30 ஆண்டுகளுக்குப் பிறகு சேரும் சனி.. செவ்வாய்.. 3 ராசிகளுக்கு முரட்டு அடி
- Transit of Mars: சனியின் செவ்வாயும் சேர்ந்து கஷ்டம் கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.
- Transit of Mars: சனியின் செவ்வாயும் சேர்ந்து கஷ்டம் கொடுக்கப் போகும் ராசிகளை காண்போம்.
(1 / 6)
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடிய ஒரு சனி பகவான். இவர் எப்போதும் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுப்பார். ஒரு ராசியில் இவர் சஞ்சாரம் செய்ய இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். கர்மநாயகனாக திகழ்ந்துவரும் சனி பகவான் நன்மை தீமைகள் என அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர்.
(2 / 6)
நவகிரகங்களின் தளபதியாக விளங்கக்கூடிய செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை துணிவு, வலிமை, தைரியம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர் 45 நாட்கள் எடுத்துக் கொள்கிறார். இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்க படுகிறது.
(3 / 6)
தற்போது கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வரும் அதே நிலையில் ஒரு மார்ச் மாதம் செவ்வாய் பகவான் கும்ப ராசியில் நுழைகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி மற்றும் செவ்வாய் சேர்க்கின்றனர். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
விருச்சிக ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ உள்ளது. இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்கும் திட்டத்தை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நிகழ்கின்றது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோய்களால் அவதிப்படக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நிதி இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்