சிவாஜி இறந்தத வெளிய சொன்னது விஜயகாந்த்தான்.. இறுதிச்சடங்கில் பங்கு கொடுத்த பிரபு! - இறுதிச்சடங்கில் நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சிவாஜி இறந்தத வெளிய சொன்னது விஜயகாந்த்தான்.. இறுதிச்சடங்கில் பங்கு கொடுத்த பிரபு! - இறுதிச்சடங்கில் நடந்தது என்ன?

சிவாஜி இறந்தத வெளிய சொன்னது விஜயகாந்த்தான்.. இறுதிச்சடங்கில் பங்கு கொடுத்த பிரபு! - இறுதிச்சடங்கில் நடந்தது என்ன?

Jan 03, 2025 07:48 AM IST Kalyani Pandiyan S
Jan 03, 2025 07:48 AM , IST

நடிகர் சிவாஜி கணேசன் மறைந்து விட்டார். அந்த செய்தியை முதன் முதலாக வெளியே சொன்னவர் கேப்டன் விஜயகாந்த்தான். 

சிவாஜி கணேசன் இறந்த போது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி சம்பவத்தையும், அதற்கு நடிகர் பிரபு கொடுத்த மரியாதையையும் குறித்து இந்தக்கட்டுரையில் பார்க்கலாம். 

(1 / 6)

சிவாஜி கணேசன் இறந்த போது விஜயகாந்த் செய்த நெகிழ்ச்சி சம்பவத்தையும், அதற்கு நடிகர் பிரபு கொடுத்த மரியாதையையும் குறித்து இந்தக்கட்டுரையில் பார்க்கலாம்.

களத்தில் இறங்கிய விஜயகாந்தின் படைநடிகர் சிவாஜி கணேசன் மறைந்து விட்டார். அந்த செய்தியை முதன் முதலாக வெளியே சொன்னவர் கேப்டன் விஜயகாந்த்தான். காரணம், அப்போது அவரது மகன் பிரபு படப்பிடிப்பின் காரணமாக அமெரிக்கா சென்றிருந்தார்; ஒரு பக்கம் அவரது இன்னொரு மகன் ராம்குமார் கதறி அழுது கொண்டிருந்தார். மற்றொரு பக்கம் சிவாஜி மனைவி கமலா அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் உடைந்து போய் உட்கார்ந்திருந்தார்.

(2 / 6)

களத்தில் இறங்கிய விஜயகாந்தின் படை

நடிகர் சிவாஜி கணேசன் மறைந்து விட்டார். அந்த செய்தியை முதன் முதலாக வெளியே சொன்னவர் கேப்டன் விஜயகாந்த்தான். காரணம், அப்போது அவரது மகன் பிரபு படப்பிடிப்பின் காரணமாக அமெரிக்கா சென்றிருந்தார்; ஒரு பக்கம் அவரது இன்னொரு மகன் ராம்குமார் கதறி அழுது கொண்டிருந்தார். மற்றொரு பக்கம் சிவாஜி மனைவி கமலா அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் உடைந்து போய் உட்கார்ந்திருந்தார்.

இந்த நிலையில், விஜயகாந்த் ராம்குமாரிடம் சென்று என்ன செய்யலாம் என்று கேட்டார். அதற்கு ராம்குமார் என்னமோ விஜி.. நீங்கள் பார்த்து செய்யுங்கள் என்று கலங்கி நின்றார். இந்த நிலையில், அவரும், அவரது படையும் உடனே களத்தில் இறங்கியது. முதற்கட்டமாக எல்லோரும் சென்று வருவதற்கான வழியை ஏற்படுத்தினார். அடுத்த நாள் நடிகர் சங்கத்தில் சிவாஜியின் உடலை வைத்தார். 

(3 / 6)

பிரபு செய்த நெகிழ்ச்சி சம்பவம்எல்லாம் நல்லபடியாக முடிந்து பெசன்ட் நகர் மயானத்தின் உள்ளே சிவாஜி சாரின் உடல் கொண்டு செல்லப்பட்டது; சிவாஜிக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. 

(4 / 6)

பிரபு செய்த நெகிழ்ச்சி சம்பவம்

எல்லாம் நல்லபடியாக முடிந்து பெசன்ட் நகர் மயானத்தின் உள்ளே சிவாஜி சாரின் உடல் கொண்டு செல்லப்பட்டது; சிவாஜிக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டுக்கொண்டிருந்தன. 

அப்போது, சங்டங்குகளை செய்தவர் சிவாஜியின் மகன்கள் எல்லோரும் வாருங்கள் என்று சொல்ல, ஓரமாக நின்று கொண்டிருந்த விஜயகாந்தை பிரபு அழைத்தார். இதனைப்பார்த்த சடங்குகளைச் செய்தவர், மகன்களைதான் அழைத்தேன் என்று சொல்ல, பிரபு அவரும் அவரது மகன்தான் என்று சொன்னார்; 

(5 / 6)

இதெல்லாம் முடிந்த பிறகு இரண்டு நாள் கழித்து விஜயகாந்த் சிவாஜி வீட்டிற்கு சென்றார். அப்போது கமலா அம்மா, ஐயா அடிக்கடி எல்லோரும் என்னுடைய புள்ள.. புள்ள என்று கூறுவார். உண்மையிலேயே இப்போதுதான் தெரிகிறது விஜி.. நீங்கள் எல்லோரும் அவருடைய பிள்ளைகள்தான் என்று கூறினார்.தகவல் உதவி - விஜய் டிவி.. நீயா நானா

(6 / 6)

இதெல்லாம் முடிந்த பிறகு இரண்டு நாள் கழித்து விஜயகாந்த் சிவாஜி வீட்டிற்கு சென்றார். அப்போது கமலா அம்மா, ஐயா அடிக்கடி எல்லோரும் என்னுடைய புள்ள.. புள்ள என்று கூறுவார். உண்மையிலேயே இப்போதுதான் தெரிகிறது விஜி.. நீங்கள் எல்லோரும் அவருடைய பிள்ளைகள்தான் என்று கூறினார்.

தகவல் உதவி - விஜய் டிவி.. நீயா நானா

(vikatan )

மற்ற கேலரிக்கள்