சீனாவில் 40 ஆயிரம் திரையரங்குகளில் வெளியான மகாராஜா! ஆயிரம் கோடியைத் தாண்டுமா?
- தமிழில் கடந்த ஜீன் மாதம் விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
- தமிழில் கடந்த ஜீன் மாதம் விஜய் சேதுபதி மற்றும் அனுராக் காஷ்யப் நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது.
(1 / 6)
நடிகர் விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக வெளியான மகாராஜா, தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் திரையரங்குகளில் நீண்டகாலமாக ஓடியது.
(2 / 6)
குரங்கு பொம்மை என்ற படத்தின் மூலம் வித்தியாசமான கதைக்களத்துடன் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கிய திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படம் கடந்த ஜூன் மாதம் பல திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மனதை கவர்ந்தது.
(3 / 6)
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அனுராக் காஷ்யப் ஆகியோருடன் நடிகைகள் திவ்யபாரதி, மம்தா மோகன் தாஸ் சாச்சனா ஆகியோரும் நடித்திருந்தனர். மேலும் நட்டி, முனிஸ் கான்சிங்கம்புலி ,பாரதிராஜா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
(4 / 6)
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகி இருந்தது. இந்த திரைப்படம் எதிர்பாராத திருப்பங்களுடன் சுவாரசியமாக அமைந்த காரணத்தால் ரசிகர்களின் மனதை எளிதாக கவர்ந்தது.
(5 / 6)
ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான மகாராஜா திரைப்படம் முதல் நாளிலிருந்து வசூலை அள்ளிக் குவிக்க தொடங்கியது. மேலும் ஒட்டுமொத்தமாக இத்திரைப்படம் ரூ. 100 கோடியை தாண்டி வசூல் ஆனது. திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகியோர் இயக்குனரை பாராட்டி இருந்தனர். மேலும் இந்த திரைப்படத்தில் அதிக வசூல் பெற்று தந்ததற்காக பட குழுவினர் இயக்குனர் சாமி நாதனே அழைத்து அவருக்கு ஒரு சொகுசு காரை பரிசாக அளித்து இருந்தனர்.
(6 / 6)
தற்போது மகாராஜா திரைப்படத்தை சீன மொழியில் டப் செய்து சீனாவில் இன்று வெளி வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் சீனாவில் 40 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் உரிமையை அலிபாபா குழுமம் பெற்றிருந்தது .மேலும் இத்திரைப்படத்தின் பிரிவ்யூ ஷோவை பார்த்த சீன ரசிகர்கள் திரையரங்குகளில் அழுததாக சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
மற்ற கேலரிக்கள்