Chandra Adhi Yogam: ‘புகழ்.. அந்தஸ்து.. பணம்.. அரச வாழ்வு தரும் சந்திர அதியோகம்..’ - யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Chandra Adhi Yogam: சந்திரன் இரவை குறிப்பவனாக இருக்கிறான். அதனால் ஜாதகத்தில் சந்திரனின் பலம் அதிகமாக உள்ளவர்கள்!- சந்திர அதியோகம் கொடுக்கும் பலன்கள்!
(1 / 5)
Chandra Adhi Yogam: ‘புகழ்.. அந்தஸ்து.. பணம்.. அரச வாழ்வு தரும் சந்திர அதியோகம்..’ - யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
(2 / 5)
சந்திர அதியோகம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்து பிரபல ஜோதிடர் அவிநாசி ஜோதிலிங்கம் கடந்த 3 வாரங்களுக்கு முன்னதாக மந்திரா சேனலில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “சந்திரனை வைத்துதான் நாம் ராசியை மையப்படுத்துகிறோம். ஒரு ஜாதகக்காரர் என்ன ராசியில் பிறந்திருக்கிறார் என்பதை சந்திரன்தான் அடையாளம் காண்பிப்பார்.
நாம் நம் வாழ்க்கையில், அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு சந்திரன் மிக முக்கியமான கிரகமாக இருக்கிறது. குணத்தில் மனோகாரகனாக இருக்கக்கூடிய சந்திரபகவான் சளி, வீசிங் உள்ளிட்ட வியாதிகளுக்கு அறிகுறியாக இருப்பவன்.
சந்திரன் இரவை குறிப்பவனாக இருக்கிறான். அதனால் ஜாதகத்தில் சந்திரனின் பலம் அதிகமாக உள்ளவர்கள், இங்கு பகலாக இருக்கும் பொழுது, எந்த நாட்டில் இரவு இருக்கிறதோ, அந்த நாட்டில் பிசினஸ் செய்வார்கள் அல்லது இவர்களது சொந்தக்காரர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
சந்திரனை இரு வகைகளாக பிரிக்க முடியும். மற்ற கிரகங்களை அப்படி பிரிக்க முடியாது. சந்திரனை வளர்பிறை சந்திரன் என்றும் தேய்பிறை சந்திரன் என்றும் பிரிக்கலாம். தேய்பிறை சந்திரனின் சந்திர பகவான் பாவியாகவும், வளர்பிறை சந்திரனில், சந்திர பகவான் முழு சுபராகவும் இருக்கிறார். சந்திரனோடு குரு இணைந்து விட்டால் அந்த ஜாதகக்காரர் சமூகத்தில் புகழோடும், அந்தஸ்தோடும் வாழ்வார்.
சந்திரன் முழுக்க முழுக்க மனதை குறிப்பவனாக இருக்கிறான். அதனால் ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்துவிட்டால், அவர்களுக்கு மனமானது தெளிவாக இருக்கும். தீர்க்கமாக, தெளிவாக முடிவெடுப்பார்கள். சந்திரன் இடமாற்றத்தையும் பயணத்தையும், கொடுப்பவனாக இருக்கிறான். அதனால் சந்திரன் பலமாக இருப்பவர்களுக்கு நிறைய பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
சந்திரன் குரு பார்வையில் நல்லபடியாக இருந்து விட்டால், அவர்களுக்கு அம்மா, மாமியார் உள்ளிட்டோர் தெய்வமாக இருப்பார்கள். குழப்பம் இல்லாமல் மற்றவர்களுக்கு அறிவுரை கொடுக்கக்கூடிய நபராக இவர்கள்விளங்குவார்கள். சந்திரன் தான் மதிநுட்ப காரகன். சந்திரனை குரு பார்க்கும் பொழுது, நல்ல ஞாபக சக்தியை கிடைக்கும்.
இப்படிப்பட்ட சந்திரன் ஜாதகக்காரருக்கு ஒரு யோகத்தை கொடுக்கிறார். அதுதான் சந்திர அதியோகம். சந்திரனிலிருந்து எண்ணி வருகின்ற ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் இருந்தால், உங்களுக்கு சந்திர அதியோகம் கிடைக்கும். இந்த யோகத்தால் சமுதாயத்தில் புகழ், செல்வநிலை, சமுதாய உயர்வு, அந்தஸ்து, கௌரவம் மதிக்கத்தக்க நபராக வாழ்தல் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பை கொடுப்பதும் இந்த சந்திரன் தான். 6,7, 8 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் இருந்து,அதனுடைய தசாவோ, புத்தியோ வரும்பொழுது தான் சந்திர அதியோகம் மிக அதிகமாக வேலை செய்யும்.
(3 / 5)
சந்திரன் இரவை குறிப்பவனாக இருக்கிறான்.அதனால் ஜாதகத்தில் சந்திரனின் பலம் அதிகமாக உள்ளவர்கள். இங்கு பகலாக இருக்கும் பொழுது, எந்த நாட்டில் இரவு இருக்கிறதோ, அந்த நாட்டில் பிசினஸ் செய்வார்கள் அல்லது இவர்களது சொந்தக்காரர்கள் அங்கு வேலை செய்து கொண்டிருப்பார்கள்.
சந்திரனை இரு வகைகளாக பிரிக்க முடியும். மற்ற கிரகங்களை அப்படி பிரிக்க முடியாது. சந்திரனை வளர்பிறை சந்திரன் என்றும் தேய்பிறை சந்திரன் என்றும் பிரிக்கலாம். தேய்பிறை சந்திரனின் சந்திர பகவான் பாவியாகவும், வளர்பிறை சந்திரனில், சந்திர பகவான் முழு சுபராகவும் இருக்கிறார். சந்திரனோடு குரு இணைந்து விட்டால் அந்த ஜாதகக்காரர் சமூகத்தில் புகழோடும், அந்தஸ்தோடும் வாழ்வார்.
(4 / 5)
சந்திரன் முழுக்க முழுக்க மனதை குறிப்பவனாக இருக்கிறான். அதனால் ஒருவருக்கு ஜாதகத்தில் சந்திரன் பலமாக இருந்துவிட்டால், அவர்களுக்கு மனமானது தெளிவாக இருக்கும். தீர்க்கமாக, தெளிவாக முடிவெடுப்பார்கள். சந்திரன் இடமாற்றத்தையும் பயணத்தையும், கொடுப்பவனாக இருக்கிறான். அதனால் சந்திரன் பலமாக இருப்பவர்களுக்கு நிறைய பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும்.
சந்திரன் குரு பார்வையில் நல்லபடியாக இருந்து விட்டால், அவர்களுக்கு அம்மா, மாமியார் உள்ளிட்டோர் தெய்வமாக இருப்பார்கள். குழப்பம் இல்லாமல் மற்றவர்களுக்கு அறிவுரை கொடுக்கக்கூடிய நபராக இவர்கள்விளங்குவார்கள். சந்திரன் தான் மதிநுட்ப காரகன். சந்திரனை குரு பார்க்கும் பொழுது, நல்ல ஞாபக சக்தியை கிடைக்கும்.
(5 / 5)
இப்படிப்பட்ட சந்திரன் ஜாதகக்காரருக்கு ஒரு யோகத்தை கொடுக்கிறார். அதுதான் சந்திர அதியோகம். சந்திரனிலிருந்து எண்ணி வருகின்ற ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் இருந்தால், உங்களுக்கு சந்திர அதியோகம் கிடைக்கும். இந்த யோகத்தால் சமுதாயத்தில் புகழ், செல்வநிலை, சமுதாய உயர்வு, அந்தஸ்து, கௌரவம் மதிக்கத்தக்க நபராக வாழ்தல் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பை கொடுப்பதும் இந்த சந்திரன் தான். 6,7, 8 ஆகிய இடங்களில் சுப கிரகங்கள் இருந்து,அதனுடைய தசாவோ,புத்தியோ வரும்பொழுது தான் சந்திர அதியோகம் மிக அதிகமாக வேலை செய்யும். ஆனால் இதில் ஒரு விதி இருக்கிறது. அவர் லக்னத்திற்கு சுபராக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், வேலை செய்ய மாட்டாரா என்று கேட்டால், அதனுடைய பலன் மிகவும் குறைவாக இருக்கும்.” என்று பேசினார்.
மற்ற கேலரிக்கள்