தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Volcano Erupts Near Iceland's Main Airport

ஐஸ்லாந்தில் விமான நிலைய அருகே வெடித்து சிதறும் எரிமலை!

Aug 04, 2022 09:01 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 04, 2022 09:01 PM , IST

கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் எரிமலை ஒன்று வெடித்து முடித்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தென்மேற்கு ஐஸ்லாந்து பகுதியிலுள்ள விமான நிலையம் அருகே புதிய எரிமலை ஒன்று வெடிக்க தொடங்கியுள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஃபக்ராடால்ஸ்பியால் என்ற அழைக்கப்படும் இந்த எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைகுழம்பை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அதன் தலைநகரான ரெய்காவிக்கிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில், கெஃப்லவிக் சர்வதேச விமான நிலையம் அருகே இந்த எரிமலையானது வெடித்துக்கொண்டிருக்கிறது. துயா எரிமலை வகையான இது அழைக்கப்படுகிறது. இந்த வகை எரிமலையானது தடிமனான பனிப்பாறை அல்லது பனிக்கட்டியின் மேற்பரப்பின் வழியாக வெடிக்கும் போது உருவாகும் ஒரு தட்டையான மேல், செங்குத்தான பக்க எரிமலை ஆகும்

(1 / 6)

ஃபக்ராடால்ஸ்பியால் என்ற அழைக்கப்படும் இந்த எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைகுழம்பை பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். ஐஸ்லாந்து நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள அதன் தலைநகரான ரெய்காவிக்கிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில், கெஃப்லவிக் சர்வதேச விமான நிலையம் அருகே இந்த எரிமலையானது வெடித்துக்கொண்டிருக்கிறது. துயா எரிமலை வகையான இது அழைக்கப்படுகிறது. இந்த வகை எரிமலையானது தடிமனான பனிப்பாறை அல்லது பனிக்கட்டியின் மேற்பரப்பின் வழியாக வெடிக்கும் போது உருவாகும் ஒரு தட்டையான மேல், செங்குத்தான பக்க எரிமலை ஆகும்(AP)

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் காட்சியில் இடம்பெறும் எரிமலை குழம்பு தற்போது புதிதாக வெடித்துள்ள எரிமலையாக உள்ளது. கடந்த 2021 மார்ச் முதல் செப்டம்பர் வரை ஆறு மாத காலம் வரை கெஃப்லவிக் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் ஃபக்ராடால்ஸ்பியால் மலைத்தொடரில் எரிமலை ஒன்று வெடித்தது. இதை காண உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து, எரிமலை குழம்பு வடிந்த காட்சியை கண்டு ரசித்தனர்.

(2 / 6)

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் காட்சியில் இடம்பெறும் எரிமலை குழம்பு தற்போது புதிதாக வெடித்துள்ள எரிமலையாக உள்ளது. கடந்த 2021 மார்ச் முதல் செப்டம்பர் வரை ஆறு மாத காலம் வரை கெஃப்லவிக் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் ஃபக்ராடால்ஸ்பியால் மலைத்தொடரில் எரிமலை ஒன்று வெடித்தது. இதை காண உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் குவிந்து, எரிமலை குழம்பு வடிந்த காட்சியை கண்டு ரசித்தனர்.(AFP)

புதிதாக வெடித்து வரும் எரிமலையிலிருந்து அதன் குழம்பு வடிந்து செல்கிறது. இதன் காட்சியை காணலாம்.

(3 / 6)

புதிதாக வெடித்து வரும் எரிமலையிலிருந்து அதன் குழம்பு வடிந்து செல்கிறது. இதன் காட்சியை காணலாம்.(AFP)

எரிமலை குழம்பை பார்க்க வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு ஃபக்ராடால்ஸ்பியால் எரிமலை வெடிப்புக்கு அருகே சென்றுள்ளார்

(4 / 6)

எரிமலை குழம்பை பார்க்க வந்த நபர் ஒருவர் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொண்டு ஃபக்ராடால்ஸ்பியால் எரிமலை வெடிப்புக்கு அருகே சென்றுள்ளார்(AP)

எரிமலை குழம்பு வெளியேறுவதை அங்கு சென்று நேரில் பார்க்கும் பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து தள்ளியுள்ளனர்

(5 / 6)

எரிமலை குழம்பு வெளியேறுவதை அங்கு சென்று நேரில் பார்க்கும் பொதுமக்கள் புகைப்படமாக எடுத்து தள்ளியுள்ளனர்(AP | Marco Di Marco)

எரிமலை வெடிப்பை பார்ப்பதற்காக மலைத்தொடர் மேற்பகுதிக்கு தங்களது சைக்கிள்களில் தூக்கி செல்லும் பொதுமக்கள்

(6 / 6)

எரிமலை வெடிப்பை பார்ப்பதற்காக மலைத்தொடர் மேற்பகுதிக்கு தங்களது சைக்கிள்களில் தூக்கி செல்லும் பொதுமக்கள்(AP / Brynjar Gunnarsson)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்