அவங்க என் வாழ்க்கைக்கு நல்ல துணையாக இருந்தாங்க.. மனைவி சாய்ரா பானு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விஷயம் வைரல்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  அவங்க என் வாழ்க்கைக்கு நல்ல துணையாக இருந்தாங்க.. மனைவி சாய்ரா பானு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விஷயம் வைரல்!

அவங்க என் வாழ்க்கைக்கு நல்ல துணையாக இருந்தாங்க.. மனைவி சாய்ரா பானு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன விஷயம் வைரல்!

Nov 20, 2024 10:36 AM IST Divya Sekar
Nov 20, 2024 10:36 AM , IST

  • சாய்ரா பானு ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஏ.ஆர்.ஒரு நல்ல மனிதர். அவர் அற்புதமானவர். அடக்கமானவர். அவர் ஒரு நல்ல தந்தை. மிகவும் இனிமையானவர். நகைச்சுவை குணம் உடையவர், நல்ல அன்பான அப்பா மட்டும் அல்ல, அன்பான கணவரும் கூட எனக் கூறினார்.

இந்திய மக்கள் மட்டுமின்றி, உலக மக்களாலும் கொண்டாடப்படுபவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தன் இசையாலும், குரலாலும் ஒட்டுமொத்த மக்களையும் கட்டிப் போட்டு வருகிறார்.   ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து பிரிந்து வாழ முடிவெடுத்துள்ளதாக காதல் மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். இந்தத் தகவலை உறுதி செய்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த சமயத்தில் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளியுங்கள் எனக் கூறியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்.

(1 / 8)

ரஹ்மானின் ரசிகர்கள் பலரும் ரஹ்மான் தன் மனைவியுடன் கொடுத்த நேர்காணல்கள், பங்கேற்ற நிகழ்ச்சிகள், புகைப்படங்கள் என ஷேர் செய்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில் அவர்கள் பெரும்பாலும் ஷேர் செய்வது ஏர்.ஆர் ரஹ்மான் வீக்கெண்ட் வித் ஸ்டார்ஸ் என ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தான்.

(2 / 8)

நடிகை சுஹாசினி, ஏ.ஆர்.ரஹ்மான் மனைவியை ஒளித்து வைத்து அவரை காணவில்லை எனக் கூறும் போது, ஒரு ஸ்மெல் வருதுல்ல என தன் மனைவியின் பர்ஃப்யூம் வாசனையை வைத்து அவரைக் கண்டுபிடிப்பார். இதனால். அவர் மனைவி சந்தோஷத்தில் ஷாக் ஆகும் வீடியோவைத் தான் பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில், என் அப்பா இறந்ததற்கு பின் என் வாழ்ககையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டது. ஆனால், இப்போது அது இல்லை. காரணம் என் அழகான குடும்பம் தான். அவர்கள் என்னை புத்துணர்ச்சியாக வைத்திருக்கின்றனர்.

(3 / 8)

என் அப்பா அவருடைய 43வது வயதில் இறந்துவிட்டார். அதனால் எனக்கு இப்போது 40 வயதிற்கு பின் வாழ்வதில் விருப்பம் போய்விட்டது. அனைத்து விஷயங்களிலும் ஆசை போய்விட்டது. இருக்கும் சமயத்தில் எதாவது செய்வோம் என்ற தைரியம் வந்த பின் தான் சில வேலைகளில் இறங்கினேன் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நெருங்கிய பலரும் வந்து அவருடனான நினைவுகளை பகிர்ந்து கொண்டனபர். அந்த வகையில், ஏ.ஆர்.ரஹாமானின் மனைவி சாய்ரா பானுவும் வந்து சில முக்கிய தகவல்களையும், இவர்களுக்குள்ளான பிணைப்பு குறித்தும் பேசினார்.

(4 / 8)

அப்போது பேசிய ஏ.ஆர். ரஹ்மான், நான் அப்போது திருமண லயதில் இருந்தேன். நான் என் மனைவிக்கு நன்றி தெரிவிக்க ஆசைப்படுகிறேன். அவங்க என் வாழ்க்கைக்கு நல்ல துணையாக இருந்தாங்க. அதுமட்டுமல்லாம என் குழந்தைகளுக்கு நல்ல அம்மாவாக இருந்து அவர்களை வளர்த்து வருகிறார் எனக் கூறி நன்றி தெரிவித்தார்.

(5 / 8)

இதையடுத்து, சாய்ரா பானு ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த சில நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். ஏ.ஆர்.ஒரு நல்ல மனிதர். அவர் அற்புதமானவர். அடக்கமானவர். அவர் ஒரு நல்ல தந்தை. மிகவும் இனிமையானவர். நகைச்சுவை குணம் உடையவர், நல்ல அன்பான அப்பா மட்டும் அல்ல, அன்பான கணவரும் கூட. அதுமட்டுமல்ல இந்த உலகத்தின் சிறந்த மகனாக உள்ளார் எனக் கூறினார்.

(6 / 8)

கடைசியில் நல்ல மகன் எனக் குறிப்பிட்டதற்கு ஏ.ஆர். ரஹ்மான் கிண்டலடித்தார். பின் இருவருக்கும் சண்டை நடந்தால் முதலில் யார் மன்னிப்பு கேட்பார் என சுஹாசினி கேட்டார். அப்போது, சிறிது யோசித்து தான் தான் முதலில் மன்னிப்பு கேட்பேன் என சாய்ரா கூறினார். ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் எங்களுக்குள் சண்டையே வராது. ஒரு விஷயத்தை நாம் திரும்பிப் பார்க்கும் போது நாம் தவறு செய்தது தெரிந்தால் நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும். குடும்பத்தில் தன்னோட பெருமை பேசக் கூடாது எனக் கூறினார்.

(7 / 8)

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

(8 / 8)

மற்ற கேலரிக்கள்