VJ Kalyani: ‘அவர் கொடுத்த செக்ஸ் டார்ச்சர மறக்கவே முடியாது’ - கல்யாணி த்ரோபேக்!
நான் ஒரு குழந்தையாக அந்த நிகழ்ச்சியில் ஆங்கரிங் செய்திருந்தேன். அதில் கிடைத்த பிரபலம் ‘அள்ளித் தந்த வானம்’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுத் தந்தது. அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சென்னை பட்டினம் எல்லாம் கட்டணம்’ என்ற பாடல் என்னை மிகவும் பிரபலம் ஆக்கியது.
(1 / 5)
கல்யாணி தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை விகே தமிழ் டாக்ஸ் சேனலுக்கு பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
“என்னுடைய அம்மா பரதநாட்டிய கலைஞர். என்னுடைய அப்பா ஒரு ஃபைட்டர் பைலட்டாக இருந்தார். என்னுடைய அப்பா எனது அம்மாவை குடித்துவிட்டு அடித்து துன்புறுத்துவார்.
அதை நான் சிறு வயதில் இருந்தே பார்த்து வளர்ந்ததால் என்னுடைய மனநலமானது, அப்போதிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது. நானும் அம்மாவும் சென்னை வந்தோம். நாங்கள் இருவரும் பரதநாட்டிய கலைஞர்கள் என்பதால் ஒரு நிகழ்ச்சியில் நாங்கள் ஆடினோம்.
(2 / 5)
அதில் ஒருவர் என்னை பார்த்து மிகவும் சுட்டியாக இருக்கிறாள் நிகழ்ச்சி ஒன்றில் ஆங்கராக தொகுத்து வழங்க வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டார். எனது அம்மாவிற்கு கலை சார்ந்த எந்த விஷயங்கள் என்றாலும் மிகவும் பிடிக்கும். அம்மா அதற்கு உடனே ஓகே சொன்னார். ஆனால் அப்பா அதற்கு அனுமதிக்கவில்லை. பின்னர் எப்படியோ சமாளித்து அவரை சம்மதிக்க வைத்து, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
நான் ஒரு குழந்தையாக அந்த நிகழ்ச்சியில் ஆங்கரிங் செய்திருந்தேன். அதில் கிடைத்த பிரபலம் ‘அள்ளித் தந்த வானம்’ திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுத் தந்தது. அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சென்னை பட்டினம் எல்லாம் கட்டணம்’ என்ற பாடல் என்னை மிகவும் பிரபலம் ஆக்கியது.
(3 / 5)
அதன் பின்னர் தொடர்ச்சியாக பல படங்கள், விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் நடித்தேன். அந்த உலகம் முற்றிலும் வேறு விதமாக இருந்தது. ஆனால் வீட்டிற்கு வந்தால் மீண்டும் அப்பா அம்மா சண்டை, மன அழுத்தம் உள்ளிட்டவையாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அம்மா நிறைய முறை தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். அப்பா கொடுத்த டார்ச்சரில் அம்மாவுக்கு அடிக்கடி வலிப்பு வேறு வந்து விடும்.
இந்த நிலையில் தான் இசைக்கலைஞர் ஒருவர் என்னை பாலியல் ரீதியாக என்னை அவர் துன்புறுத்தி வந்தார். இதனை, அம்மாவிடம் எப்படி சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால், அம்மாவின் முன்னால் அந்த நபர், என்னிடம் மிகவும் பாசமாக பழகுவார். என்னுடைய அம்மாவும் அவரை, அவரின் தம்பி போல பாவித்தார். நான் இந்த விஷயத்தை, எனது அம்மா இறக்கும் வரை அவரிடம் சொல்லவே இல்லை. எனக்கு நண்பர்களே கிடையாது எனக்கு உலகமே என்னுடைய அம்மா தான்.
(4 / 5)
இந்த நிலையில் தான் ஒரு 21 வயதில் என்னுடைய அம்மா என்னை திருமணம் செய்து கொள்ளச் சொன்னார். நானும் திருமணம் செய்து கொண்டேன். எனது கணவரிடம் எனது அம்மாவிற்கும், எனக்குமான உறவை எடுத்துச் சொல்லி, அம்மா வீட்டின் அருகிலேயே நாங்கள் குடி பெயர்ந்தோம்.
என்னுடைய அம்மாவிற்கு ஒரு நோய் ஒன்று இருந்தது. அந்த நோயின் காரணமாக, அவர் மன அழுத்தத்தில் இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் அவர் தன்னுடைய அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயத்தில் தான் மன அழுத்தம் என்று ஒரு நோய் என்னை பீடித்துக் கொண்டது.
(5 / 5)
நாங்கள் அப்படியே பெங்களூருக்கு மாறி விட்டோம். திடீரென்று ஒரு நாள் என்னால் எழுந்திருக்க முடியாமல் போனது. என்னுடைய கால் இருப்பதையே என்னால் உணர முடியவில்லை. என்னுடைய கணவர் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்றபோது, எனக்கு ஒரு பெரிய ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். அதன்படி எனது முதுகில் மிகப்பெரிய ஆபரேஷன் செய்தார்கள்.
அதனைத்தொடர்ந்து நாங்கள் வெளிநாடு சென்று விட்டோம் அங்கும் எனக்கு மனரீதியான அழுத்தங்கள் இருந்தன. காரணம், அங்கு எனக்கு உதவி செய்வதற்கு யாருமே கிடையாது. ஒரு கட்டத்தில் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.
அந்த தற்கொலை வாயிலாக சில கசப்பான விஷயங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடந்தன.அந்த கசப்பான சம்பவங்கள் என்னை மீண்டும் சென்னைக்கு வர வைத்தது. இப்போது நான் மன அழுத்தத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு, ஒரு குழுவுடன் இணைந்து உதவி செய்து வருகிறேன்.பிற நோய்களுக்கு எப்படி நாம் மருத்துவமனையை அணுகுகிறோமோ அதே போல மனநல பிரச்சனைகளுக்கும் நாம் மருத்துவமனையை அணுகலாம் அதில் எந்த தவறுமே கிடையாது
மற்ற கேலரிக்கள்