Wayanad landslides: கேரளாவின் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு..8 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Wayanad Landslides: கேரளாவின் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு..8 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!

Wayanad landslides: கேரளாவின் வயநாட்டில் பயங்கர நிலச்சரிவு..8 பேர் பலி.. மீட்புப் பணிகள் தீவிரம்!

Jul 30, 2024 08:16 AM IST Karthikeyan S
Jul 30, 2024 08:16 AM , IST

  • கேரளாவில் பெய்து வரும் மழையால் வயநாட்டில் கடும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

கேரளாவில் பெய்து வரும் மழையால் வயநாட்டில் கடும் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

(1 / 6)

இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு 2-வதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. அட்டமலையில் இருந்து முண்டகை பகுதியை சென்றடைவதற்கான ஒரே ஒரு பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

(2 / 6)

இதனால், தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர். நிலச்சரிவில் சிக்கி இதுவரை எட்டு பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பலரின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

(3 / 6)

அவசர உதவி தேவைப்படுபவர்கள் 9656938689 மற்றும் 8086010833 ஆகிய இரண்டு எண்கள் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று கேரள அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(4 / 6)

கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (கே.எஸ்.டி.எம்.ஏ) பாதிக்கப்பட்ட பகுதிக்கு தீயணைப்பு மற்றும் என்.டி.ஆர்.எஃப் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கூடுதல் என்.டி.ஆர்.எஃப் குழு வயநாடு செல்லும் வழியில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

(5 / 6)

வயநாடு நிலச்சரிவு மீட்புப்பணிக்காக விமானப்படை விரைந்துள்ளது. கண்ணூர் பாதுகாப்பு படையின் 2 குழுக்கள் வயநாடு விரைந்துள்ளன. சூலூரில் இருந்து விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் வயநாடு விரைந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்