Swallowing Chewing Gum: பப்ள்கம்மை தெரியாமல் விழுங்கிவிட்டால் என்ன நடக்கும்? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்
- Swallowing Gum: பபுள்காம் மெல்லும்போது தெரியாமல் விழுங்கிவிட்டால் என்னாகும் என்கிற அச்சம் பலருக்கு உள்ளது. வயிற்றுக்குள் சிக்கி விடுமா என்கிற கேள்வியையும் தவிர்க்க முடியாது
- Swallowing Gum: பபுள்காம் மெல்லும்போது தெரியாமல் விழுங்கிவிட்டால் என்னாகும் என்கிற அச்சம் பலருக்கு உள்ளது. வயிற்றுக்குள் சிக்கி விடுமா என்கிற கேள்வியையும் தவிர்க்க முடியாது
(1 / 8)
வாயில் எப்போதும் பபுள்காம் மெல்லும் பழக்கம் சிலரிடையே இருந்து வருவது இயல்பான விஷயமாக உள்ளது. அதே சிறுவர்களாலும் விரும்பி சாப்பிடுவதாக பபுள்காம் உள்ளது. வாய் துர்நாற்றத்தைப் போக்க பலர் சூயிங்கம் சாப்பிடுகிறார்கள். முகத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும் சிலர் அதை அடிக்கடி மெல்லுகிறார்கள். சில சமயங்களில் பபுள்காம் ஆபத்துகளையும் விளைவிக்கும்
(2 / 8)
பபுள்காம் மெல்லும்போது தெரியாமல் விழுங்கிவிட்டால் சிறுவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் செரிமானத்தில் சிக்கல் ஏற்படும் என்பதால் ஆபத்து தான் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்
(3 / 8)
நாம் விழுங்கும் பபுள்காம் சில சமயங்களில் வயிற்று பகுதியிலேயே நீண்ட் காலம் நிலைத்திருக்க நேரிடும். சில சமயங்களில் எதாவது இடத்தில் சிக்கி கொள்ளவும் வாய்ப்பு உள்ளது
(4 / 8)
இதுதொடர்பாக அமெரிக்காவிலுள்ள நியூயார்க் மருத்துவ மையம் நடத்திய ஆய்வில், தெரியாமல் பபுள்காம் விழுங்கிவிட்டால் எந்த பதட்டமும் அடைய வேண்டாம். மற்ற உணவுகளை போல் அது செரிமான ஆகிவிடும் என்றாலும், அதற்கான கால நேரம் அதிகமாகும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது
(5 / 8)
செரிமான அமைப்புகளில் இருக்கும் அமிலங்கள், நொதிகள் அனைத்து வகையான உணவுகளையும் செரிமானம் செய்ய உதவி புரிகின்றன
(6 / 8)
வழக்கமாக நாம் சாப்பிடும் உணவுகள் சில மணி நேரங்களில் செரிமானம் ஆகிவிடும். ஆனால் பபுள்காமை பொறுத்தவரை இரண்டு முதல் மூன்று நாள்கள் ஆகும் எனவும், சிலருக்கு ஒரு வார காலம் வரை ஆகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது
(7 / 8)
அரிதாக சிலருக்கு மலம் கழிக்கும்போது வெளியேறிவிடும். அவ்வாறு வெளியேறாவிட்டால் செரிமானம் ஆகி வெளியேறும்
மற்ற கேலரிக்கள்