HBD Virat Kohli: 'சும்மாவே காட்டு காட்டுனு காட்டுவாரு'-இன்னிக்கு பிறந்த நாள் வேற! தரமான சம்பவம் காத்திருக்கு..
IND vs SA: இந்திய அதிரடி நாயகன் விராட் கோலியின் பிறந்த நாள் இன்று.
(1 / 7)
பிறந்தநாளில் உலகக் கோப்பை போட்டி விளையாடுவதென்பது ஸ்பெஷல் தருமணம். அதுவும் சுமார் ஒரு லட்சம் பேரை வரை அமர்ந்து பார்க்ககூடிய உலகின் பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக இருக்கும் ஈடன் கார்டனில் களமிறங்கி விளையாட இருப்பது விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த தருணமாகவே இருக்கும். (Photo by DIBYANGSHU SARKAR / AFP)(AFP)
(2 / 7)
இந்த சூழ்நிலையுடன் தனது 35வது பிறந்தநாளில் உலகக் கோப்பை 2023 தொடரில் தென் ஆப்பரிக்காவுக்கு எதிரான போட்டியில் களமிறங்குகிறார் கோலி. (Photo by DIBYANGSHU SARKAR / AFP)(AFP)
(3 / 7)
உள்ளூர் கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடி வந்த கோலி , தோனி கேப்டன்சியில் ஒரு நாள் போட்டியில் முதன் முதலாக அறிமுகமானார். (ANI Photo)(Sudipta Banerjee)
(4 / 7)
அணியில் அறிமுகமான புதிதிலிருந்து தனது ஆக்ரோஷ ஆட்டத்தால் கவனம் ஈர்த்து வந்த கோலி சாதனைகளின் மன்னாகவும், ரன் மெஷினாகவும் இன்று வரை ஜொலித்து வருகிறார். (ANI Photo)(Sudipta Banerjee)
(5 / 7)
ஒரு நாள் போட்டியில் கன்சிஸ்டன்ட் மிக்க வீரராக இருந்து வரும் கோலி, அதிவேகமாக 8, 9, 10 மற்றும் 11 ஆயிரம் ரன்களை கடந்த வீரராக இருந்துள்ளார். இந்த சாதனைகளை முறையே 175, 194, 205 மற்றும் 222 ஆகிய இன்னிங்ஸில் செய்துள்ளார்.REUTERS/Andrew Boyers(REUTERS)
(6 / 7)
சேஸ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் கோலி தனது 48 சதங்களில் 26 சதங்களை சேஸிங்கின் போது எடுத்துள்ளார். இது ஒரு தனித்துவ சாதனையாகவே உள்ளது. டெஸ்ட், ஒரு நாள், டி20 ஆகிய மூன்று வகை போட்டிகளிலும் 50க்கு மேல் சராசரி வைத்திருக்கும் ஒரே பேட்ஸ்மேன் கோலிதான் (Photo by Samir Jana/ Hindustan Times)(Hindustan Times)
மற்ற கேலரிக்கள்