Vinesh Phogat Disqualified: பறிபோனது பதக்க கனவு! ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்! பேரிடி!-vinesh phogat disqualified from historic paris olympic gold medal bout - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Vinesh Phogat Disqualified: பறிபோனது பதக்க கனவு! ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்! பேரிடி!

Vinesh Phogat Disqualified: பறிபோனது பதக்க கனவு! ஒலிம்பிக் போட்டியில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம்! பேரிடி!

Aug 07, 2024 01:26 PM IST Kathiravan V
Aug 07, 2024 01:26 PM , IST

  • Vinesh Phogat Disqualified: 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்

Vinesh Phogat Disqualified: பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

(1 / 7)

Vinesh Phogat Disqualified: பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்த பிரிவில் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள இந்திய வீராங்கனை வினேஷ் போகல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 50 கிலோ எடை பிரிவில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதால் ஒலிம்பிக் விதிப்படி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.(HT_PRINT)

இந்த சம்பவம் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி பதக்கம் வெல்லும் என்ற கனவுடன் காத்திருந்த இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

(2 / 7)

இந்த சம்பவம் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணி பதக்கம் வெல்லும் என்ற கனவுடன் காத்திருந்த இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. (HT_PRINT)

இந்திய வீராங்கணை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்க பதக்கம் அமெரிக்க வீரங்கனை சாராவுக்கு வழங்கப்படும் என்றும், வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்றும் 2 பேருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. 

(3 / 7)

இந்திய வீராங்கணை தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் தங்க பதக்கம் அமெரிக்க வீரங்கனை சாராவுக்கு வழங்கப்படும் என்றும், வெள்ளி பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது என்றும் 2 பேருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்படும் என்றும் ஒலிம்பிக் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. (HT_PRINT)

இன்று காலை 100 கிராம் அளவுக்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டது. விதிகள் இதை அனுமதிக்காது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று இந்திய பயிற்சியாளர் கூறி உள்ளார். 

(4 / 7)

இன்று காலை 100 கிராம் அளவுக்கு உடல் எடை அதிகரித்து காணப்பட்டது. விதிகள் இதை அனுமதிக்காது, அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்" என்று இந்திய பயிற்சியாளர் கூறி உள்ளார். (HT_PRINT)

"மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரவு முழுவதும் அணியின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை எடை பார்க்கும் ப்பொது 50 கிலோவுக்கு மேல் எடை கொண்டிருந்தார். இந்த நேரத்தில் குழுவினரால் மேற்கொண்டு எந்த கருத்தும் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. கையில் உள்ள போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது"  என இந்திய மல்யுத்த அணி வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

(5 / 7)

"மகளிர் மல்யுத்த போட்டியில் 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரவு முழுவதும் அணியின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை எடை பார்க்கும் ப்பொது 50 கிலோவுக்கு மேல் எடை கொண்டிருந்தார். இந்த நேரத்தில் குழுவினரால் மேற்கொண்டு எந்த கருத்தும் தெரிவிக்கப்படாது. வினேஷின் தனியுரிமையை மதிக்க வேண்டும் என்று இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. கையில் உள்ள போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது"  என இந்திய மல்யுத்த அணி வெளியிட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. (PTI)

இந்தியாவின் புகழ்பெற்ற போகத் மல்யுத்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வினேஷ் போகத். தனது உறவினர்களான கீதா போகத் மற்றும் பபிதா குமாரி ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மல்யுத்து விளையாட்டில் தனக்கென தனித்த இடத்தையும் பிடித்துள்ளார்.

(6 / 7)

இந்தியாவின் புகழ்பெற்ற போகத் மல்யுத்த குடும்பத்திலிருந்து வந்தவர் தான் வினேஷ் போகத். தனது உறவினர்களான கீதா போகத் மற்றும் பபிதா குமாரி ஆகியோரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி மல்யுத்து விளையாட்டில் தனக்கென தனித்த இடத்தையும் பிடித்துள்ளார்.(PTI)

2014இல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 48 கிலோ பிரிவில் தனது முதல் பெரிய சர்வதேச பட்டத்தை வென்றார் வினேஷ் போகத். இஸ்தான்புல்லில் நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் வென்ற பின்னர் 2016 ரியோ ஒலிப்பிக்கில் தனது ஒலிம்பிக் விளையாட்டின் பயணத்தை தொடங்கினார்.

(7 / 7)

2014இல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 48 கிலோ பிரிவில் தனது முதல் பெரிய சர்வதேச பட்டத்தை வென்றார் வினேஷ் போகத். இஸ்தான்புல்லில் நடந்த ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் வென்ற பின்னர் 2016 ரியோ ஒலிப்பிக்கில் தனது ஒலிம்பிக் விளையாட்டின் பயணத்தை தொடங்கினார்.(PTI)

மற்ற கேலரிக்கள்