தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  90's Kids Marriage: 90-களில் பிறந்தவர்களுக்கு திருமணம் தள்ளிப்போக காரணங்கள் என்ன மற்றும் யார் மாறவேண்டும்?

90's Kids Marriage: 90-களில் பிறந்தவர்களுக்கு திருமணம் தள்ளிப்போக காரணங்கள் என்ன மற்றும் யார் மாறவேண்டும்?

Jul 01, 2024 03:33 PM IST Marimuthu M
Jul 01, 2024 03:33 PM , IST

  • 90's Kids Marriage: 90-களில் பிறந்தவர்களுக்கு திருமணம் தள்ளிப் போவதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்துப் பார்ப்போம். இதில் இருக்கும் உளவியல் ரீதியிலான சிக்கல்களில் யார் மாறவேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.

90-களில் பிறந்த வரன்களுக்கு ஜாதகப் பொருத்தம் 95% பொருத்தம் இருக்கவேண்டும் என நினைக்கிறோம். அதைத்தவிர்த்து 55 விழுக்காடு முக்கியப்பொருத்தம் இருந்தால்கூட திருமணத்தை முடிக்கலாம். 

(1 / 9)

90-களில் பிறந்தவர்கள் பலரும் எமோஷனலானவர்கள், தன் எமோஷனலான உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் வாழ்க்கைத்துணை கிடைக்காததால் திருமணத்தைத் தவிர்க்கின்றனர். அப்படி அமையும்பட்சத்தில் எமோஷனல் சப்போர்ட் தருவது முக்கியம்.

(2 / 9)

நம் மகனுக்கோ, மகளுக்கோ ஒரு  ஊருக்குள்ளேயே வரன் கொடுக்க/ எடுக்க வேண்டும் எனும் சிந்தனையைத் தூக்கிபோடுங்கள். தூரம், தொலைவைப் பார்க்காமல் நம் பிள்ளைகள் நலமுடன் இருந்தால்போதும் என்று நினைத்து, நல்ல வரன் அமைந்தால் திருமணத்தை முடியுங்கள்.

(3 / 9)

திருமணத்தில் மிக முக்கியம் ஜாதகத்தைத் தாண்டி, மனப்பொருத்தம். இந்த மனப்பொருத்தம் சரிவர அமையாததால் பலருக்கு கல்யாணப்பேச்சுகள் நிச்சயம் வரை சென்றாலும் கல்யாணம் கைகூடுவதில்லை. ஆனால், இதை நிச்சயத்துக்கு முன்பே கணித்து பெற்றோரிடம் பிள்ளைகள் சொல்லிவிட வேண்டும். 

(4 / 9)

90-களில் பிறந்த வரன்கள் பலருக்கு நிதி நிலைமையில் பார்க்கையில் பெரியளவில் செட்டில் ஆகி இருக்கமாட்டார்கள். சொந்தவீடு வாங்கியிருக்கமாட்டார்கள். அதைப் புரிந்துகொண்டு வரன் நேர்மையானவரா என்பதைப் பார்த்து முடிக்கலாம். 

(5 / 9)

அப்படி நிதி நிலையில் ஓரளவு செட்டில் ஆகிவந்தாலும் வயது கூடிவிட்டது என்பதை வைத்து, அவரை சிலர் புறக்கணிப்பதால் 90களில் பிறந்தவர்களுக்கு திருமணம் தாமதம் ஆகிறது. அப்படி இருக்கையில், அதை ஒரு பொருட்டாக எடுக்காமல் வரன் நல்லவரா, நம் மகளை நல்லமுறையில் வைத்துப் பார்த்துக்கொள்வரா என்பதைப் பார்த்து மணமுடிக்கலாம்.

(6 / 9)

 90-களில் பிறந்த வரன்கள் பலர் கண்ணாடி அணிந்துள்ளனர், முடி நரைத்துள்ளது, சிலருக்கு வழுக்கை இருக்கிறது, சிலருக்கு தொப்பை கூட இருக்கிறது. ஆனால், ரிலேஷன்ஷிப் என்பது இரு மனம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதை மட்டும் பெற்றோர் உணர்ந்தால், கண்டிப்பாக 90-களில் பிறந்தவர்களுக்கு பெண்ணோ/ஆணோ கொடுத்துவிடுவார்கள். அதைத் திருமணம் செய்துகொள்பவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

(7 / 9)

Age is Just Number எனும் வாய் வார்த்தை மட்டுமல்ல, அது ஒரு வாழ்வியல். வயதை வைத்து ஆண்களையோ,பெண்களையோ தட்டிக்கழிப்பது தவறானது. ஆணைவிட பெண் வயது அதிகமாக இருந்தால்கூட அது ஒரு பெரிய விஷயமில்லை எனும் உளவியல் புரிதல் தேவை.

(8 / 9)

திருமணம் என்பது முழுக்க முழுக்க மனது சார்ந்த விஷயம். ஒருவரின் பொருளாதாரத்தை வைத்து பெண் எடுப்பதோ, பெண் கொடுப்பதோ செய்யாமல் நல்ல குணம், நல்ல குடும்பம் ஆகியவற்றை வைத்து மணமுடிக்கவேண்டும். அதேபோல், திருமணமாகி செல்லும் ஆண்களோ/பெண்களோ நாம் அடிப்படையில் சிரமப்பட்டு வந்தவர்கள் என்பதை மறக்காமல், நடந்துகொள்ளுதல் நன்று. அதைவிடுத்து, புதிதாக ஒரு பணக்கார வீட்டுக்குச் சென்றவுடன் ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு தாம்தூம் செலவுசெய்யக்கூடாது. இவையெல்லாம் தான், 90-களில் பிறந்தவர்களுக்குத் திருமணம் ஆக தடையாக இருக்கும் காரணங்கள். இதனை உரியவர்கள் சரிசெய்துகொள்ளவேண்டும்.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்