உடல் எடையை குறைக்க பட்டினி டயட் பின்பற்றுகிறீர்களா? குறைவாக சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் மோசமான விளைவுகள் இவைதான்
- Weight Loss Tips: அதிகரித்த உடல் எடையை குறைக்க பலரும் தாங்கள் சாப்பிடும் உணவை கட்டுப்படுத்தும் டயட் முயற்சியை மேற்கொள்கிறார்கள். ஆனால் உணவை குறைவாக சாப்பிடுவதால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
- Weight Loss Tips: அதிகரித்த உடல் எடையை குறைக்க பலரும் தாங்கள் சாப்பிடும் உணவை கட்டுப்படுத்தும் டயட் முயற்சியை மேற்கொள்கிறார்கள். ஆனால் உணவை குறைவாக சாப்பிடுவதால் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்
(1 / 7)
உடல் எடையை குறைக்க பலர் உணவை குறைக்கிறார்கள். உணவு சாப்பிடாமல் உடல் எடையை குறைக்க முயற்சித்தால் ஏற்படும் விளைவுகள் மோசமாக இருக்கும். இந்த முறை பின்பற்றினால் உடல் கொழுப்பு குறையாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
(2 / 7)
உணவை முழுவதுமாக குறைத்தால், ஒருவித சமிக்ஞை மூளையை சென்றடைகிறது. இந்த சமிக்ஞை உடலுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை என்பதை உணர்த்தும். பின்னர் உடலின் அனைத்து தசைகளையும் குறிவைத்து பாதிப்பானது ஏற்படும்
(3 / 7)
மூளையின் அறிவுறுத்தல்களின்படி உடல் தசைகளில் சேமிக்கப்படும் ஆற்றல் செலவிடப்படுகிறது. இதன் விளைவாக, தசை இழப்பு விரைவாக தொடங்குகிறது. அதாவது தசைகள் வலுவிழக்க ஆரம்பிக்கும்
(4 / 7)
நீங்கள் நீண்ட நேரம் குறைவாக சாப்பிட்டால், மூளையானது உடல் கொழுப்பு மீது கவனம் செலுத்துகிறது. இது கொழுப்பில் சேமிக்கப்பட்ட ஆற்றலைக் குறைக்க தொடங்குகிறது. அதற்குள் தசைகள் மிகவும் பலவீனமாகிவிடும்(Shutterstock)
(5 / 7)
எனவே நீங்கள் உணவு சாப்பிடுவதை குறைக்கூடாது நீங்கள் கார்போஹைட்ரேட் வகை உணவுகள் அதிகம் சாப்பிடுவதை குறைக்க வேண்டும். மேலும், வறுத்த கொழுப்புகள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்
(6 / 7)
அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். புரதம் சாப்பிடுங்கள். வாழைப்பழம், ஆப்பிள், கொய்யா, பேரிக்காய், எலுமிச்சை போன்ற பழங்களை நீங்கள் தேர்வு செய்யலாம். சோயாபீன்ஸ், முட்டை, மீன் மற்றும் இறைச்சிகள் சாப்பிடலாம்(Unsplash)
(7 / 7)
முடிந்தவரை வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு வெளிப்படுத்துவதன் மூலம் உங்கள் தசைகள் எளிதில் பலவீனமடைவது தடுக்கப்படும். தசைகளை வலுவாக வைத்திருக்க சோயாபீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடுங்கள். மேலும், உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை விரைவுபடுத்துவதற்கு காலையில் எலுமிச்சை தண்ணீரை குடிக்கலாம்
மற்ற கேலரிக்கள்