தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Which Lucky Zodiac Sign Will Make Money Wealth In Tamil New Year 2024 Horoscope In Astrology

Zodiac sign Luck: இறங்கி வரும் சனிபகவான்.. தமிழ் புத்தாண்டில் எகிடுதகிடு ஜாக்பாட் எந்த ராசிக்கு தெரியுமா?

Apr 02, 2024 06:51 PM IST Kalyani Pandiyan S
Apr 02, 2024 06:51 PM , IST

பாக்யாதிபதி பாக்யஸ்தானத்தில் ஆட்சி பெறுவது என்பது அவ்வளவு சாதாரண யோகம் அல்ல. ஆகையால் சனி பகவான் மிதுன ராசிக்கு இந்த காலகட்டங்களில் மிகப்பெரிய உறுதுணையாக இருக்கப் போகிறார்.

தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசி எது, அதற்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகின்றன என்பது குறித்து பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன் பேசி இருக்கிறார். இது குறித்து ஆஸ்ட்ரோவேல் யூடியூப் சேனலில் பேசிய அவர், “இந்த தமிழ் புத்தாண்டில் மிதுன ராசிக்கு நாம் முதலிடத்தை கொடுக்கலாம். காரணம், பாக்ய ஸ்தானத்திற்கு அதிபதியான சனி பகவான், அந்த பாக்ய ஸ்தானத்திலேயே மூலத்திரிகோணம் அடைந்து, கும்ப ராசியிலேயே ஆட்சி செய்கிறார்.   

(1 / 7)

பாக்யாதிபதி பாக்யஸ்தானத்தில் ஆட்சி பெறுவது என்பது அவ்வளவு சாதாரண யோகம் அல்ல. ஆகையால் சனி பகவான் மிதுன ராசிக்கு இந்த காலகட்டங்களில் மிகப்பெரிய உறுதுணையாக இருக்கப் போகிறார். குரு பகவான் 12ம் இடத்தில் மறைய போகிறார் என்பது மிக மிக அனுகூலமான ஒரு விஷயம். இன்னும் கூடுதலாக சொல்ல வேண்டும் என்றால், குரு தன்னுடைய பகை வீட்டிற்கு வரப் போகிறார். இது கூடுதல் சிறப்பாகும்.   

(2 / 7)

குரு பகவானுக்கு அடுத்தபடியாக பத்தாம் இடத்தில், ராகு பகவான் இடம் பெற்றிருக்கிறார். சங்கடமான விஷயம் என்னவென்றால் மிதுன ராசிக்கு நான்காம் இடத்தில் கேது வீற்றிருக்கிறார்.இதில் இன்னும் முக்கியமான விஷயம், சனி மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது கும்ப ராசியில் நடக்க இருக்கிறது. கும்ப ராசியில் நடைபெறக்கூடிய இந்த இணைவை, நாம் மிகவும் ஜாக்கிரதையாக பார்க்க வேண்டும்.  காரணம், சனியும், செவ்வாயும் எப்பொழுது சேர்ந்தாலும் குழப்பங்கள் வரும். அப்பாவுடன் தகராறுகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.   

(3 / 7)

இருப்பினும் மிதுன ராசிக்கு நம்பர் ஒன் ஜாக்பாட் கிடைக்கும் என்று சொல்வது ஏனென்றால், கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். அதன் படி பார்க்கும் பொழுது, குருபகவான் 11ம் இடத்தில் இருந்து 12ம் இடத்தில் மறைவது. சனிபகவான் பாக்யஸ்தானத்தில் ஆட்சி பெறுவது. ராகு பகவான் பத்தாம் இடத்தில் வீற்றியிருப்பது ஆகியவை மிதுன ராசிக்கும் ஜாக்பாட் யோகத்தை வழங்கும்.   

(4 / 7)

பணப்பிரச்சினையால் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்கள், உறவில் துரோகத்தால் பாதிக்கப்பட்டு மன உளைச்சலில் தவிப்பவர்கள், அஷ்டமத்து சனியால்,  குடும்பத்தில் பிளவை சம்பாதித்து இருப்பவர்கள் ஆகியோர்களுக்கு இந்த காலக்கட்டம் நல்ல பலன்களை கொடுக்கும். கடன் பிரச்சினையால் அவதிக்குள்ளானவர்கள், கொடுக்கல் வாங்கலில் பிரச்சினையை சந்தித்து இருப்பவர்கள் உள்ளிட்டோருக்கு பணவரவு வந்தே தீரும்.   

(5 / 7)

ரியல் எஸ்டேட், ஹோட்டல் துறை, கெமிக்கல் பிசினஸ், டெலி கம்யூனிகேஷன் துறையில் இருக்க கூடியவர்கள், பேங்கிங் துறைகளில் பணியாற்றக் கூடியவர்கள், விவசாயம் சார்ந்த இயற்கையான பொருட்களை விற்பனை செய்பவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த காலக்கட்டம் வரபிரசாதமாக இருக்கும்” என்று பேசினார்.  

(6 / 7)

பொறுப்பு துறப்புஇந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்