தண்ணீர் குடிக்க வந்து கான்கிரீட் இடையே சிக்கிய யானை.. ஜேசிபி மூலம் பத்திரமாக மீட்பு
- கர்நாடக மாநிலம் நாகர்ஹோளே வனப்பகுதியின் ஓரத்தில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை, கான்கிரீட் தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. மிகுந்த போராட்டத்துக்கு பிறகு யானை மீட்கப்பட்டது
- கர்நாடக மாநிலம் நாகர்ஹோளே வனப்பகுதியின் ஓரத்தில் தண்ணீர் குடிக்க வந்த காட்டு யானை, கான்கிரீட் தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. மிகுந்த போராட்டத்துக்கு பிறகு யானை மீட்கப்பட்டது
(1 / 6)
மைசூர் மாவட்டம் ஹுன்சூர் தாலுகாவில் உள்ள முதுகனூர் ஹோசகெரே என்ற பகுதிக்கு அருகே கான்கிரீட் சுவருக்கு இடையே யானை சிக்கியது
(2 / 6)
நாகர்ஹோளே சரணாலயத்தில் காட்டு பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, மீண்டும் காட்டுக்குள் திரும்பும் போது தடுப்பாக போடப்பட்டிருந்த கான்கிரீட் தூணில் சிக்கி கொண்டது
(3 / 6)
சுமார் மூன்று மணி நேரமாக வெளியே வர முடியாமல் தவித்த காட்டு யானை தொடர்ந்து தப்பிக்க முயன்றது. யானை போராடுவதை பார்த்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்
(4 / 6)
வனப்பகுதியின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள ரயில் தண்டவாளங்களுக்கு இடையே காட்டு யானைகள் அவ்வப்போது சிக்கி சிரமப்படும் சம்பவங்கள் இங்கு அடிக்கடி நடக்கும் சம்பவமாக உள்ளது
(5 / 6)
இந்த ஒற்றை யானை காட்டில் இருந்து கிராமத்துக்கு வந்து, பயிர்களை நாசம் செய்து வந்த நிலையில், யானைக்கு ரேடியோ காலர் பொருத்தப்பட்டது
மற்ற கேலரிக்கள்