ஓட ஓட விரட்டும் செவ்வாய்.. 4 ராசிகளுக்கு கஷ்டம்
- Transit of Mars: செவ்வாய் பகவான் உதயத்தால் கஷ்டத்தை பெறும் ராசிகள் காண்போம்.
- Transit of Mars: செவ்வாய் பகவான் உதயத்தால் கஷ்டத்தை பெறும் ராசிகள் காண்போம்.
(1 / 8)
நவகிரகங்களின் தளபதியாக விளங்க கூடியவர் செவ்வாய் பகவான். இவர் தன்னம்பிக்கை, தைரியம், வீரம், விடாமுயற்சி உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
(2 / 8)
செவ்வாய் பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவானின் ராசி மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் நவகிரகங்களின் பல்வேறு விதமான செயல்பாடுகள் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 8)
அந்த வகையில் செவ்வாய் பகவான் ஜனவரி 17 ஆம் தேதி என்று தனுசு ராசியில் உதயமானார். தற்போது தனுசு ராசியில் பயணம் செய்து வரும் செவ்வாய் பகவான் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி வரை இதே உதய நிலையில் பயணம் செய்கின்றார்.
(4 / 8)
செவ்வாய் பகவானின் உதயத்தால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் ஒரு சில ராசிகள் சிரமப்படும். சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(5 / 8)
ரிஷப ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் உதயமாகி உள்ளார். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பெற்றோர்களுக்காக மருத்துவ செலவு செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மற்ற ஊழியர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 8)
கன்னி ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் உதயமாகின்றார். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிகபட்ச தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மிகவும் தைரியமாக இருக்க வேண்டும். தடைகளில் கடந்து செல்ல மன தைரியம் மிகவும் முக்கியமாகும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
(7 / 8)
விருச்சிக ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் உதயமாகின்றார். செலவுகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க சற்று தாமதமாகும்.
(8 / 8)
மகர ராசி: பல்வேறு விதமான தடைகள் ஏற்படும் உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் 12-வது வீட்டில் செவ்வாய் பகவான் உதயம் ஆகிவிட்டார். வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வசதிகள் குறைய கூடிய சூழ்நிலை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் உண்டாவதற்கான வாய்ப்புகள் அவ்வப்போது கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் எந்த சிக்கல்களும் இருக்காது.
மற்ற கேலரிக்கள்