அரசியல் அதிகாரம்: ’அரசியலில் குதிக்கும் ஜாதக அமைப்பு எது?’ உங்களுக்கு அரசியல் வருமா? இதோ முழு விவரம்!
"ஜாதகத்தில் அரசியல் மற்றும் அரசாங்கம் தொடர்பான விஷயங்களை ஐந்தாம் இடமும், அரசியலில் வளர்ச்சி மற்றும் பாக்கியத்தை ஒன்பதாம் இடமும் தீர்மானிக்கின்றன"
(1 / 10)
அரசியலில் வெற்றி பெறுவதற்கு ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று ஜோதிட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பலர் தங்கள் ஜாதகம் மூலம் அரசியலில் எதிர்காலம் இருக்கிறதா, பதவி கிடைக்குமா, அடுத்த நிலைக்கு செல்ல முடியுமா என்பதை அறிய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரக அமைப்புகள் மற்றும் தசாபுத்தி வலிமை அவசியம்.
(2 / 10)
ஜாதகத்தில் அரசியல் மற்றும் அரசாங்கம் தொடர்பான விஷயங்களை ஐந்தாம் இடமும், அரசியலில் வளர்ச்சி மற்றும் பாக்கியத்தை ஒன்பதாம் இடமும் தீர்மானிக்கின்றன.
(3 / 10)
ஐந்தாம் இடம் நிர்வாகம் மற்றும் அரசியலை பிரதிபலிக்கிறது. ஒன்பதாம் இடம் அரசியலில் முன்னேற்றம் மற்றும் வெற்றியை அளிக்கிறது. இவை இரண்டும் வலுவாக இருக்க வேண்டும்.
(4 / 10)
சூரியன் மற்றும் குரு கிரகங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். சூரியன் அரசாங்கத்தையும், குரு பதவியையும் குறிக்கும் கிரகங்களாக உள்ளன.
(5 / 10)
அரசியலில் வெற்றி பெற, ஐந்தாம் இட அதிபதி, ஒன்பதாம் இட அதிபதி அல்லது சூரியனுடன் இணைந்த கிரகங்களின் தசாபுத்தி வலிமையாக இருக்க வேண்டும்.
(6 / 10)
தசாபுத்தியில் நட்சத்திர சாரம், சேர்க்கை, பார்வை ஆகியவை சாதகமாக இருக்க வேண்டும். சூரியன் மற்றும் குரு பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். சூரியனுடன் ராகு சேர்கையும் அரசியலுக்கு சாதகமாக அமையும். செவ்வாய், குரு, சூரியன் முதல் தர வலிமையுடன் இருக்க வேண்டும். ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் இடங்கள், அவற்றின் அதிபதிகள் பலவீனமாக இருக்கக் கூடாது.
(7 / 10)
பொதுச் சேவையை ஏழாம் இடமும், சனி கிரகமும் குறிக்கின்றன. ஏழாம் இடம் வலுவாக இருந்தால், அரசியல் மட்டுமல்லாது, சமூக கிளப், பள்ளி பெற்றோர் சங்கம், கிராம விழாக் குழு போன்ற சமூக பொறுப்புகளிலும் பதவி பெற முடியும். உயர்ந்த பதவிகளுக்கு நான்காம் இட அதிபதியின் பலம், ஐந்து மற்றும் பத்து இடங்களுடனான தொடர்பு முக்கியம்.
(8 / 10)
குரு-மங்கள யோகம், குரு-சந்திர யோகம், கஜகேசரி யோகம், சிவராஜ யோகம், தர்ம கர்மாதிபதி யோகம் போன்றவை இருந்தால், பதவி, புகழ், கௌரவம் மற்றும் அந்தஸ்து கிடைக்கும். இவை அரசியல் மட்டுமல்ல, வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையவும் உதவும்.
(9 / 10)
சிலருக்கு அரசியலில் ஆரம்பத்தில் வேகமாக வளர்ச்சி ஏற்பட்டு, பின்னர் வீழ்ச்சி ஏற்படலாம். சிலர் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே அரசியலில் இருந்து பின்னர் பொது வாழ்விலிருந்து விலகலாம். இதற்கு கிரக அமைப்புகளும் தசாபுத்தியும் காரணமாக அமைகின்றன. ஜாதகத்தில் மேற்கூறிய விதிமுறைகளில் 5 முதல் 7 விதிகள் பொருந்தினால் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். 2 முதல் 3 விதிகள் மட்டும் பொருந்தினால் சிறிய பதவிகளே கிடைக்கும்.
(10 / 10)
அரசியலில் ஈடுபடுவதற்கு முன், ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளை ஆய்வு செய்வது முக்கியம். சாதகமான கிரக அமைப்புகள் இல்லையென்றால், பதவிக்காக செலவு செய்து, போராடி, பகையை ஏற்படுத்துவதை விட அமைதியாக இருப்பது சிறந்தது. ஜாதக ஆய்வு மூலம் அரசியலில் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்களை அறிந்து, புத்திசாலித்தனமாக முடிவெடுக்கலாம்.
மற்ற கேலரிக்கள்