Vinayagar Worship: எந்த மரத்தடி விநாயகரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் தொியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vinayagar Worship: எந்த மரத்தடி விநாயகரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் தொியுமா?

Vinayagar Worship: எந்த மரத்தடி விநாயகரை வணங்கினால் என்ன பலன் கிடைக்கும் தொியுமா?

Jan 04, 2024 07:31 PM IST Karthikeyan S
Jan 04, 2024 07:31 PM , IST

  • முழுமுதற் கடவுளான விநாயகரை வழிபட அனைத்து செல்வங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.

எந்தெந்த மரத்தடி விநாயகரை வணங்கினால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

(1 / 7)

ஆலமரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை வழிபட கடுமையான நோய்கள் அகலும். இந்த விநாயகரை பக்தியுடன் வழிபட ஞாலம் போற்றும் வாழ்வு அமையும்.

(2 / 7)

வேப்ப மரத்தடி விநாயகரை வழிபட மனதுக்குப் பிடித்த வாழ்க்கை துணை அமையும்.

(3 / 7)

அரச மரத்து நிழலில் வீற்றிருக்கும் விநாயகரை வணங்கினால் வினைகள் அகலும் என்பது நம்பிக்கை. அரச மரத்தடி விநாயகரை வழிபட குழந்தை பாக்கியம் கிட்டும்.

(4 / 7)

வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகர் சிவ சொரூபமாக கருதப்படுகிறார். இவரை சதுர்த்தி நாளில் வழிபட்டு ஏழைகளுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்களை தானமாகக் கொடுத்து வில்வ மரத்தை வலம் வர தம்பதிகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகும் என்பது நம்பிக்கை.

(5 / 7)

நெல்லி மரத்தடி விநாயகர்: பெண் குழந்தை வேண்டுவோர் நெல்லி மரத்தடி விநாயகரை வழிபடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

(6 / 7)

வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை காண்பது அரிது. வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் விநாயகரை வழிபட வெற்றி நிச்சயம் என்பதும், குடும்ப ஒற்றுமை மற்றும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்