Baakiyalakshmi serial: போட்டியில் கருகிய கேக்.. பதறிய கோபி.. போலீசிடம் சிக்கிய இனியா - பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!
Baakiyalakshmi serial: செழியனுக்கு போன் அடித்து கேட்க, அவன் என்ன செய்வது என்று தெரியாமல், பாக்யாவிடம் இனியாவை அழைத்து வந்து விட்டதாக கூறினான். அடுத்தது என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். - பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!
(1 / 5)
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பாக்கிய லட்சுமியும், கோபியும் சென்னையின் சிறந்த உணவு என்ற தலைப்பிலான போட்டியில் பங்கேற்கின்றனர். இந்த போட்டியில் பாக்யாவை எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று முடிவெடுத்த கோபி, சமையலுக்காக ஸ்பெஷல் சமையல் கலைஞரை வரவழைத்து இருந்தார்.
இதைக்கண்டு முதலில் பாக்யா டீம் அதிர்ச்சியானாலும், அதன் பின்னர் தன்னம்பிக்கையோடு போட்டியை எதிர்கொண்டனர்.
(2 / 5)
இறுதி போட்டியில், கோபி டீம் கேக் செய்வதாக சொல்ல, பாக்யா பன்னா கொட்டா செய்வதாக சொன்னாள். இதற்கிடையே, பிறந்தநாள் பார்ட்டிக்கு போகிறேன் என்று சொன்ன இனியாவை நினைத்து பயந்த பாக்யா, அவளுக்கு போன் செய்தாள். பார்ட்டியில் இருந்த பாடலின் சத்தத்தின் காரணமாக, போனை இனியா எடுக்கவில்லை.
இந்த நிலையில், செழியனுக்கு போன் செய்து என்னாச்சு, ஏன் இனியா போன் எடுக்க வில்லை என்று பாக்யா பதற, செழியனோ தான் அவளின் நண்பி வீட்டு முன்னர்தான் நிற்கிறேன். பயப்பட வேண்டாம் என்று சொல்கிறான். கூடவே, தான் போன் அடித்தும் இனியா போன் எடுக்கவில்லை என்று கூறினான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாக்யா, உடனே வீட்டிற்குள் சென்று பார்க்குமாறு கூற, அவன் உள்ளே சென்று பார்த்த போது, அங்கு யாருமே இல்லை என்பது தெரிய வந்தது.
(3 / 5)
இதனையடுத்து, செழியனும் பதறுகிறான். இந்த நிலையில், பார்ட்டியில் இருந்த இனியா செல்போனை பார்த்த போது, அதில் அம்மாவும், அண்ணனும் மாறி, மாறி போன் அடித்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து, பப்பின் வெளியே வந்து பேசலாம் என்று இனியா வெளியே வந்த போது, அங்கு அவருடன் வந்த நண்பர்கள் சண்டை போட்டுக்கொண்டு இருந்தனர். இதனையடுத்து மேனஜர் போலீசுக்கு போன் செய்து வர சொல்கிறான். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இனியாவும், அவரது நண்பர்களும் போலீஸ் வேண்டாம் என்று சொல்லி கெஞ்சுகின்றனர்.
(4 / 5)
இதற்கிடையே, கோபி வைத்த கேக் கருகி போனது. இது ஒரு பக்கம் பாக்யா டீமிற்கு சந்தோஷத்தை கொடுத்தாலும், பாக்யா இனியாவை நினைத்து பதறிக்கொண்டே இருந்தார்.
மற்ற கேலரிக்கள்