அட்சய திருதியை 2025: இந்த ஆண்டில் எப்போது அட்சய திருதியை? இந்த மங்களகரமான நாளில் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விஷயங்கள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அட்சய திருதியை 2025: இந்த ஆண்டில் எப்போது அட்சய திருதியை? இந்த மங்களகரமான நாளில் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விஷயங்கள்

அட்சய திருதியை 2025: இந்த ஆண்டில் எப்போது அட்சய திருதியை? இந்த மங்களகரமான நாளில் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விஷயங்கள்

Published Apr 16, 2025 03:02 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Apr 16, 2025 03:02 PM IST

  • இந்துக்களின் புனிதநாளாக இருந்து வரும் அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுகிறது. மங்களகரமான இந்த நாள் பற்றி முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்

ஆண்டு தோறும் சித்திரை மாதம் வரக்கூடிய வளர்பிறை திருதியை திதி அட்சய திருதியையாக கொண்டாடப்படுகிறது. வேத நம்பிக்கைகளின்படி, இந்த புனித நாளில் ஏதேனும் மங்களகரமான வேலைகள் செய்யப்பட்டால், அது என்றென்றும் தீர்ந்து போகாது. எனவே, இந்த நாளில் தங்கம் அல்லது வெள்ளி நகைகள் வாங்கப்படுகின்றன. இதன் மூலம் தங்களது வீடுகளில் தங்கம் நிலைத்து இருக்கும் எனவும் நம்பப்படுகிறது. மகா லட்சுமியின் அருள் கடாட்சம் நிறைந்த நாளாகவும் பார்க்கப்படுகிறது

(1 / 6)

பஞ்சாங்கத்தின்படி, இந்த ஆண்டில் அட்சய திரிதியை நாள் ஏப்ரல் 29 அன்று மாலை 5:32 மணிக்கு தொடங்கி ஏப்ரல் 30 அன்று பிற்பகல் 2:13 மணி வரை தொடர்கிறது. இருப்பினும், உதய திதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது, எனவே நாள் முழுவதும் நடைபெறும் அட்சய திருதியை விழா ஏப்ரல் 30 அன்று கொண்டாடப்படும். இந்த நாளில், திருமணம், வீடு, வாகனம் அல்லது சொத்து வாங்குவது, தொழில் தொடங்குவது போன்ற செயல்களை மக்கள் மங்களகரமானதாகக் கருதுகின்றனர்

(2 / 6)

மத நம்பிக்கைகளின்படி, சத்ய யுகம், திரேதா யுகம் மற்றும் துவாபர யுகம் ஆகியவை அட்சய திருதியை நாளில் தொடங்குகின்றன. இந்த நாளில், விஷ்ணு பரசுராமராக அவதரித்தார் என்றும், கங்கை தாயும் இந்த நாளில் பூமியில் அவதரித்தார் என்றும் கூறப்படுகிறது

(3 / 6)

இந்த நாளில் தங்கம் மற்றும் வெள்ளி வாங்கும் பாரம்பரியம் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நாளில் வாங்கப்பட்ட பொருட்கள் வீட்டுக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாகவும், செல்வத்தை அதிகரிப்பதாகவும் நம்பப்படுகிறது. எனவே இந்த நாளில் குறைந்த அளவில் தங்கம் வாங்குவது சம்பிரதாயமாகவே கருதப்படுகிறது

(4 / 6)

அட்சய திருதியை நாளில் செய்யக்கூடாத விஷயங்களும் சில உள்ளன. அதன்படி, இந்த நாளில் எதையும் கடன் வாங்ககூடாது. யார் ஒருவரையும் திட்டக்கூடாது. தங்கம் வாங்கவோ அல்லது வெள்ளி வாங்கவோ கிரடிட் கார்ட்டை பயன்படுத்த கூடாது

(5 / 6)

அட்சய திருதியை நாளில் மகா லட்சுமியின் அம்சமாக உள்ள உப்பை வாங்குவது வீட்டில் உள்ள திருஷ்டி தோஷத்தை நீக்கும். அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற உணவு பொருட்களை வாங்கலாம்.  சர்க்கரை பொங்கல், தண்ணீரை சுவாமிக்கு நெய்வைத்தியமாக படைக்கலாம். இந்த நாளில் அன்னதானம் செய்வது உங்கள் வீட்டில் தானிய பிரச்னைகள் நீங்கும்.  தொழில் சார்ந்த புதிய முயற்சிகளை தொடங்கலாம்

(6 / 6)

Muthu Vinayagam Kosalairaman

TwittereMail
கோ. முத்து விநாயகம், தலைமை கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் 17+ ஆண்டுகள் அணுபவம் மிக்கவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், கிரிக்கெட், விளையாட்டு, லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சென்னை பல்கலைகழகத்தில் இளங்கலை காட்சிவழி தொடர்பியல், அண்ணா பல்கலைகழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் பிரிவில் பட்டம் பெற்று இவர், 2007 முதல் ஊடகத்துறையில் இருந்து வருகிறார். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளட்ஸ் இணையத்தளம், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை பணியாற்றிய அணுபவம் மிக்கவர். மக்கள் தொலைக்காட்சி, இந்தியாகிளிட்ஸ், ஈடிவி பாரத் ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து 2021 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்