குளிர்காலம் தொடங்கியாச்சு.. தொற்று நோய்களிடம் இருந்து எட்ட இருக்க இந்த ரெசிபிக்களை தினமும் சாப்பிடுங்கள்
Nutritious Ladoos To Boost Immunity: குளிர்காலத்தில் நிலவும் தட்பவெப சூழலில் பல்வேறு வகையான நோய் தொற்றுகளால் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். இந்த நேரத்தில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், மனதை திருப்திபடுத்தவும் செய்யும் ஸ்நாக்ஸ்களை தயார் செய்து சாப்பிடலாம்
(1 / 7)
மருத்துவ குணங்களுடன் வீட்டில் இருக்கும் பல்வேறு பொருள்களை வைத்தே ஸ்நாக்ஸ்களை தயாரிக்கலாம். அந்த வகையில் அனைவருக்கும் பிடித்தமான லட்டு மூலம் ஆரோக்கியத்தை பேனி காப்பதுடன், திண்பண்டங்கள் சாப்பிடும் ஆசையும் நிறைவேற்றலாம். இந்த குளிர்காலத்தில் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை தரும் லட்டுகள் எவையெல்லாம் என்பதை பார்க்கலாம்
(2 / 7)
பொதுவாகவே தானியங்கள், மாவுகளில் தயார் செய்யப்படும் லட்டுக்கள் மூட்டு வலி மற்றும் முதுகு வலி பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. அத்துடன் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. தொடர்ந்து லட்டு சாப்பிட்டு வருவதால் வீக்கம் மற்றும் வலிகளை குறைக்கலாம், இதில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது, இது எலும்புகளை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற உதவுகிறது
(3 / 7)
பேரிச்சம்பழம் மற்றும் உலர் பழங்கள் லட்டு: ஆரோக்கியமான மற்றும் சர்க்கரை இல்லாத லட்டுகளை உங்கள் உணவில் சேர்க்க விரும்பினால், பேரீச்சம்பழம் மற்றும் உலர் பழ லட்டுகள் சிறந்த தேர்வாகும். காலை உணவுடன் இதை சேர்க்கலாம். இந்த லட்டுகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி, மிகவும் எளிதாக தயார் செய்யலாம் (shutterstock)
(4 / 7)
எள் லட்டுகள்: எள்ளுக்களில் உள்ள வெப்ப தன்மை காரணமாக, குளிர்காலத்தில் எள் லட்டுகளை உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்கும். வறுத்த எள், வெல்லம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை வைத்து தயாரிக்கப்படும் இந்த மென்மையான லட்டுகள் குளிர்காலத்துக்கான சிறந்த சிற்றுண்டியாக இருக்கும்(shutterstock)
(5 / 7)
பாதாம் பிசின் லட்டு: உடலுக்குள் வலிமையை தரும் பாதாம் பிசின், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் குணங்கள் நிறைந்ததாக உள்ளது. குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு சாப்பிட கொடுக்கப்படு பாதம்பிசனுடன், வெள்ளம் சேர்த்து லட்டு தயார் செய்து சாப்பிடலாம்(shutterstock)
(6 / 7)
வெந்தய லட்டுகள்: வெந்தய விதைகள், பெருஞ்சீரகம், சுக்கு தூள் மற்றும் வெல்லம் ஆகியவற்றின் கலவையுடன் இந்த லட்டு தயார் செய்யலாம். இந்த பாரம்பரிய குளிர்காலத்தில் சாப்பிடும் உணவாகவே இருந்து வருகிறத. இந்த லட்டு உங்கள் உடலை இதமாக வைக்க உதவுகிறது. சுக்கு மற்றும் வெந்தயத்தின் கலவை கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது என்று கருதப்படுகிறது(shutterstock)
(7 / 7)
பஞ்சிரி லட்டுகள்: கோதுமை மாவு, உலர் பழங்கள், ரவை, மக்கானா, தேங்காய் மற்றும் கொட்டைகள் கலந்து தயாரிக்கப்படும் கோதுமை லட்டு பஞ்சிரி என்ற பெயரில் வட இந்தியாவில் பிரபலமாக உள்ளது. இந்த லட்டு சுவையை மெருகேற்ற நெய் தடவலாம். குளிர்காலத்தில் சாப்பிடக்கூடிய லட்டு வகைகளில் ஒன்றாக இருந்து வருகிறது(shutterstock)
மற்ற கேலரிக்கள்