தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Shaving Cause Infertility: அடிக்கடி சேவிங் செய்வதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா? - ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி

Shaving Cause Infertility: அடிக்கடி சேவிங் செய்வதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுமா? - ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி

May 11, 2024 08:09 PM IST Marimuthu M
May 11, 2024 08:09 PM , IST

  • Shaving Cause Male Infertility: அடிக்கடி தாடி மற்றும் மீசையை சேவிங் செய்வது ஆண்களுக்கு மலட்டுத் தன்மையை உண்டாக்குவதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து ஆராய்ச்சி மாணவர்கள் கூறிய கருத்துகளின் தொகுப்பு!

குழந்தைகளைப் பெற்றெடுக்கும் திறன் பலரிடையே படிப்படியாக குறைந்து வருவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இது தொடர்பான பிரச்னைகளில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. இந்தப் பிரச்னைக்கு நிச்சயமாக சிகிச்சை உள்ளது, ஆனால், அதற்கு சில காலம் தேவை. எனவே, இதற்கான காரணங்களை அறிந்து தீர்வு காண்பது அவசியம். அதுவே, பல பிரச்னைகளைக் குறைக்கும்.  

(1 / 7)

ஒழுங்கற்ற உணவு, அதிகப்படியான மன அல்லது உடல் அழுத்தம் தவிர, வேறு பல காரணங்களும் ஆண்களின் பாலியல் சக்தி மற்றும் குழந்தை உற்பத்தியைக் குறைக்கலாம். சமீபத்தில், ஒரு விசித்திரமான காரணம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரணம் என்னவென்று படியுங்கள்.

(2 / 7)

அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, ஆண்களின் மலட்டுத்தன்மையை அதிகரிக்கும் காரணிகளில், அடிக்கடி தாடியை ஷேவ் செய்யும் பழக்கமும் முக்கிய காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இப்போது எந்த தவறின் காரணமாக இந்த பிரச்னை அதிகரித்து வருகிறது என்பதை கீழே படிப்போம்.

(3 / 7)

வீட்டிலோ அல்லது சலூனிலோ தாடி, மீசையை சேவிங் செய்யும்போது, பலர் வாசனை திரவியம், விலையுயர்ந்த ஷேவிங் கிரீம் மற்றும் ஷேவிங்கிற்கு பின்னான ஜெல் ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . இது தான் ஆண்களின் மலட்டுத்தன்மையுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

(4 / 7)

 கலிபோர்னியா பல்கலைக்கழகம் போன்ற மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பெரும்பாலான ஷேவிங் கிரீம்கள் அதிகப்படியான ரசாயனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கின்றன என்று தங்கள் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

(5 / 7)

ரசாயனங்கள் கலந்த இந்த கிரீம்களை பயன்படுத்துவதால், விந்தணுக்களின் உற்பத்தி திறன் குறைவதோடு, சருமப் பாதிப்பும் ஏற்படும் என ஆய்வுகள் அதிகரிக்கின்றன. பல ஷேவிங் கிரீம்களில் ’ஃப்தாலேட்’ எனப்படும் ஒரு வகை வேதிப்பொருள் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க இந்த இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை விந்தணு புரதங்களை உடைக்கிறது. இதன் விளைவாக, ஆண்களுக்கு விந்தணு எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படுகிறது.

(6 / 7)

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பொதுவாக ஒரு விந்தணு முதிர்ச்சியடைய 72 நாட்கள் ஆகும். ஃப்தாலேட் நிரம்பிய கிரீமின் தாக்கத்தால் இந்தச் செயல்முறை தடைபடுகிறது. இதன் விளைவாக, விந்தணுக்களின் எண்ணிக்கை குறையலாம். அது மட்டுமல்லாமல், விந்தணுவும் செயல்திறனை இழக்கக்கூடும். இதன் விளைவாக, ஆண்களுக்கு மலட்டுத்தன்மைப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்