்ள இந்த நகரில் நவம்பர் முதல் மே மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும் என கூறப்படுகிறது

(8 / 8)

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தவாங் என்ற நகரிலும் தற்போது பனிப்பொழிவை காணலாம். அத்துடன் ரம்மியமான சுற்றுப்புற சூழல், நீர்வீழ்ச்சிகள், வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் பெற்ற இடங்களும் இங்கு உள்ளன. வடகிழக்கு இந்திய பகுதியின் மொத்த அழகையும் தன்னகத்தே பெற்றுள்ள இந்த நகரில் நவம்பர் முதல் மே மாதம் வரை பனிப்பொழிவு இருக்கும் என கூறப்படுகிறது(Unsplash)

மற்ற கேலரிக்கள்