Guru Suryan Luck: குரு - சூரியன் இணைவு.. பாவிகள் தொடர்பின்மை இருந்தா போதும்.. மடியேறும் வரும் சிவராஜயோகம் யாருக்கு?
Guru Suryan Luck: குருவுடன் சூரியன் இணையும் போது, நிச்சயமாக சிவராஜ யோகம் கிடைக்கும். காலச்சக்கரத்திற்கு 5 ம் இடத்திற்கு உடையவர் சூரியன். காலச்சக்கரத்திற்கு 9 ற்கு உடையவர் குரு. - மடியேறும் வரும் சிவராஜயோகம் யாருக்கு?
(1 / 5)
Guru Suryan Luck: குரு - சூரியன் இணைவு.. பாவிகள் தொடர்பின்மை இருந்தா போதும்.. மடியேறும் வரும் சிவராஜயோகம் யாருக்கு?
(2 / 5)
கிரங்கங்களில் முழு சுபராக அறியப்படகூடிய கிரகம் குரு. குரு அருள் என்பது ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியம் ஆகும். குழந்தை ஜனனம், மனசாட்சியோடு நடந்து கொள்ளுதல் உள்ளிட்டவற்றை குறிக்கும் கிரகமாக குரு வருகிறார். குரு எல்லா கிரகங்களுக்கும் நன்மை செய்யுமா என்றால் நிச்சயமாக கிடையாது.
(3 / 5)
சில கிரகங்களுடன் இணையும் போது, அது வேறு மாதிரியான பலன்களை கொடுக்கும். குருவுடன் சேர்ந்த கிரகங்கள் செய்யும் வேலையானது நிச்சயமாக மாயஜாலமாக இருக்கும். குருவுடன் சூரியன் இணையும் போது, நிச்சயமாக சிவராஜ யோகம் கிடைக்கும். காலச்சக்கரத்திற்கு 5 ம் இடத்திற்கு உடையவர் சூரியன். காலச்சக்கரத்திற்கு 9 ற்கு உடையவர் குரு.
(4 / 5)
இரண்டு பேரும் இணையும் போது, அந்த ஜாதககாரருக்கு இயல்பாகவே ஆன்மிக நாட்டம் அதிகமாக இருக்கும். உதவும் குணம் படைத்தவராக இருப்பார். மனசாட்சிக்கு பயந்தவராக இருப்பார். அதே சமயம் ஈகோவின் ஒட்டுமொத்த உருவமாக இருப்பார். சின்ன பிரச்சினை என்றாலும், சம்பந்தப்பட்ட நபரை அப்படியே வெட்டித்தூக்கி விடுவார்.
(5 / 5)
அன்னதானம், தானம் தர்மம் செய்தல் உள்ளிட்டவற்றில் அதிக ஈடுபாடோடு இருப்பார்கள். இவர்கள் எங்கு இருக்கிறாரோ அங்கு முக்கியஸ்தராக இருப்பார்கள். அவர்களுடைய குழந்தைகளும், அதே போல அவர்களது பெற்றோரும் உயர்தரவரிசையில் இருப்பார்கள். ஆனால் இவர்களுக்கு ஜாதகத்தில் பாவிகள் தொடர்பு இருக்கக்கூடாது. பிறவை சரியாக அமைந்து விட்டால், இந்த பிறவி அவர்களுக்கு புகழ் தரும் பிறவியாக இருக்கும். பிரதோச வழிபாட்டை இவர்கள் தொடர்ந்து செய்து வரும் போது, அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டே போகும். மலைமேல் இருக்கும் சிவன் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள்.
மற்ற கேலரிக்கள்