IND vs ENG 4th T20I : இங்கிலாந்துக்கு எதிரான போட்டியை வெல்ல நினைக்கும் சூர்யா! இந்த போட்டியை இலவசமாக எங்கே பார்ப்பது?
இந்தியா -இங்கிலாந்து 4வது டி20 போட்டி எப்போது? போட்டியை இலவசமாக ஆன்லைனிலும் டிவியிலும் எங்கே பார்க்கலாம்?
(1 / 5)
சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடந்த முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தியது. ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. புனேவில் நடக்க இருக்கும் நான்காவது போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. இந்தியா vs இங்கிலாந்து 4 வது டி20 லைவ் ஸ்ட்ரீமிங்கை எந்த சேனல்களில், ஆன்லைனில் பார்ப்பது என்பதை இங்கு பார்ப்போம்.
(PTI )(2 / 5)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. டாஸ் 30 நிமிடங்கள் முன்னதாக அதாவது மாலை 6:30 மணிக்கு போடப்படும்.
(PTI )(3 / 5)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4-வது டி20 போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த போட்டி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும். அதாவது, இந்த விளையாட்டை ஹாட்ஸ்டார் ஆப் மற்றும் இணையதளத்தில் முற்றிலும் இலவசமாகக் காணலாம். இது தவிர, போட்டியின் அனைத்து செய்திகளையும் புதுப்பிப்புகளையும் இந்துஸ்தான் டைம்ஸ செய்தி தளத்தில் காணலாம்.
(PTI)(4 / 5)
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து 12 போட்டிகளில் வெற்றி பெற்றது. அதாவது, இந்திய அணியின் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளது.
(PTI)(5 / 5)
கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னையில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், தொடரின் இடைவெளியை 2-1 என குறைத்தது.
( AFP.)மற்ற கேலரிக்கள்