7வது ஆண்டில் அடியெடுத்து வைத்த கோலி - அனுஷ்கா ஜோடி.. ஜோக்கில் பூத்த காதல் கதை! முன்மாதிரியாக திகழும் ஸ்டார் தம்பதி
- Virat Kohli Anushka Sharma: இந்தியாவின் நட்சத்திர ஜோடியாக இருந்து வரும் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா இன்று தங்களது 7வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்
- Virat Kohli Anushka Sharma: இந்தியாவின் நட்சத்திர ஜோடியாக இருந்து வரும் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா இன்று தங்களது 7வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். ரசிகர்கள் பலரும் இந்த தம்பதிகளுக்கு வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்
(1 / 8)
இந்திய கிரிக்கெட்டின் ஸ்டாராக இருந்து வரும் விராட் கோலி, பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா ஷர்மா ஆகியோர், டிசம்பர் 11, 2017இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது. சிறந்த ஸ்டார் ஜோடிகளாக இவர்கள் இருவரும் பல்வேறு விஷயங்களை அனைவரையும் கவர்ந்துள்ளனர்
(2 / 8)
ஃபேஷன் ஆகட்டும், பிட்னஸ் ஆகட்டும் கோலி - அனுஷ்கா ஜோடி பலருக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்துள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் சில வாழ்க்கை முறை பழக்கங்களாலும் முன்மாதிரியாக திகழ்கிறார்கள்
(3 / 8)
இந்த ஜோடியின் திருமணம் இத்தாலியில் இருவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்க கோலகலமாக நடைபெற்றது. திருமணத்துக்கு பின்னர் தற்போது இரு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகியுள்ளனர்
(4 / 8)
2013இல் பிரபல ஷாம்பூவின் விளம்பர ஷுட்டிங்கின் போது கோலி - அனுஷ்கா ஆகியோர் முதல் முறையாக சந்தித்துள்ளனர். இருவரும் அப்போது தங்களது துறைகளில் தங்களது பெயரை முத்திரை பதித்திருந்தனர்
(5 / 8)
பாலிவுட் நடிகையான அனுஷ்காவை பார்த்து நடுங்கிய கோலி, ஜோக் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். அவரது சொன்ன ஜோக்கால் அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரிக்க மொத்த யுனிட்டும் சிரப்பலைில் சிக்கியது. இந்த ஜோக் தான் கோலி - அனுஷ்காவை ஜோடியாக்கியது
(6 / 8)
இந்த விளம்பர ஷுட்டிங்குக்கு பிறகு கோலி - அனுஷ்கா இடையே பழக்கம் ஏற்பட்டது. 2014இல் தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் முடித்த பிறகு அனுஷ்கா வீட்டுக்கு சென்று அவரை சந்தித்துள்ளார் கோலி
(7 / 8)
2015இல் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சதமடித்த கோலி, அந்த போட்டியை காண வந்த அனுஷ்காவுக்கு பிளையிங் கிஸ் பறக்கவிட்டார். இதை கண்டு ஒட்டு மொத்த ஸ்டேடியமும் அதிர்ந்தது. இந்த சமயத்தில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை
மற்ற கேலரிக்கள்