தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Yawning Facts: மற்றவர் கொட்டாவியை பார்த்ததும் நமக்கும் வருவது ஏன்? கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய பின்னணி இதோ

Yawning Facts: மற்றவர் கொட்டாவியை பார்த்ததும் நமக்கும் வருவது ஏன்? கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய பின்னணி இதோ

May 14, 2024 07:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 14, 2024 07:50 PM , IST

  • Yawning Facts: ஒருவர் கொட்டாவி விடுவதை நேரில் பார்த்தால் நமக்கும் கெட்டாவி வருவது பலருக்கு இயல்பாக நடக்கும் விஷயமாகவே இருந்து வருகிறது. எதனால் இப்படி நிகழ்கிறது என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்

கொட்டாவி என்பது சிலருக்கு இயல்பாக வருவதை காட்டிலும், இன்னொருவர் கொட்டாவி விடுவதை பார்த்த பின்னர் வருவதை தவிர்க்க முடியாது. இதற்கான காரணத்தையும், பொறுப்பையும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது

(1 / 7)

இப்படி ஒருவரை பார்த்து மற்றொருவருக்கு கொட்டாவி வரும் நிகழ்வு குறித்தும், இது ஒரு தொற்று பாதிப்பா என்பது குறித்தும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதுபற்றி சில விஷயங்களை மருத்துவ நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் கண்டறிந்துள்ளனர்

(2 / 7)

ஒருவரிடம் மற்றவருக்கு கொட்டாவி வருவது ஒரு வகையிலான சமூக நடத்தை எனவும், இதற்கு முக்கிய காரணம் நமது உடலில் கண்ணாடி நியூரான்களின் பங்காற்றுவதாகவும் கூறப்படுகிறது. சமூக ரீதியாக மக்கள் குழுக்களாக நடந்து கொள்ள விரும்புகிறார்கள். பழங்காலத்திலிருந்தே, கூட்டமாக வேட்டையாடுவது, தூங்குவது போன்றவை மக்களின் பழக்கம். அது கொட்டாவியில் பிரதிபலிக்கிறது என கூறுகிறார்கள்

(3 / 7)

இந்த சமூக நடத்தைக்கு குறித்து இன்னும் பல உதாரணங்களும் இருக்கின்றன. யாராவது ஒரு பெண்ணையோ அல்லது குழந்தையையோ அடித்தால், அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களும் வலியை உணரலாம். அதே வழியில், ஒருவரின் சோர்வு மற்றொருவருக்கு பரவுகிறது. அதற்கான உதாரணமாக கொட்டாவி இருக்கிறது

(4 / 7)

கொட்டாவி என்பது மனிதர்களுக்கு மட்டுமானது இல்லை. சுவிட்சர்லாந்து நகரான சூரிச்சில் சிம்பன்சிகள் பற்றிய ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில், சிம்பென்சிகள் கொட்டாவி விடுவது போன்ற வீடியோ காட்டப்பட்டது. இதை பார்த்த பொதுமக்களில் ஐந்தாறு பேரும் கொட்டாவி விடுகிறார்கள்

(5 / 7)

நாம் எப்போதும் குழுக்களாக சிந்திக்கிறோம். மறுநாள் வேட்டையாடுவதுதான் முதல் காரியம். பின்னர் மாலையில் ஒன்றாக தூங்குவது. காலையில் ஒன்றாக எழுந்திப்பது, ஒன்றாக சாப்பிடுவது. நேரத்தை இப்படி செலவழிக்க வேண்டும் என்ற பொதுபுத்தி இருப்பது போல் கொட்டாவியும் அதுதொடர்பானதாகவே இருப்பதாக மனோத்தத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்

(6 / 7)

கொட்டாவி என்பது நாம் நினைப்பது இல்லை. ஆனால் அவை ஆழ் மனதில் அல்லது மரபணுக்களில் இருக்கும். மற்றவர்களிடம் கொட்டாவி விடுவது அப்படிப்பட்ட ஒன்று. காலங்காலமாக நமது பழக்கங்களில் இதுவும் ஒன்று. ஒன்றாக உறங்க வேண்டும் என்பது கட்டளை. அதனால் மற்றவர்கள் கொட்டாவி விடுவதைப் பார்க்கும்போது நாமும் கொட்டாவி விடுகிறோம்

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்