Visuvavasu Varudam : விசுவாவசு தமிழ் புத்தாண்டின் பொது பலன்கள்.. ஆற்காடு பஞ்சாங்கம் சொல்வது என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Visuvavasu Varudam : விசுவாவசு தமிழ் புத்தாண்டின் பொது பலன்கள்.. ஆற்காடு பஞ்சாங்கம் சொல்வது என்ன?

Visuvavasu Varudam : விசுவாவசு தமிழ் புத்தாண்டின் பொது பலன்கள்.. ஆற்காடு பஞ்சாங்கம் சொல்வது என்ன?

Published Mar 05, 2025 06:40 AM IST Stalin Navaneethakrishnan
Published Mar 05, 2025 06:40 AM IST

  • விசுவாவசு ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி பிறக்கப் போகிறது. பல இயற்கை பேரழிவுகள், எச்சரிக்கைகளை முன்கூட்டியே கணித்த, ஆற்காடு சீதாரமய்யர் எழுதிய ஆற்காடு பஞ்சாங்கத்தின் படி, விசுவாவசு வருடம் எப்படி இருக்கப் போகிறது? அதன் பொது பலன்கள் இதோ

‘விசுவாவசு வருடம் வேள்ளாண்மை யேறும்பசு ஆடு மழை பலிக்கும்- சிசுநாசம்மற்றையரோ வாழ்வார்கள் மாதவங்கண் மீறுமேஉற்றுலகி னல்மழை யுண்டு’ என்று இடைக்காடர் சித்தர், வெண்பா பாடலில் பாடியுள்ளார். அப்படியென்றால் அதற்கு அர்த்தம் என்ன?

(1 / 8)

‘விசுவாவசு வருடம் வேள்ளாண்மை யேறும்

பசு ஆடு மழை பலிக்கும்- சிசுநாசம்

மற்றையரோ வாழ்வார்கள் மாதவங்கண் மீறுமே

உற்றுலகி னல்மழை யுண்டு’ என்று இடைக்காடர் சித்தர், வெண்பா பாடலில் பாடியுள்ளார். அப்படியென்றால் அதற்கு அர்த்தம் என்ன?

இந்த ஆண்டின் ஆதாயம் 65, விரயம் 59, லாபம் 6 என்று ஆற்காடு பஞ்சாகத்தில் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் உணவு உற்பத்தி மிக அதிக அளவில் குறையும். அணுஆயுத உற்பத்தி அதிகரிக்கும்.

(2 / 8)

இந்த ஆண்டின் ஆதாயம் 65, விரயம் 59, லாபம் 6 என்று ஆற்காடு பஞ்சாகத்தில் கணிக்கப்பட்டுள்ளது. உலகின் உணவு உற்பத்தி மிக அதிக அளவில் குறையும். அணுஆயுத உற்பத்தி அதிகரிக்கும்.

(Pexel)

இரும்பு, எஃகு தடவாளங்களின் உற்பத்தி அதிகரிக்கும். விமான போக்குவரத்தில் பல அதிநவீன மாற்றங்களை ஏற்படுத்தும். எரிவாறு உற்பத்தியும் அதன் விலையும் அதிகரிக்கும்.

(3 / 8)

இரும்பு, எஃகு தடவாளங்களின் உற்பத்தி அதிகரிக்கும். விமான போக்குவரத்தில் பல அதிநவீன மாற்றங்களை ஏற்படுத்தும். எரிவாறு உற்பத்தியும் அதன் விலையும் அதிகரிக்கும்.

மருத்துவத்தில் இந்தியா தனித்தன்மையை எட்டும். மழை அதிகம் பெய்யும். இருப்பினும், குடிநீர் பற்றாக்குறை, தேவை அதிகரிக்கும். அடிக்கடி மின்தடை ஏற்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். 

(4 / 8)

மருத்துவத்தில் இந்தியா தனித்தன்மையை எட்டும். மழை அதிகம் பெய்யும். இருப்பினும், குடிநீர் பற்றாக்குறை, தேவை அதிகரிக்கும். அடிக்கடி மின்தடை ஏற்படும். போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும். 

(Pexel)

புதிய வகை வாகனங்கள் புழக்கத்தில் வரும். தானியியங்கி வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து, பயன்பாட்டிற்கு வரும். குற்றங்கள் அதிகரிக்கும். 

(5 / 8)

புதிய வகை வாகனங்கள் புழக்கத்தில் வரும். தானியியங்கி வாகனங்களின் உற்பத்தி அதிகரித்து, பயன்பாட்டிற்கு வரும். குற்றங்கள் அதிகரிக்கும். 

(Pexel)

கோயில் சொத்துக்கள் மீட்கப்படும். ஆன்மிக வளர்ச்சி அதிகரித்தாலும், ஆன்மிகத்தில் இருப்பவர்களுக்கு பலத் தொல்லைகள் உண்டாகும். 

(6 / 8)

கோயில் சொத்துக்கள் மீட்கப்படும். ஆன்மிக வளர்ச்சி அதிகரித்தாலும், ஆன்மிகத்தில் இருப்பவர்களுக்கு பலத் தொல்லைகள் உண்டாகும். 

(Pexel)

அறநிலையத் துறையில் நிறைய கட்டுப்பாடுகள் உண்டாகும். கால்நடைகள் அதிகரிக்கும், நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படும்.

(7 / 8)

அறநிலையத் துறையில் நிறைய கட்டுப்பாடுகள் உண்டாகும். கால்நடைகள் அதிகரிக்கும், நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்படும்.

(Pexel)

குறிப்பு: இவை அனைத்தும் ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொது பலன்கள் ஆகும். இதன் உண்மை தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்  பொறுப்பாகாது. இதை நம்புவதும், செயல்படுத்துவம் தனிநபர் விருப்பத்தின் அடிப்படையை சார்ந்தது மட்டுமே. 

(8 / 8)

பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்