குளிர் காலத்தில் சிவப்பு முள்ளங்கியை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்?
- குளிர் காலத்தில் சிவப்பு முள்ளங்கியை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்?
- குளிர் காலத்தில் சிவப்பு முள்ளங்கியை ஏன் எடுத்துக்கொள்ளவேண்டும்?
(1 / 10)
நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது - சிவப்பு முள்ளங்கியில் வைட்டமின் சி சத்துக்கள் உள்ளன. அது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது மற்றும் உடல் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. குறிப்பாக குளிர் காலங்களில் ஏற்படும் பொதுவான காய்ச்சல் மற்றும் சளியைப் போக்குகிறது. இதன் இயற்கை ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், செல்கள் சேதமடைவதில் இருந்து காக்கின்றன. இது உங்கள் இந்த குளிர்காலம் முழுவதிலும் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
(2 / 10)
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - இதில் உள்ள நார்ச்சத்துக்கள், சிவப்பு முள்ளங்கியை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. இதில் உள்ள இயற்கை எண்சைம்கள் மற்றும் தண்ணீர் உட்பொருட்கள் ஆரோக்கியமான செரிமான மண்டலத்தை உருவாக்க உதவுகின்றன. இது குறிப்பாக பனிக்காலத்தில் நீங்கள் அதிகம் சாப்பிட்டால் இதை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டியது உங்களின் செரிமானத்தை தூண்டுகிறது.
(3 / 10)
உடல் எடையை பராமரிக்க உதவுகிறது - இதில் கலோரிகள் குறைவு மற்றும் நாரச்சத்துக்கள் அதிகம். சிவப்பு முள்ளங்கி தங்களின் உடல் எடையை பராமரிக்க விரும்புபவர்களின் முக்கிய தேர்வாக உள்ளது. இதில் உள்ள அதிகப்படியான தண்ணீர் சத்துக்கள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வையும், உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தையும் கொடுக்கின்றன. இதனால் நீங்கள் தேவையில்லாமல் ஸ்னாக்ஸ்கள் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது.
(4 / 10)
உடலில் உள்ள கழிவுகளை நீக்குகிறது - சிவப்பு முள்ளங்கி இயற்கை கழிவு நீக்கியாகும். அது உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் இரண்டில் உள்ள கழிவுகளையும், அழுக்குகளையும் வெளியேற்றுகிறது. இந்த சுத்தம் செய்யும் வேலை, குளிர் காலத்துக்கு மிகவும் அவசியமானது. அதிகம் சாப்பிடுவது செரிமான மண்டலம் மற்றும் கழிவு நீக்க மண்டலம் இரண்டையும் பாதிக்கும்.
(5 / 10)
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - சிவப்பு முள்ளங்கியில் உள்ள அதிகப்படியான தண்ணீர் சத்துக்கள், உங்கள் சருமத்துக்கு தேவையான நீர்ச்சத்துக்களைக் கொடுக்கிறது. இதில் உள்ள மற்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சரும வறட்சியைப் போக்குகிறது. மழைக்காலத்தில் ஏற்படும் சரும சேதத்தைக் காக்கிறது. சிவப்பு முள்ளங்கி சாப்பிடுவதை நீங்கள் வழக்கமாக்கிக்கொண்டால், அது உங்கள் சருமத்தை இயற்கையாகவே பளபளக்கச் செய்கிறது. சருமத்தின் நெகிழ்ச்சிக்கு உதவுகிறது.
(6 / 10)
ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது - இதில் உள்ள பொட்டாசியம், சிவப்பு முள்ளங்கியை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வைக்கிறது. உங்கள் உடலில் சோடியம் அளவை சமப்படுத்துவதன் மூலம் சிவப்பு முள்ளங்கி இதைச் செய்கிறது. இதில் உள்ள இயற்கை உட்பொருட்கள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
(7 / 10)
குளிர்கால சோர்வைப் போக்குகிறது - சிப்பு முள்ளங்கியில் உள்ள இரும்புச்சத்துக்கள் மற்றும் மற்ற முக்கிய மினரல்கள், சோர்வை எதிர்த்துப் போராடுகிறது. இது உங்களின் ஆற்றல் அளவை நிலைப்படுத்துகிறது. இது உங்களுக்கு குளிர் காலத்தில் ஏற்படும் சோர்வைப் போக்குகிறது.
(8 / 10)
சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - இதில் உள்ள உட்பொருட்கள், சிவப்பு முள்ளங்கியை மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்படும் பிரச்னைகளை போக்கவைக்கும் அருமருந்தாக்குகிறது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், சுவாசக் கோளாறுகளை சரிசெய்ய உதவுகிறது. உங்கள் சுவாசம் சீராக உதவுகிறது. இதை குளிர்கால அலர்ஜியைப் போக்க குளிர் மாதங்களில் அதிகம் எடுத்துக்கொள்வது அவசியம்.
(9 / 10)
சிவப்பு முள்ளங்கியை எப்படி சாப்பிடவேண்டும்? - சிவப்பு முள்ளங்கியை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டுமெனில், இதை சாலட்கள், பராத்தாக்கள் மற்றும் சூப்களில் கலந்துகொள்ளவேண்டும். இதை நீங்கள் சமைக்காமல் அப்படியே சாப்பிடலாம். இதை துருவி எலுமிச்சை மற்றும் உப்பு தூவி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது விரைவாக உங்களுக்கு கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஸ்னாக்ஸ் ஆகும்.
மற்ற கேலரிக்கள்