Palli Vilum Palankal: நம் உடலின் பாகங்களில் எங்கெங்கு பல்லி விழுந்தால் என்னென்ன பலன்கள் தெரியுமா?
- Palli Vilum Palankal: பல்லி உடலின் பல்வேறு பகுதிகளில் விழுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து அறிந்துகொள்வோம்.
- Palli Vilum Palankal: பல்லி உடலின் பல்வேறு பகுதிகளில் விழுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்து அறிந்துகொள்வோம்.
(1 / 6)
பல்லி நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் சர்வ சாதாரணமாக ஊரக்கூடிய ஊர்வன வகுப்பைச் சார்ந்த உயிரினம் ஆகும். பல்லி நம் உடலின் சில பாகங்களில் விழுவதை வைத்து சொல்லக் கூடிய பலன்கள் பற்றி, கவுளி சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிட ரீதியாக பல்லி நம் வீட்டில் ஊர்வது, நம் வீட்டில் பாஸிடிவ் சக்தி நிறைந்திருப்பதை மறைமுகமாக சுட்டுகிறது என்கின்றனர், நிபுணர்கள். அதேபோல் ஒருவர் ஒன்றை நினைக்கும்போது, பல்லி எனப்படும் கவுளி சத்தமிட்டால் அது நடக்கும் எனவும் இந்து மரபில் கூறப்படுகிறது. பல்லியை, கர்நாடக மாநிலத்தில் சிலர் கடவுளாக வழிபடுகின்றனர். பல்லி, மகாலட்சுமியின் அம்சமாகவும் பார்க்கப்படுகின்றது. இப்படிப்படும் பல்லி நமது உடலில் எங்கு விழுந்தால் என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கின்றன என்பது குறித்துப் பார்ப்போம்.
(2 / 6)
பல்லியானது தலையில் விழுந்தால் பலரும் மரணம் நிகழும் எனக் கூறுகின்றனர். அது தவறு. பல்லி தலையின் வலது பக்கம் விழுந்தால் வீட்டில் தேவையற்ற பிரச்னைகள் நிகழும். சண்டை மட்டுமே வரும். இடது பக்கம் விழுந்தால் அது நம் வாழ்வில் துன்பம் வரப்போகிறது என்பதை மறைமுகமாக சுட்டுகிறது என்பது பொருள்.
(3 / 6)
பாதத்தில் வலது பக்கமாக பல்லி விழுந்தால் நோய் வரும். இடது பக்கமாக,பல்லி விழுந்தால், துக்கம் வரும். உதட்டில் வலது பக்கமாக பல்லி விழுந்தால் கஷ்டமும், இடது பக்கமாக பல்லி விழுந்தால் பணம் மற்றும் செல்வமும் வரவாய் வரப்போகிறது என்று அர்த்தம்.
(4 / 6)
வயிற்றுப் பகுதியின் வலது பக்கத்தில் பல்லி விழுந்தால், தானியம் வரவு கிடைக்கப்போகிறது எனவும், இடது பக்கம் பல்லி விழுந்தால் மகிழ்ச்சி உண்டாகப்போகிறது எனவும் கூறப்படுகிறது. கண்ணின் வலது பக்கம் பல்லி விழுந்தால் சுகமான விஷயங்கள் உண்டாகும் எனவும், இடது பக்கம் விழுந்தால் பிரச்னைகளில் சிக்கி சிறை செல்லும் அச்சம் வரும் எனவும் பல்லி விழும் பலனில் கூறப்படுகிறது.
(5 / 6)
மேலும், பல்லியானது காதின் வலது பக்கம் விழுந்தால் ஆயுள் அதிகரிக்கும் எனவும், இடதுபக்கமாக விழுந்தால் லாபம் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கணைக்காலில் வலது பக்கம் பல்லி விழுந்தால், பிரயாணம் செய்ய வேண்டிய சூழல் வரும், கணைக்காலின் இடதுபக்கம் பல்லி விழுந்தால் சுகம் வரும்.
(6 / 6)
மணிக்கட்டின் வலது பக்கம் பல்லி விழுந்தால் பீடையும், இடது பக்கம் பல்லிவிழுந்தால் கீர்த்தியும் உண்டாகும் எனக் கூறப்படுகிறது. நகத்தின் வலது பக்கம் பல்லி விழுந்தால் செலவு அதிகரிக்கும். இடது பக்கம் பல்லி விழுந்தால் நஷ்டம் கூடும். நெற்றியின் வலது பக்கம் பல்லி விழுந்தால் லட்சுமியின் அருளாசியும், இடது பக்கம் பல்லி விழுந்தால் காரியசித்தியும் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்