Flax Seeds: எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் இவர்கள் மட்டும் ஆளி விதைகளை சாப்பிடக்கூடாது.. யாரெல்லாம் தெரியுமா?
Who should not eat Flax Seeds: எடைகுறைப்பு முதல் ரத்த கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது வரை ஆளி விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. ஆனால் சிலருக்கு ஆளி விதைகள் வேறு உடலநல பிரச்னை ஏற்படுத்தலாம். அந்த வகையில் யாரெல்லாம் ஆளி விதைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்
(1 / 8)
ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு, உடல் சூட்டை தணித்தல், எடை குறைப்பு என ஆளி விதைகளின் நன்மைகள் பற்றி நீங்கள் பல விஷயங்களை அறிந்திருக்கலாம். ஆளிவிதைகளில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக நிறைந்துள்ளன. அத்துடன் பல்வேறு விதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன இவை உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை அளித்தாலும், சிலருக்கு வேறு மாதிரியான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்
(2 / 8)
ஆளி விதைகள் சாப்பிட்ட பின்னர் சிலருக்கு வேறு பிரச்னைகளை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் ஆளி விதைகள் சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை பார்க்கலாம்
(3 / 8)
ரத்த சர்க்கரை நோயாளிகள் ஆளி விதைகளை உட்கொள்ளக்கூடாது: ஆளி விதைகளை சாப்பிடுவது ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். எனவே, உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்பவராக இருப்பின், ஆளி விதைகள் உட்கொள்வதைக் குறைக்கவும். ஏனெனில் உடலின் சர்க்கரை அளவை மேலும் குறைக்கும் என்பதால் வேறு பாதிப்புகளை உண்டாக்கலாம்
(4 / 8)
குடல் நோய்கள்: அதிகப்படியான ஆளி விதைகளை உட்கொள்வது குடல் அடைப்பை ஏற்படுத்தும். முக்கியமாக நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், அது குடல் சார்ந்த பிரச்னைகளை அதிகரிக்கும். எனவே, குறைந்த அளவு ஆளி விதைகளை உட்கொள்ளுங்கள்
(5 / 8)
ஒவ்வாமை பிரச்சனைகளை அதிகரிக்கலாம்: சிலர் ஆளி விதைகள் சிலருக்கு ஒவ்வாமை பிரச்னைகளை ஏற்படுத்தலாம். எனவே அவர்கள் ஆளி விதைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இது வீக்கம், அரிப்பு, தலைச்சுற்றல் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். எனவே, ஒவ்வாமை இருப்பவர்கள் ஆளி விதைகளை உட்கொள்வதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்
(6 / 8)
ரத்த அழுத்தம் பாதிப்பு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்: ஆளி விதைகளை உட்கொள்வது உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் நீங்கள் ஏற்கனவே உயர் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளை எடுத்து கொண்டவாறே ஆளி விதைகளையும் உட்கொண்டால் வேறு விளைவுகளை ஏற்படுத்தலாம்
(7 / 8)
ரத்தப்போக்கு பிரச்சனைகள் இருப்பவர்கள்: ஆளி விதை எண்ணெய் ரத்த உறைதலைக் குறைக்கும். எனவே அறுவை சிகிச்சைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு அதை எடுத்துக்கொள்ள கூடாது. இதேபோல், நீங்கள் ஏற்கனவே ஏதேனும் இரத்த உறைவு மருந்துகளை எடுத்துக்கொண்டால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே ஆளி விதைகளை உட்கொள்ளுங்கள்
மற்ற கேலரிக்கள்