தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Spiritual: கோயிலுக்கு போகும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

Spiritual: கோயிலுக்கு போகும் போது கடைபிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

May 19, 2024 03:59 PM IST Karthikeyan S
May 19, 2024 03:59 PM , IST

  • கோயிலுக்கு என்று சில ஆகமங்கள் இருக்கின்றன. கோயிலுக்குச் போகும் போது ஒரு சில வழக்கங்களை பின்பற்ற வேண்டும்.

கோயிலுக்கு செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

(1 / 6)

கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும். பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும்.

(2 / 6)

கோயில்களில் சூரியன் உதிப்பதற்கு முன்பு அன்று எடுத்த புது தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு ஆள்காட்டி விரல் நீக்கியே கோலம் போட வேண்டும். கோலமிடும்போது தெற்கே பார்த்து நின்று கோலமிடக் கூடாது. போடுகிற கோடு தெற்கு பக்கமாக முடியக்கூடாது. கோலம் அழகாகப் போட வேண்டும். அதுவே நல்ல சகுனம் தரும்.

(3 / 6)

கோயில்களில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையை மட்டும் நீட்டி வாங்கக் கூடாது. வலது கையின் கீழ் இடது கையை வைத்து பணிவுடன் விபூதி, குங்குமம் பிரசாதத்தை வாங்க வேண்டும். வலது கையில் வாங்கியவுடன் அந்தப் பிரசாதத்தை அப்படியே பூச வேண்டும் அல்லது ஒரு தாளில் போட்டு அதிலிருந்து எடுத்து பூச வேண்டும். 

(4 / 6)

கோயில் நடை சாத்தி இருக்கும்போதும், உத்ஸவர் உலா வந்திருக்கும்போதும், சுவாமி முன் திரை போடப்பட்டிருக்கும் போதும் கோயிலுக்குள் சென்று மூலவரை தரிசனம் செய்யக் கூடாது.

(5 / 6)

நவக்கிரகங்களை 9 முறை சுற்றுவது நல்லது. அப்படிச் சுற்றும்போது 7 முறை வலமாகவும், 2 முறை இடமாகவும் சுற்ற வேண்டும். நவக்கிரகங்களை வணங்கிய பின்னர் பிற தெய்வங்களை வணங்கக் கூடாது. எல்லா தெய்வங்களையும் வணங்கிய பின்தான் நவக்கிரகங்களை வழிபட வேண்டும்.

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்