HBD Amy Jackson: மாடலிங்.. தமிழ் தெரியாத தமிழ் நடிகை.. முதல் படத்திலேயே நற்பெயர்.. யார் இந்த எமி ஜாக்சன்?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hbd Amy Jackson: மாடலிங்.. தமிழ் தெரியாத தமிழ் நடிகை.. முதல் படத்திலேயே நற்பெயர்.. யார் இந்த எமி ஜாக்சன்?

HBD Amy Jackson: மாடலிங்.. தமிழ் தெரியாத தமிழ் நடிகை.. முதல் படத்திலேயே நற்பெயர்.. யார் இந்த எமி ஜாக்சன்?

Jan 31, 2025 07:31 AM IST Marimuthu M
Jan 31, 2025 07:31 AM , IST

  • நடிகை எமி ஜாக்சனின் பிறந்த நாள், ஜனவரி 31 இன்று கொண்டாடப்படுகிறது. அவர் கடந்து வந்த பாதையைக் காண்போம். 

எமிஜாக்சன். பிரபலமான நடிகை மற்றும் ஆகச்சிறந்த மாடல். படுகவர்ச்சி உடையில் எல்லோருடைய மனசையும் அடித்து அள்ளிக்கொண்டு போகும் வித்தைக்காரி. அந்த மாயம் தெரிந்தவரின் பிறந்த நாள் இன்று. 1992-ல் ஜனவரி 31-ல் இங்கிலாந்தில் பிறந்த இவர் இன்று அகிலம் முழுவதும் பிரபலம்.

(1 / 7)

டக்ளஸ் என்ற இடத்தில் மார்குட்டா , ஆலன் ஜாக்சன் ஆகியோர் மகளாக பிறந்த இவரின் முழு பெயர் எமி லூயிஸ் ஜாக்சன் ஆகும். பெரும் பகுதி லிவர்பூல் பகுதியில் உள்ள பாட்டி வீட்டில் வளர்ந்தார். அங்கே உள்ள செயிண்ட் எட்வர்ட் கல்லூரியில் படித்தவர். ஆங்கில இலக்கிய புலமை பெற்றவர், எமி ஜாக்சன் 

(2 / 7)

எமி ஜாக்சன், மாடலிங் துறையில் ஆர்வம் காட்டி நிறைய போட்டிகளில் பங்கேற்றார். சிறு வயதிலேயே மிஸ் லிவர்பூல், மிஸ் பிரிட்டன் ஆகிய இரு பட்டங்கள் வென்ற பிறகு மாடலிங் துறையில் மிகவும் பிரபலமானார். பல்வேறு புகழ் பெற்ற நிறுவனங்களுடன் மாடலாக பணிபுரிய ஒப்பந்தமானார். சின்ன வயதிலேயே இந்த நிலைக்கு வர அழகும் வாளிப்பான உடல் தோற்றமும் அவரின் கவர்ச்சியும் உதவியாக இருந்தது.

(3 / 7)

மாடலிங் துறையில் இருந்தவரை அவருக்கு தொடர்பே இல்லாத தமிழ் திரைப்பட உலகம் தான் சினிமாவில் நடிக்க இழுத்து வந்தது. ஆர்யா நாயகன் ஆக நடித்த படம் "மதராசபட்டினம்" . இந்தியா சுதந்திர போராட்ட களத்தில் உள்ள கதை. இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் ஆளுநர் மகள்தான் இந்த படத்தின் நாயகி. அந்த நாயகி தேடலில் இணையதளம் மூலம் கண்டறிந்து அழைத்து வரப்பட்டவர் தான் எமிஜாக்சன். கிராமத்தில் உள்ள இளைஞரை விரும்பி காதலிப்பவர். தமிழ் மொழி அறியாத இவர் மிகவும் அழகாக கதையின் வலிமை புரிந்து தனது கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்து இருப்பார். 

(4 / 7)

2010 ல் வெளியே வந்த இந்த படத்தில் தனது முதல் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். இந்த படத்தில் அறிமுகம் செய்த இயக்குநர் ஏ. எல். விஜய் உடன் தாண்டவம் என்ற படத்தில் இரண்டாவது முறையாக நடித்தார்.விக்ரம் உடன் "ஐ", தனுஷ் உடன் தங்க மகன், அட்லி இயக்கத்தில் விஜய் உடன் "தெறி" உதயநிதி உடன் "கெத்து", ரஜினியின் எந்திரன் 2.0, தேவி, மிஷன் சாப்டர் 1 என்ற படங்களில் நடித்து இருந்தார்.

(5 / 7)

2010 ல் வெளியே வந்த இந்த படத்தில் தனது முதல் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். இந்த படத்தில் அறிமுகம் செய்த இயக்குநர் ஏ. எல். விஜய் உடன் தாண்டவம் என்ற படத்தில் இரண்டாவது முறையாக நடித்தார்.

விக்ரம் உடன் "ஐ", தனுஷ் உடன் தங்க மகன், அட்லி இயக்கத்தில் விஜய் உடன் "தெறி" உதயநிதி உடன் "கெத்து", ரஜினியின் எந்திரன் 2.0, தேவி, மிஷன் சாப்டர் 1 என்ற படங்களில் நடித்து இருந்தார்.

2019ல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனோயிட் என்பவரை திருமணம் செய்து பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயர் வைத்தார். நிறப்பாகுபாட்டுக்கு எதிராக அக்குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டார். குறுகிய காலத்திலேயே ஜார்ஜ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.பின்னர் ஹாலிவுட் நடிகர் எட் கெஸ்விக் அவர்கள் உடன் காதல் ஏற்பட்டது. அவரும் படப்பிடிப்பு தளங்களுக்கு எமியுடன் வருவது உண்டு. அதன்பின், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பனி படர்ந்த மலையில் ஒரு பாலத்தின் மீது நின்று காதலை உலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்து மோதிரம் மாற்றி கியூட்டான புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு வைரல் ஆக்கினர். 

(6 / 7)

2019ல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் ஜார்ஜ் பனோயிட் என்பவரை திருமணம் செய்து பிறந்த ஆண் குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயர் வைத்தார். நிறப்பாகுபாட்டுக்கு எதிராக அக்குழந்தையை வளர்க்க ஆசைப்பட்டார். குறுகிய காலத்திலேயே ஜார்ஜ் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்.

பின்னர் ஹாலிவுட் நடிகர் எட் கெஸ்விக் அவர்கள் உடன் காதல் ஏற்பட்டது. அவரும் படப்பிடிப்பு தளங்களுக்கு எமியுடன் வருவது உண்டு. அதன்பின், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பனி படர்ந்த மலையில் ஒரு பாலத்தின் மீது நின்று காதலை உலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்து மோதிரம் மாற்றி கியூட்டான புகைப்படங்களை இருவரும் வெளியிட்டு வைரல் ஆக்கினர். 

எமி ஜாக்சன், அடிக்கடி கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்தி எல்லோரையும் கவனிக்க வைப்பார். ஃபேஷன் ஷோக்களில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். வெளிநாட்டு பெண் என்ற போதிலும் சினிமாவுக்கு மொழியை விட மனித உணர்வுகளை கடத்தும் திறமையை கொண்டவர். இன்று 33 வயதை கடந்த இவரது வாழ்க்கை பயணமும் கலைப்பயணமும் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்