தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bsp Armstrong : தமிழ்நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய கொலை.. யார் இந்த ஆம்ஸ்ட்ராங்க்? பின்னணி என்ன?

BSP Armstrong : தமிழ்நாட்டையே பரபரப்பில் ஆழ்த்திய கொலை.. யார் இந்த ஆம்ஸ்ட்ராங்க்? பின்னணி என்ன?

Jul 06, 2024 12:13 PM IST Divya Sekar
Jul 06, 2024 12:13 PM , IST

BSP Armstrong Murder : அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை அந்தப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து உருவாக்கினார். அதே ஆண்டு சென்னை மாநகராட்சியின் 99 ஆவது வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்வாகியிருந்தார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார். நேற்று இரவு 7.30 மணிக்கு பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே இருந்த ஆம்ஸ்ட்ராங்கை மர்ம கும்பல் ஓட ஓட வெட்டிக் கொன்றது. கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டி உள்ளனர். பின்னர் தங்களது ஆயுதங்கள் முழுவதையும், ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டின் முன் போட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர். 

(1 / 8)

சென்னை பெரம்பூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரின் மகனான ஆம்ஸ்ட்ராங், பள்ளிக் காலம் முதலே அரசியலில் ஆர்வமுடையவராக இருந்துள்ளார். சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட ஆம்ஸ்ட்ராங், அடிப்படையில் வழக்கறிஞர்.

(2 / 8)

அவர் தந்தை கிருஷ்ணன் திராவிடர் கழகத்தில் முழு நேர ஊழியராகப் பணியாற்றியவர். சிறுவயதில் இருந்தே அரசியல் ஆர்வமிக்கவரான ஆம்ஸ்ட்ராங், அம்பேத்கர் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார்

(3 / 8)

மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் லட்சியத்துடன் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்து, கடந்த 2000ஆம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

(4 / 8)

அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை அந்தப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து உருவாக்கினார். அதே ஆண்டு சென்னை மாநகராட்சியின் 99 ஆவது வார்டில் போட்டியிட்டு மாமன்ற உறுப்பினராக தேர்வாகியிருந்தார்.

(5 / 8)

2006 சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராகத் தேர்வானார். 2007 செப்டம்பர் 24-ம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

(6 / 8)

2008-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரானார். 2008-ல் சென்னை அமைந்தகரையில் அப்போதைய உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்த மாயாவதியை அழைத்துவந்து மிகப்பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார்.

(7 / 8)

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக தொடர்ந்து 17ஆண்டுகள் இருந்த இவர், தூய்மை பணியாளர்களுக்கான போராட்டம், நீட் எதிர்ப்பு, தலித் மக்களுக்கு ஆதரவான போராட்டங்கள் என பலவற்றை முன்னெடுத்துள்ளார். பட்டியல் சமூக மக்களின் உரிமைகளுக்காகவும் பௌத்த மதத்தைப் பரப்புவதிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டவர்

(8 / 8)

மற்ற கேலரிக்கள்