ஐபிஎல் 2025: ஒரே ஓவரில் 6 சிக்ஸர் அடித்தவர்! முதல் ஐபிஎல் போட்டியில் அசத்தல் பேட்டிங்.. யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?
- IPL 2025, Priyansh Arya: ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் ஓபனராக களமிறங்கிய அதிரடியில் மிரட்டி கவனம் ஈரத்துள்ளார் பிரியான்ஷ் ஆர்யா. இடது கை பேட்ஸ்மேனான இவர் உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் ஆறு பந்துகளில் 6 சிகஸர்களை அடித்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.
- IPL 2025, Priyansh Arya: ஐபிஎல் 2025 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் ஓபனராக களமிறங்கிய அதிரடியில் மிரட்டி கவனம் ஈரத்துள்ளார் பிரியான்ஷ் ஆர்யா. இடது கை பேட்ஸ்மேனான இவர் உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் ஆறு பந்துகளில் 6 சிகஸர்களை அடித்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.
(1 / 7)
டெல்லியை சேர்ந்தவரான பிராயன்ஷ் ஆர்யா, ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக உள்ளார். முதல் போட்டியிலேயே அதிரடி பேட்டிங்கால் முத்திரை பதித்துள்ளார். யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா, அவரது பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்
(2 / 7)
ஐபிஎல் 2025 சீசனில் தனது முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் ஓபனராக களமிறங்கினார் பிரியான்ஷ் ஆர்யா. தொடக்கம் முதலே அதிரடியாக பேட் செய்து ரன்களை குவித்த இவர் பவுண்டரிகளை விரட்டியதுடன், 2 சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். 23 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அரைசத்ததை மிஸ் செய்தார். இருப்பினும் இவரது பேட்டிங் பஞ்சாப் அணி இமலாய ஸ்கோர் குவிக்க அடித்தளமாக அமைந்தது
(3 / 7)
24 வயதாகும் பிரியான்ஷ் ஆர்யா, தனது ஐபிஎல் அறிமுக போட்டியில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தினார். டெல்லியில் சேர்ந்த நடுத்தர குடும்ப பின்னணியை கொண்டிருக்கும் பிரியான்ஷ் ஆர்யா, துரோணாச்சார்யா விருது பெற்ற சஞ்சய் பரத்வாஜ் அகாடமியில் விளையாடியவராக உள்ளார்
(4 / 7)
அதிரடியான தொடக்க பேட்ஸ்மேனாக இருந்து வரும் பிரியான்ஷ், கடந்த ஆண்டு டெல்லி பிரீமியர் லீக் தொடரில், தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடினார். இந்த தொடரில் வடக்கு டெல்லி ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆறு பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து மிரட்டினார். இந்த இன்னிங்ஸில், அவர் வெறும் 50 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், டி20 போட்டிகளில் இதை செய்திருக்கும் பேட்ஸ்மேன்களாக யுவராஜ் மற்றும் பொல்லார்டுடன், பிரியான்ஷ் இணைந்தார்
(5 / 7)
டெல்லி பிரீமியர் லீக்கில் பிரியான்ஷின் பரபரப்பான இன்னிங்ஸின் மூலம் அவரது பெயர் பிரபலமானது. இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, பிரியான்ஷ் ஆர்யாவை ரூ. 3.8 கோடிக்கு வாங்கியது
(6 / 7)
கடந்த 2020 யு19 உலகக் கோப்பை தொடரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோருடன் விளையாட இருந்தார் பிரியான்ஷ். ஆனால் அவர் 16 வயதுக்குட்பட்டோருக்கான வயதுத் தேர்வில் தோல்வியடைந்த பிறகு, இரண்டு ஆண்டுகள் மட்டுமே 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனை யு19 உலகக் கோப்பைக்கு முன்பே முடிவடைந்தது
மற்ற கேலரிக்கள்